கடும் மின்வெட்டால் பாதிக்கப்படும் இலங்கை
கடும் மின்வெட்டால் பாதிக்கப்படும் இலங்கை மக்கள், பேரிழப்பை எதிர்கொள்ளும் யுக்ரேன் நகரம் உள்ளிட்ட செய்திகளை வழங்கும் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நந்தினி வெள்ளைச்சாமி
கடும் மின்வெட்டால் பாதிக்கப்படும் இலங்கை மக்கள், பேரிழப்பை எதிர்கொள்ளும் யுக்ரேன் நகரம் உள்ளிட்ட செய்திகளை வழங்கும் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை.
மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கக் கோரி தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை
"அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது." என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“கீயவ் மற்றும் செர்னிஹிவ் அருகேயுள்ள ரஷ்ய படைகள், பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் மீண்டும் ஒருங்கிணையவும் நிலைநிறுத்தவும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டன” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
“அதிபர் விளாதிமிர் புதின் அவருடைய மூலோபாய இலக்குகளில் எதையும் அடையவில்லை,” என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “அவர் உண்மையில் ஒரு சிறிய மக்கள் தொகை இருக்கும் பகுதிகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறார். அவர்கள் கார்ஹிவை கைப்பற்றவில்லை,” என்றார்.
யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் தனது முயற்சிகளை மையப்படுத்துவதாக ரஷ்யா அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தகவல் வந்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த பென்டகன் அதிகாரி பேசுகையில், ரஷ்ய படைகள் எதிர்காலத்தில் மீண்டும் கீயவுக்குச் செல்லக்கூடும் என்றும் பின்வாங்கும் படைகள் மீண்டும் திரும்பி வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.
இன்ஸ்டிட்யூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார் திங்க் டேங்க்கின் படி, கீயவை சுற்றியிருந்து பின்வாங்கும் ரஷ்ய படைப் பிரிவுகள், “சில காலத்திற்கு மீண்டும் தங்கள் செயல்திறனைப் பெறுவதற்கு” வாய்ப்பில்லை.
யுக்ரேனுக்கு அனுப்பப்பட்ட 130 ரஷ்ய படைப்பிரிவுகளில், 80-க்கும் மேற்பட்டவை இன்னும் யுக்ரேனுக்குள் உள்ளன என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஏபி செய்தி முகமை, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி, பின்வாங்கிச் செல்லும் ரஷ்ய படைகளில் குறைந்தபட்சம் 24,000 பேர் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.
இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நேற்றைய பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.