ஏழு பேர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய கோப்பு - தமிழ்நாடு அரசு புதிய தகவல்

எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. யுக்ரேன் ராணுவதி தளபதி உருக்கம் - 'இதுவே கடைசி செய்தி'

    யுக்ரேன் போர்

    பட மூலாதாரம், EPA

    யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுக்ரேன் ராணுவத்தினர் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடு முடிந்தும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

    இந்நிலையில், யுக்ரேன் மேரியோபோலில் உள்ள 36வது கடற்படைத் தளபதி செர்ஹி செர்வேலி வெளியிட்டுள்ள வீடியோவில், "எங்களிடம் போர்க் கருவிகள், பொருட்கள் குறைவாக உள்ளன. ஆனால், எங்கள் மக்களுக்கு மன உறுதி அதிகமாக இருக்கிறது.

    ஆனால், ரஷ்ய படை எங்களை விட பன்மடங்கு பெரிதாக இருக்கிறது. அவர்கள் வான்வெளியிலும் தரையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே, உலகத்திற்கு இதுவே எங்கள் கடைசி செய்தியாகவும் இருக்கலாம்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

  2. வணக்கம் நேயர்களே

    வணக்கம், இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    நேற்றைய முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • இலங்கை தங்காலை கால்டன் பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்குவார்களாயின், ஜனாதிபதி பதவி விலக தயார் என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர் கூட்டத்தில் கூறியதாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளுடன் தனியாக பெண் ஒருவர் படகில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
    • ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
    • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பிரதமரை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
    • உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்டிரா, மிஸோராம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 2 குண்டு வெடிப்புகளில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.