சென்னையில் விசாரணை கைதி மரணம் - சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சென்னையில் விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இந்தியாவில் முதல் முதலாக பயணிகள் விமானம் தயாரித்து இயக்குவது மோதி அரசுதானா? உண்மை என்ன?

  2. "என் குழந்தை இந்தியாவில் பொறக்கட்டும்" - அகதியாக தஞ்சம் கோரி வந்த இலங்கை கர்ப்பிணி கண்ணீர்

  3. முக்கிய தாக்குதல் இலக்குகளை அடையாளம் காண்கிறது ரஷ்யா: யுக்ரேன்

    ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டின் கிழக்கில் தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் யுக்ரேன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மூட்டிஸானிக் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "[ரஷ்யப் படைகள்] துப்பாக்கிச் சூட்டின் தன்மை, ராணுவ பிரிவுகளின் அமைப்பு மற்றும் குறிப்பிட்ட திசைகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்" ஆகியவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.

    இஸியம் - பார்வின்கோவ் திசையிலும், போபசானா, செவெரோடோனெட்ஸ், மேரியுபோல் மற்றும் ஸஃபோரிஸியா - டோன்யெட்ஸ் சாலையில் மிகத் தீவிரமாக ரஷ்ய நடமாட்டம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். கருங்கடலில் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஒருங்கிணைந்த சால்வோ 16 ஏவுகணைகள் உள்ளது என்றும் யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    யுக்ரேன் - ரஷ்யா
  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, மாஸ்கோவில் புதினை சந்திக்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர்

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க ஐ.நா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் முடிவு செய்துள்ளார்.

    இவர்கள் இருவரின் சந்திப்பு வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த சந்திப்பின்போது அன்டோனியோ கூட்டெரெஷ் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செரகே லாவ்ரோஃபுடன் மதிய உணவு அருந்தவும் திட்டமிட்டுள்ளார்.

  5. டெல்லியில் மோதி-போரிஸ் சந்திப்பின் முக்கிய ஹைலைட்ஸ் - இவர்களின் அடுத்த திட்டம் என்ன?

  6. சென்னையில் விசாரணை கைதி மரணம் - சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

    விசாரணை கைதி மரணம்

    பட மூலாதாரம், Getty Images

    சென்னையில் விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட உத்தரவில், “விக்னேஷ் (எ) விக்னா என்ற விசாரணை கைதி இறந்தது தொடர்பாக 19.04.2022 அன்று ஜி-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய குற்ற எண்.19.04.2022 ச/பி 176 குவிமுச-வில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

    எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் 19.04.2022 அன்று மாலை 06:25 மணியளவில் ஜி5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையம் வந்து சுரேஷ் என்கிற ஜொள்ளு சுரேஷ் என்பவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    20.04.2022 அன்று எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் பிரேத விசாரணைக்குப் பின்னர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ குழுவால் வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அனைத்து வழிகாட்டுதல்களும் பிரேத பரிசோதனையின்போது பின்பற்றப்பட்டன. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் உடல் அவரது அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு 20.04.2022 அன்று மாலை ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விக்னேஷ் மரணம் சம்பந்தமாக மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கீழ்ப்பாக்கம் மாவட்ட காவல் துணை ஆணையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை விவரம், அதோடு துறை விசாரணை அறிக்கையும் பெறப்பட்டது.

    இதுதொடர்பாக,பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஜி-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய காவலர் 50311 பொன்ராஜ் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் 5019 ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வழக்கு மேல் விசாரணைக்காக காவல்துறை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு (சிபிசிஐடி) மாற்றம் செய்து இன்று உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. கோடநாடு வழக்கு: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா

    "கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" -வி.கே. சசிகலா

    சசிகலா
  8. நியாயவிலை கடைகளில் மீண்டும் பிரதமர் மோதி படம் – பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன்

    பாஜக - பிரதமர் நரேந்திர மோதி

    நியாயவிலை கடைகளில் மீண்டும் பிரதமர் மோதி படம் வைக்கப்படும் என, மாநில பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    அவர் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் பேரிடர் ஊரடங்கு காலத்தில் கூட ஒரு பட்டினிச்சாவு இல்லை. கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு நியாயவிலை கடைகளுக்கு ஒரு கோடியே 15 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 4 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள நியாயவிலை கடைகளில் பிரதமர் மோதி படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி காமராஜபுரம் நியாயவிலை கடையில் மோதி படத்தை கொண்டு சென்ற பாஜக மண்டல் தலைவர் பரமசிவன், திமுக கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார்.

    அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோதி போன்ற தலைவர்களின் படத்தை வைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரமசிவம் மீண்டும் வந்தவுடன் அந்த வார்டில் உள்ள 5 நியாயவிலைக் கடைகளிலும் மீண்டும் நரேந்திர மோதி படத்தை மாவட்ட தலைவர் உடன் சென்று அவர் வழங்குவார். மறுத்தால் நான் வருவேன். என்னை தடுத்தால் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவார். அடக்குமுறை மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இயலாது" என தெரிவித்தார்.

  9. "தமிழகத்தில் கொரோனா பரவ இவர்களே காரணம்" - அமைச்சர் கருத்தும் 5 கேள்விகளும்

  10. சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ்: தோனியின் ஆட்டம் குறித்து பிபிசியிடம் பேசிய ரசிகர்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களை துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக - அண்ணாமலை

    அண்ணாமலை

    பட மூலாதாரம், @annamalai_k

    செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "செயற்கையாக மின்பற்றாக்குறையை உருவாக்கி மக்களைத் துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தைக் கண்டறிந்து முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா

    சசிகலா

    பட மூலாதாரம், Getty Images

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, சசிகலா வெளியிட்ட அறிக்கையில், "கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறேன். முழுமையான அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன்.

    கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவை என் அக்கா அவர்கள் (ஜெயலலிதா) மிகவும் நேசித்த இடம், அவர்களுக்கு நிறைய மன அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொருத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள்.

    இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது. அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவர் தாயும் பலியாகி உள்ளனர்.

    எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

    இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  13. இலங்கை போராட்ட களத்தில் ஆடல், பாடல் ஏன்? - விளக்கும் இளைஞர்கள்

  14. டிப்ளமோ படித்த இளைஞரின் அசத்தலான பேட்டரி சைக்கிள் கண்டுபிடிப்பு

    "என்னோட பேட்டரி சைக்கிள் யோசனையை கல்லூரி பேராசிரியர் 'வேஸ்ட்டுனு' சொல்லி அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாரு. ஆனா, நா கண்டிப்பா ஒருநாள் பேட்டரி சைக்கிள் உருவாக்குவேன்னு வைராக்கியத்தோட இருந்தேன்." - இலக்கை எட்டிப்பிடித்த தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு

  15. ஆட்டிசம்: முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

    ஆளுநர் ஆர்.என்.ரவி

    ஆட்டிசத்திற்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் அதிகமாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம். பேச்சு பயிற்சி, மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு போன்றவை மூலம் ஆட்டிசத்தை குணப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆட்டிசம் குறித்து நமக்கு மிகப்பெரிய விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.

    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கு தனி அறிவு வேண்டும். எனவே, பெற்றோர்களுக்கு பயிற்சியும் ஆலோசனைகளை வழங்க வேண்டியதும் அவசியம்" என தெரிவித்தார்.

  16. ராமஜெயம் கொலை வழக்கு: விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம் - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

    ராமஜெயம் கொலை வழக்கு

    பட மூலாதாரம், K.N.RAMAJAYAM WELFARE ASSOCIATION TRICHY

    படக்குறிப்பு, ராமஜெயம்

    திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம் என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதியன்று தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியில் சென்ற ராமஜெயம், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்களின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக்கூறி, மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, சீலிடப்பட்ட உறையில் வைத்து ரகசிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    தொடர்ந்து வாதிட்ட அசன் முகமது ஜின்னா, "இந்த வழக்கில் 43 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது புதிதாக துப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதனால் எந்த நேரத்திலும் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம்" என்றார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அப்போது உயர் அதிகாரியாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக ஏற்கெனவே ஆறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு நீதிபதி பாரதிதாசன் ஒத்திவைத்தார்.

  17. தமிழ்நாட்டில் மின் தடை ஒரு செயற்கைத் தட்டுப்பாடா? செந்தில் பாலாஜி விளக்கமும் 3 கேள்விகளும்

  18. இலங்கையில் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற்ற லிட்ரோ நிறுவனம்

    இலங்கையில் சிலிண்டர் விலை உயர்வு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இலங்கையில் சிலிண்டர் விலை உயர்வை லிட்ரோ நிறுவனம் திரும்ப பெற்றது.

    முன்னதாக, இலங்கையில் இன்று (ஏப். 22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்து லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.

    12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையை 2,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,175 ரூபா என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்த போதிலும் , விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

    இதையடுத்து, அறிவிக்கப்பட்ட சிலிண்டர் விலை உயர்வை லிட்ரோ நிறுவனம் திரும்ப பெற்றது. அமைச்சரவை முடிவுக்குப் பின்னரே சிலிண்டர் விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  19. நாசமாகும் பூச்சி இனம்; காத்திருக்கும் பேராபத்து - ஆய்வாளர்கள் எச்சரிக்கை

    காலநிலை மாற்றம் மற்றும் கடுமையான விவசாயத்தால் உலகின் பல பகுதிகளில் பூச்சியினங்கள் பாதியளவு குறைந்துவிட்டதாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதனை விளக்கும் காணொலி:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. 2013 மரக்காணம் கலவர வழக்கு: பாமகவினர் 20 பேர் விடுதலை

    மரக்காணம் கலவர வழக்கு

    2013ஆம் ஆண்டு மரக்காணத்தில் பாமகவினருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 25ஆம் தேதியன்று வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இளைஞர் சங்க மாநாட்டுக்கு சென்ற பாமக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக மாறியது.

    இதில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளை அடித்து நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள், அப்பகுதியில் இருந்த வீடுகள் என அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. அரசுப் பேருந்துகள் உட்பட சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இதில், அரசு பேருந்துகளை கொளுத்தியது தொடர்பாக, மரக்காணம் காவல்துறையினர் பாமகவினர் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2 நீதிபதி சுதா முன்பு நடைபெற்று வந்தது. அதில் 34 பேரில் 14 பேர் விடுவிக்கப்பட்டு 20 பேர் மீது வழக்கு நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சுதா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்ற நீதிபதி சுதா உத்தரவிட்டார்.