நன்றி நேயர்களே
இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
- இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை - ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 20ஆம் தேதி ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செல்லவுள்ளார்.
- தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கை வலுத்துள்ள நிலையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார்.
- சென்னையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.
- கேரளாவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கிறிஸ்தவ பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் இன்று, ஏப். 19 அன்று, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆப்கன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- மதநிந்தனை புகார் தொடர்பாக, பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












