யுக்ரேன் ரயில் நிலைய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலி - ரஷ்யா பொறுப்பேற்க மறுப்பு

யுக்ரேன் கிழக்குப் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாகினர். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்கிறது ரஷ்யா.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. அமெரிக்காவை கடுமையாக சாடிய இம்ரான் கான்: இந்தியா குறித்து புகழ்ந்து பேசியது என்ன?

  2. வணக்கம் நேயர்களே!

    ஏப்ரல் 8-ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழியைப் பயன்படுத்துவது குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு “ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல்,” எனத் தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் முனிசிங்கிடம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • அடுத்த இரண்டு வாரங்களில் 120,000 டன் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் மூலம் இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் தீரப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு, தனிமைப்படுத்தலில் இருப்போர் உட்பட கோவிட் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கை 237 என்றும்22 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தினசரி அறிக்கை கூறுகிறது.
    • இலங்கைக்கான இந்திய தூதர், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.
    • இந்தியா இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இது இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடு என்பதால், அதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
    • மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதியாளரான ஹஃபீஸ் சயீத்திற்கு, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.
    • ராஜஸ்தான் மாநில சதீஷ் பூனியா, “ராஜஸ்தானில் தாலிபன் ஆட்சி நடப்பதைப் போல் இருக்கிறது. அவ்வளவு அச்சுறுத்தல் நிறைந்த சூழல் நிலவுகிறது,” எனத் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.
    • இரண்டு ராக்கெட்டுகள் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டதாக அந்த பிராந்தியத்தின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
    • அசல் பட்டு நூல் மற்றும் ஜரிகை விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நெசவாளர்கள் பரமக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

  3. ஹஃபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்

    ஹஃபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டுகள் தண்டனை வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதியாளரான ஹஃபீஸ் சயீத்திற்கு, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.

    மேலும், அந்தத் தீர்ப்பில் பாகிஸ்தான் ரூபாயில் 3,40,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளதுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக கைதான ஹஃபீஸ் சயீத், 2020-ஆம் ஆண்டில் இருந்து லாஹூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார்.

    யார் இந்த சயீத்

    பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன.

    ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து வருகிறார்.

    சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

  4. “என்னை பிடிக்காததால் ஆட்சியை மாற்ற சதி நடக்கிறது” – இம்ரான் கான்

    “என்னை பிடிக்காததால் ஆட்சியை மாற்ற சதி நடக்கிறது” – இம்ரான் கான்

    பட மூலாதாரம், ANI

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், நாளை காலை 10:30 மணிக்கு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

    இந்நிலையில், சிறிது நேரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் பிடிவியில் நேர்காணலின்போது, பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அவருடைய ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடப்பதாகவும் மக்கள் சுய மரியாதை மற்றும் நாட்டின் இறையாண்மையை மக்கள் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    “வெளியிலிருந்து நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கான முயற்சி நடந்தது. அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால், என்னை மாற்ற முடிவு செய்தார்கள்.

    இது இம்ரான் கான் பற்றியது மட்டுமல்ல. ஒரு சமூகம் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கவில்லை என்றால், வேறு யார் பாதுகாப்பது?” என்று கூறியுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

  5. யுக்ரேன் ரயில் நிலைய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலி

    ரயில் நிலையத் தாக்குதல்

    யுக்ரேனின் க்ரமாடார்ஸ்க் ரயில் நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 50 பேர் பலியாகினர். டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

    ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

    கிழக்கு யுக்ரேனில் உள்ள இந்த ரயில் நிலையத்துக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோக்கள் சேதமடைந்த கார்களையும், கைவிடப்பட்ட தனி நபர் உடமைகளையும் காட்டுகின்றன.

    இந்த ரயில் நிலையத்தை தாக்கிய ஏவுகணை சிதைவுகள் காட்டும் டாச்கா-யு கணைகள் யுக்ரேன் ஆயுதப்படைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறவை என்கிறது ரஷ்யா.

    ஆனால், ரயில் நிலையத்துக்கு வெளியே புல்வெளியில் கிடந்த ஒரு ராக்கெட் சிதைவில் 'குழந்தைகளுக்காக' என்று பொருள்தரும் தரும் "za detei" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த வாசகத்துக்கு குழந்தைகளின் பாதுகாப்புக்காக என்றுதான் பொருள், குழந்தைகளை குறிவைத்து என்பது பொருள் அல்ல என்றும் சொல்லப்படுகிறது.

  6. இலங்கை, பாகிஸ்தான் நாடுகளின் நிலையால் இந்தியாவிலும் தாக்கமா ?

  7. ஆபரேஷன் கஞ்சா வேட்டை: விற்பனை எப்படி நடக்கிறது? போலீஸ் எங்கே பாய்கிறது? எங்கே பாயவேண்டும்?

  8. தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்

  9. கேஜிஎஃப் பட நடிகர் யஷ்: "பஞ்ச் பஞ்ச்னு எனக்கே பஞ்ச் அடிச்சிட்டிங்க" என்கிறார்

  10. குழந்தைகளுடன் தமிழ்நாட்டில் தஞ்மடைந்த இலங்கை குடும்பம்

    "நாங்க இலங்கைக்கு திரும்ப போறதா இல்ல.. அங்க சாகுற நிலைமைதான் இருக்கு; வாழ முடியாது.. தமிழகத்தை நம்பி வந்தோம்" என்று தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

  11. "இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல்" - அமித் ஷா கருத்திற்கு ஸ்டாலின் பதில்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழியைப் பயன்படுத்துவது குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு “ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் செயல்.

    இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

    ‘இந்து மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா?

    ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டை உருவாக்காது.

    ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்,” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு, தனிமைப்படுத்தலில் இருப்போர் உட்பட கோவிட் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 237 என்று பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தினசரி அறிக்கை கூறுகிறது.

    மேலும் அந்த அறிக்கைப்படி, 20,982 பேரிடையே மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் 22 பேருக்கு (15 ஆண்கள் மற்றும் 7 பெண்கள்) கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

  13. 39 பேர் உயிரிழ்ந்த ரயில் நிலையத்தில் இருந்து கிடைத்த படங்கள்

    பிபிசி செய்தியாளர் ஜோ இன்வுட் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குச் சென்று, அங்கு ஏவுகணை மற்றும் கார்கள் எரிந்து கிடக்கும் ஒளிப்படங்களை அனுப்பியுள்ளார்.

    39 பேர் உயிரிழ்ந்த ரயில் நிலையத்தில் இருந்து கிடைத்த படங்கள்
    39 பேர் உயிரிழ்ந்த ரயில் நிலையத்தில் இருந்து கிடைத்த படங்கள்
  14. கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலையை அறிவித்த சீரம் நிறுவனம்

    கோவிஷீல்ட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலையை அறிவித்த சீரம் நிறுவனம்

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாவுக்கு எதிரான போரில், வெள்ளிக்கிழமை இரண்டு பெரிய அறிவிப்புகள் வெளியாகின.

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. மறுபுறம், கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, மக்கள் 600 ரூபாய்க்கு கோவிஷீல்டின் பூஸ்டர் டோஸை பெற முடியும் எனக் கூறியுள்ளது.

    முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் எந்தவொரு தனியார் தடுப்பூசி மையத்திலும் பூஸ்டர் டோஸை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இரண்டாவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் முடிந்த 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் கிடைக்கும்.

  15. "ராஜஸ்தானில் தாலிபன் ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது"

    ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, “ராஜஸ்தானில் தாலிபன் ஆட்சி நடப்பதைப் போல் இருக்கிறது. அவ்வளவு அச்சுறுத்தல் நிறைந்த சூழல் நிலவுகிறது,” எனத் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. ரவுடியின் பிறந்தநாளில் கலந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள்: எஸ்.பி-யின் அதிரடி நடவடிக்கை

    ஸ்ரீவைகுண்டத்தில் ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவலரை ஆயுதப்படைக்கு மாற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    23-ஆம் தேதி, அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்பிரிவின் காவலர் சுப்பிரமணி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு வைகுண்ட பாண்டியன் சால்வை அணிவித்து, கேக் ஊட்டி வாழ்த்து கூறியுள்ளார்.

    இந்நிலையில், 26-ஆம் தேதியன்று, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒருவரை அரிவாள் பிடியால் தாக்கியதாக வைகுண்ட பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

    பல்வேறு குற்றப் பின்னணி உடைய ஒருவரின் பிறந்த நாள் விழாவில் காவல்துறை அதிகாரியும் தனிப்பிரிவு காவலரும் கலந்துகொண்ட ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

    அதையடுத்து, உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    இருவரும் இன்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

  17. கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தின் தாக்குதலுக்கு முந்தைய படங்கள்

    கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தின் தாக்குதலுக்கு முந்தைய படங்கள்

    பட மூலாதாரம், Getty Images

    ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்ததாக நகர மேயர் ஒலெக்ஸாண்டர் ஹோன்சரென்கோ கூறினார். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் குறிப்பிட்டார்.

    கிழக்கு யுக்ரேனில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், கிழக்கிலுள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்டது.

    வாரத் தொடக்கத்தில் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் மக்கள் ரயில்களுக்காகக் காத்திருந்த காட்சிகள் இவை. வடக்கிலிருந்து வெளியேறிய ரஷ்ய படைகள் டான்பாஸில் தனது தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

    செவ்வாய்க்கிழமை அன்று, ரயில் நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள்

    பட மூலாதாரம், Getty Images

    கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தின் தாக்குதலுக்கு முந்தைய படங்கள்

    பட மூலாதாரம், Getty Images

    கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தின் தாக்குதலுக்கு முந்தைய படங்கள்

    பட மூலாதாரம், Getty Images

  18. இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துகள் பற்றாக்குறை: நெருக்கடியைத் தணிக்கும் பரிந்துரைகள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துகள் பற்றாக்குறை

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் முனிசிங்கிடம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    மருந்து தொடர்பான நெருக்கடி நிலை அதிகரித்து வருவதால், இதில் உடனடி தலையீடு அவசியம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    மேலும், மருந்து பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி,

    • உற்பத்தி செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் இதோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் அவசர விவாதத்திற்குக் கூட்டுதல்
    • கிடைக்கக்கூடிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதலை உருவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமித்தல்
    • அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவைப் பெறுதல்
    • மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கான வழிமுறையை உருவாக்குதல்

    இதன்படி, நிலவும் தேசிய சுகாதார நெருக்கடிக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வர, மேலே உள்ள வழிகளில் நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  19. இலங்கையில் மாத்திரை மருந்துகளுக்கு தட்டுபாடு - கையிருப்பு தீர்ந்ததா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. இலங்கை: பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்- படங்களில்

    இலங்கை: பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கல்வி தொடர்பான பிரச்னைகளைக் கண்டித்து மருத்துவக் கல்வி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மக்களின் வாழ்க்கை அபாயத்தை நோக்கி நாளாந்தம் நகர்ந்து வருவது காணக்கூடியதாக உள்ளது.

    எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.

    இவ்வாறான நிலையில், நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

    இலங்கை: பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொழும்புவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்
    இலங்கை: பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொழும்புவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
    இலங்கை: பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள்