You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஏழு பேர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய கோப்பு - தமிழ்நாடு அரசு புதிய தகவல்

எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. மேரியுபோல் எஃகு ஆலையில் பதுங்கியுள்ள மக்கள், காயம் அடைந்த வீரர்களை வெளியேற ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுக்கும் யுக்ரேன்

    யுக்ரேனின் மேரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் யுக்ரேன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளிடம் அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். மேலும் அவர், அங்குள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளே வைத்து ஆலையின் கதவுகளுக்கு சீலிடுமாறு புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    . "சுமார் 1,000 பொதுமக்கள் மற்றும் 500 காயமடைந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அசோவ்ஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்" என்று சமூக ஊடகங்களில் வெரேஷ்சுக் கூறியுள்ளார்.

  2. மண்ணில்லா தீவனப்பயிர்: அசத்தும் நாமக்கல் விவசாயி

    வீட்டு அலமாரியிலேயே கால்நடைகளுக்கான சத்தான, இயற்கையான தீவனப்பயிரை மண்ணில்லாமல் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து ஆச்சர்யப்படுத்தும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்த விவசாயி:

  3. ஆம்பூர் அருகே ஆசிரியரை தாக்க முயன்றதாக மாணவர் இடைநீக்கம்

    ஆம்பூர் அருகே ஆசிரியரை தாக்க முயன்றதாக, மாணவர் ஒருவர் தற்காலிகமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்ஜெய். அதே பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர் ஒருவர் பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், தாவரவியல் ஆசிரியர் செய்முறை தேர்வுக்காக கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டதற்கு, ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ஆசிரியரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனை சக மாணவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணியம், ஆம்பூர் வட்டாட்சியர் பழனி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் வேலன் ஆகியோர் தலைமையில் இன்று பள்ளியில் நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியரை அடிக்க முயன்றதும், தகாத வார்த்தைகளில் பேசியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தியதால் மாணவரை பள்ளியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பள்ளி தலைமையாசிரியர் வேலன் மேலும் இரண்டு மாணவர்களை தற்காலிகமாக பள்ளிக்கு வர அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளார்.

  4. தெருக்களை சுத்தம் செய்யும் இந்த புதுமையான ‘ஸ்பைடர் மேன்’ குறித்து உங்களுக்கு தெரியுமா?

  5. தேசம் முதலில், இந்தியா முதலில் என்ற கொள்கையுடன் பணியாற்றுங்கள் - நரேந்திர மோதி

    சிவில் சர்வீசஸ் தினத்தையொட்டி, “தேசம் முதலில், இந்தியாவுக்கு முதலில்” என்ற கொள்கைப் பிடிப்புடன் பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.

    டெல்லி விஞ்ஞான் பவனில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு தேர்வான அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் இடையூறு ஏற்படக்கூடாது என்பதை அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் ஒவ்வோர் முடிவிலும் பார்க்க வேண்டும் என்றார்.

    ஜனநாயக அமைப்பில் மூன்று தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், சாதாரண மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே முதல் இலக்கு. இரண்டாவது குறிக்கோள், இந்தியாவில் நீங்கள் எதைச் செய்தாலும், அதை உலகளாவிய சூழலில் செய்வது காலத்தின் தேவை. மூன்றாவது இலக்கு, அமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணுவது மிகப்பெரிய பொறுப்பு என்று கூறினார்,

  6. டிரம்ப் முதல் போரிஸ் ஜான்சன் வரை: வெளிநாட்டு தலைவர்கள் குஜராத் செல்வது ஏன்?

  7. யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தகவல்

    யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    யுக்ரேனில் ரஷ்யப்படையினரால் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மேரியோபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையை முற்றுகையிடும் திட்டத்தை ரத்து செய்யுமாறு தனது ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற்கு பதிலாக அந்த ஆலை பாதுகாப்பாக சீல் வைக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

    கடைசியாக அங்கு உள்ள யுக்ரேன் படையினர் அந்நகரின் மிகப்பெரிய எஃகு ஆலையில் தஞ்சமடைந்துள்ளனர், அங்கு பொதுமக்கள் சுமார் 1,000 பேர் மோசமான நிலையில் உள்ளனர்.

    புதின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இருவரின் உரையாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடலில் அசோவ்ஸ்டல் ஆலைக்கு சீல் வைக்க புதின் உத்தரவிட்டார்.

    மேலும், ரஷ்யப் படையினர் மேரியோபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக, செர்கேய் ஷோய்கு தெரிவித்துள்ள நிலையில், அதற்காக பாதுகாப்பு அமைச்சரை புதின் பாராட்டியுள்ளார்.

    2,000க்கும் மேற்பட்ட யுக்ரேனிய படையினர் அந்த ஆலையில் இருப்பதாக புதினிடம் ஷோய்கு முன்னர் கூறியிருந்தார். அந்த ஆலையில் விரிவான பதுங்கு குழி உள்ளது.

    அங்குள்ள யுக்ரேன் படையினர் தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புகளைக் கொண்ட அசோவ் பட்டாலியன் மற்றும் யுக்ரேனிய கடற்படையினர் ஆவர். ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக வாரக்கணக்கில் எதிர்த்து வருவதற்காக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியால் அப்படையினர் முன்பு பாராட்டப்பட்டனர்.

  8. மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ் - காரணம் என்ன?

  9. சபர்மதி ஆசிரமத்தில் இராட்டை சுழற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இராட்டை சுழற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

  10. திருமாவளவன் - அண்ணாமலை கருத்து மோதல்

    விவாதத்துக்கு தயார் என்று பாஜக தலைவர் சொல்கிறார். சப்-ஜுனியரை அனுப்புகிறேன் என்று விசிக தலைவர் சொல்கிறார். இந்தக் கேள்வியையும் பதிலையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

  11. "மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு"

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  12. இதுவரை 680 டேங்குகளை இழந்த ரஷ்யா - காரணம் என்ன?

    யுக்ரேன் போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், ரஷ்யாவால் போரில் இன்னும் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், அதற்குள்ளாக ஏராளமான டேங்குகளை ரஷ்யா இழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்த காணொளி:

  13. அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்ந்து நடத்துவார் - டிடிவி தினகரன்

    அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு மதுரை வந்திருந்தார். மாட்டுத்தாவணி அருகே அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும். அதுதான் கடந்தகால வரலாறு. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை. மாபெரும் தோல்வியை திமுக அரசு சந்தித்து உள்ளது.

    கோடநாடு பங்களா ஜெயலலிதா வாழ்ந்த இடம். அங்கு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான சரியான குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

    அதிமுகவை ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று மீட்டெடுப்போம். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமையும். அதிமுக சின்னத்துடன் பேனர் வைத்த காரணத்தால் தான் முசிறி செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அது சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

    சசிகலா அதிமுகவை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார். அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதன் பொதுச் செயலாளராக அமர்த்துவோம்" என தெரிவித்தார்.

  14. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை ஜோ மகேஸ்வரன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  15. சேலத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

    சேலத்தில் மலைகோவிலுக்கு சென்றுவிட்டு இறங்கும் போது ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

    சேலம் சகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. அவர் தனது உறவினர்களான ரேவதி, சோபா, கல்யாணி ஆகியோருடன் சேலம் ஊத்துமலை முருகன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்று உள்ளனர். ஆட்டோவை ஓட்டுநர் மாதேஸ்வரன் என்பவர் ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது ஆட்டோ, ஓட்டுநர் மாதேஸ்வரனின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அர்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் மாதேஸ்வரன், கல்யாணி, ரேவதி, ஷோபா உட்பட நால்வரும் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கல்யாணி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த விபத்து தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  16. டெல்லி ஜஹாங்கிர்புரி: “2 வாரத்துக்கு தற்போதுள்ள நிலையே தொடரும்”

    டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

    முன்னதாக, அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து இதே வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து, அங்கு ஆக்கிரமிப்புகள் கட்டுமானங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறுஉத்தரவு வரும் வரை தற்போதுள்ள சூழ்நிலையே தொடருமென்றும், இரண்டு வாரத்திற்கு பிறகு விசாரணை மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  17. தஞ்சாவூரில் 12 வயது சிறுவன் போக்ஸோவில் கைது

    தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இதில், சிறுமி கருவுற்றத்தாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.

    சிறுமி கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  18. இலங்கை நெருக்கடி: 'இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி' - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

    சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

    இலங்கையின் கொழும்பு நகரில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் ஜீ.எல். பீரிஸ் பேசுகையில், ரம்புக்கனையில் நடந்த நிகழ்வு குறித்து மனித உரிமை ஆணையம் அளிக்கும் விசாரணை முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.

    "எங்களுடைய மக்கள் மிகக் கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களின் விலைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம். அரசு இதனைப் பரிவுடன் புரிந்துகொள்கிறது.

    இலங்கை நிதியமைச்சர் அலிசாப்ரோ தலைமையிலான குழுவினர் தற்போது, வாஷிங்டனில் சர்வதேச நிதியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற 3 நிபுணர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

    இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்களுக்கு பக்கபலமாக விளங்கி வருகிறார். சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கிடைக்க சில காலம் ஆகும். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகலாம். மூன்று, நான்கு தவணைகளில் அந்த உதவி அளிக்கப்படலாம்.

    இந்த நெருக்கடியில் இந்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்திருக்கிறது. சீனாவுடனும் பேசிவருகிறோம். இந்த இருநாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிறப்பாக இருக்கின்றன. இதுதவிர, ஜப்பான், வளைகுடா நாடுகளையும் அணுகி வருகிறோம்.

    ஏற்கனவே இந்தியாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது. அதேபோன்ற வேண்டுகோளை சீனா பரிசீலித்து வருகிறது. 250 மில்லியன் டாலர் உதவி வங்கதேசத்திலிருந்து கிடைத்திருக்கிறது. மேலும் இந்தியா 500 மில்லியன் டாலர்களை சுழல் நிதியாக எரிபொருள் வாங்க அளித்திருக்கிறது'' என்றார்.

  19. கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் 20 நாளில் இருமுறை பாதிக்கப்பட்ட பெண்

    ஸ்பெயின் நாட்டில் 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்

  20. இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்யா தேவ்வர்தா ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து, காந்தி ஆசிரமத்திற்கு போரிச் ஜான்சன் செல்கிறார். போரிஸ் ஜான்சனை வரவேற்க மக்கள் பெருமளவு வந்துள்ளதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.