நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ.
- யுக்ரேனில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புக்கும் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தமது காணொளி சந்திப்பின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
- இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.
- பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
- சென்னை எண்ணூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளதாக அறிவியல் ஆய்வில் தகவல்.
- ரஷ்ய படையெடுப்பால், யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
- இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை இரண்டு கை குழந்தைகளுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
- மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்த்த வழக்கு தள்ளுபடி.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.












