"இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுங்கள்" மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஆ. லட்சுமி காந்த் பாரதி
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இது செல்லாது என 2017ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர்.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி ஜே.ஸ்ரீதேவி இன்று தீர்ப்பளித்தார் அதில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தார்.
X பதிவை கடந்து செல்லX பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காதுஇந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்றக் கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினா் மற்றும் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், பெரியநாயகிபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்தவர்களை மொத்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிப்பதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“மருந்து வாங்க வருபவர்கள், மரணச் சான்றிதழ் வாங்கும் நிலைதான் உள்ளது" - இலங்கையில் மருத்துவ நெருக்கடி
YouTube பதிவை கடந்து செல்லGoogle YouTube பதிவை அனுமதிக்கலாமா?எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

"ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? நான் என்ன உண்ண வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?" -நடிகர் பிரகாஷ் ராஜ்
வணக்கம் நேயர்களே,
நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி, பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை விஷ்ணுப்ரியா, ராஜசேகர் மற்றும் க. சுபகுணம் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
இலங்கை போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள்
இன்று மோதி - பைடன் சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இன்று காணொளி காட்சி மூலம் சந்தித்து பேசவுள்ளனர்.
யுக்ரேன் - ரஷ்யா மோதலுக்கு பிறகு அமெரிக்கா - இந்தியாவின் உறவு குறித்து பல்வேறு கருத்துக்களை நிபுணர்கள் முன் வைத்திருந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பில் சர்வதேச பொருளாதாரம் மற்றும் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தனது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கியது ரஷ்யா.
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
போர் காரணமாக யுக்ரேன் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

பட மூலாதாரம், EPA
போரின் விளைவாக இந்த ஆண்டு யுக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டதைவிடப் பெரிய பொருளாதார சேதம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது. பொருளாதார தடைகள், ரஷ்யாவிலும் மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது.
யுக்ரேனின் பெரும்பாலான பணியாளர்கள், தப்பியோட அல்லது சண்டையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
வணிகங்கள் மூடப்பட்டுவிட்டன, சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும், பல வருட முன்னேற்றம் தவிர்க்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது.
சூரியகாந்தி கோதுமை போன்ற பயிர்களுக்கு யுக்ரேன் முக்கிய ஆதாரமாக இருந்தது. ஆனால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலகளாவிய உணவு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால், யுக்ரேன் ஒரு முக்கியமான வருமானத்தை இழந்துள்ளது.
பொருளாதாரத் தடைகளால், இந்த ஆண்டு ரஷ்யா 11 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
வணக்கம் நேயர்களே!
நாங்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த செய்திகள், தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.
