யுக்ரேன்: இந்தியாவின் நிலைப்பாட்டை பாராட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவின் நிலைப்பாடு உண்மையின் அடிப்படையில் அமைந்ததாகவும், ஒருபக்க சார்புடன் இல்லை எனவும், அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் - "அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும்"

    ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல்
    படக்குறிப்பு, ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல்

    ரஷ்ய எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த தாக்குதலுக்கு யுக்ரேன் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய அதிபர் மாளிகையின் கருத்து கிடைக்கப்பெற்றுள்ளது.

    எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என, ரஷ்ய அதிபர் மாளிகை கூறியுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரஷ்ய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இத்தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஒருங்கமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

  2. அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து முதுகுளத்தூரில் போராட்டம்

    அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக அரசு
    படக்குறிப்பு, அமைச்சர் ராஜ கண்னப்பனை கண்டித்து போராட்டம்

    அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து முதுகுளத்தூரில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகராக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி, போக்குவரத்து துறையிலிருந்து தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன், அவரது உதவியாளர் மூலம் அமைச்சரை பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதையடுத்து, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், சிவகங்கையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு சென்றபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னை சாதி பேரைச் சொல்லி அமைச்சர் இழிவாக பேசினார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே ஏராளமானவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்தும், அவரை தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து - காணொளி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் குரும்பலூரில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த விபத்தின் காணொளி காட்சி:

  4. நாகையில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை - மூன்றாவது நாளாக உறவினர்கள் போராட்டம்

    கல்லூரி மாணவி தற்கொலை
    படக்குறிப்பு, உறவினர்கள் போராட்டம்

    நாகையில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உறவினர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணியன் என்பவரின் மகள் சுபாஷினி. இவர் நாகை அடுத்துள்ள பாப்பா கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில், பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை கல்லூரி வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுபாஷினி நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனால், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய உறவினர்கள் நாகூர் மற்றும் நாகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், நேற்று கல்லூரி அருகே பாப்பா கோவிலில் மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க மறுத்து 3வது நாளாக உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மருத்துவமனை வாசலில் சாலையின் இருபுறமும் சாமியானா பந்தல் அமைத்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கல்லூரி மாணவி உயிரிழப்புக்குக் காரணமான சர் ஐசக் நியூட்டன் கல்லூரியின் தாளாளர் ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமிகாந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி உள்ளிட்ட மூவர் மீதும் நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களை கைது செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக நடப்பதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தின்போது கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    கல்லூரி தாளாளர் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக கைது கைது செய்யாவிட்டால், மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  5. வளைகாப்புக்கு முதல் நாள் 9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

    கர்ப்பிணி தற்கொலை
    படக்குறிப்பு, சோனியா: கோப்புப்படம்

    தருமபுரி மாவட்டத்தில் வளைகாப்புக்கு முதல் நாள் 9 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அச்சல்வாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (எ) பிரதீப். இவர் கோவையில் மெக்கானிக்காக பணி செய்து வருகிறார். இவருக்கும் மொரப்பூர் அருகே மோரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மகள் சோனியா என்பவருக்கும் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதற்கு பிறகு சோனியா 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று சோனியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது அப்பாவுக்கு செல்போன் மூலம் தகவல் வந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஒடசல்பட்டிக்கு தன் உறவினர்களுடன் வந்து பார்த்துள்ளார். தனது மகள் மரணத்தில் சந்தேகமடைந்த சிங்காரம், அரூர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1 வருடம் தான் ஆகிறது எனபதால், ஆர்டிஓ விசாரணைக்காக தகவல் கொடுத்தனர். தற்போது ஆர்டிஓ முத்தையன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  6. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்வு - 10 முக்கிய தகவல்கள்

    சிலிண்டர் விலை உயர்வு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாடு முழுவதும் உயர்கிறது. வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 19 கிலோ சிலிண்டருக்கு 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  7. நாடு முழுவதும் கல்வி புரட்சியை உருவாக்குவோம் - அரவிந்த் கேஜ்ரிவால்

    நாடு முழுவதும் கல்வி புரட்சியை உருவாக்குவோம் என, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "டெல்லியில் செயல்படுவது போன்ற இத்தகைய நவீன பள்ளிகளை தமிழகத்திலும் உருவாக்கப் போகிறோம். அந்த பள்ளிகளை தொடங்கிவைக்க அரவிந்த் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வருவார்" என தெரிவித்தார்.

    முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நவீன பள்ளியை பார்வையிடுவது குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், "கல்வி மட்டுமே சிறந்த சமூகம் மற்றும் வலுவான தேசத்தை உருவாக்க உதவி செய்யும். நாடு முழுவதும் கல்வி புரட்சியை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எங்களின் சிறந்த அரசு பள்ளிக்கு வரவேற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இந்தியா வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் - கச்சா எண்ணெய் குறித்து விவாதிக்கலாம்

    செர்ஜேய் லாவ்ரோவ், ஜெய்சங்கர்

    பட மூலாதாரம், External Affairs Minister, S Jaishankar on Twitter

    படக்குறிப்பு, டெல்லி வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ்

    ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இன்று இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் இந்திய வழக்கப்படி இருகைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். பல்வேறு உலக நாடுகளுக்கு ரஷ்யா எதிரி நாடாக கருதப்படலாம், ஆனால் இந்தியாவில் அது நட்பு நாடாக கருதப்படுகிறது.

    ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து, லாவ்ரோவ் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு லாவ்ரோவ் இந்தியா வருவது இதுவே முதன்முறை. பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இந்தியா வந்த மறுநாள் லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். லிஸ் ட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்காத நிலையில், லாவ்ரோவ் பிரதமரை சந்திக்க உள்ளார்.

    யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை வகிக்கிறது. தாக்குதல் (யுக்ரேன் மீதான) நிறுத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை.

    இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக உறவை பேணிவருகிறது. இந்தியா பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவது குறித்து இன்று விவாதிக்கப்படலாம்.

    எண்ணெய்யை வாங்குவதற்கு பொருளாதார தடைகளை மீறாத கட்டண முறைகளை இந்தியாவுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நேற்று டெல்லி வந்திருந்த அமெரிக்க துணை பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தவிர்க்கும் நாடுகள் "விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என தெரிவித்திருந்தார்.

    இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் எண்ணெய் குறைவான விகிதம் தான் எனவும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள் இன்னும் அதிகளவில் வாங்குவதாகவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. முதல்வர் சொல்வதை பிரதமர் உன்னிப்பாக கவனிக்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

    "முதல்வர் பிரதமரை சந்திக்கும்போது கம்பீரமாக உட்கார்ந்து பேசுகிறார் என்பதும் முதல்வர் சொல்வதை உன்னிப்பாக பிரதமர் கவனிக்கிறார் என்பதும் புகைப்படத்தை பார்த்தாலே விளங்கும். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடந்தார்" என, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. மேரியோபோல் நகரத்திற்கு புறப்பட்ட செஞ்சிலுவை சங்க பேருந்துகள்

      • எழுதியவர், வயர் டேவிஸ்
      • பதவி, பிபிசி செய்திகள், ஸாப்போரீஸியா
    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யப்படைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளான யுக்ரேனின் மேரியோபோல் நகரத்தில் உள்ள மக்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவை ஆணையத்தின் மூன்று வாகனங்கள் அடங்கிய சிறிய குழு, ஸாப்போரீஸியாவிலிருந்து மேரியோபோல் புறப்பட்டது. அக்குழுவினருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தாமதமான நிலையில், தற்போது அது கிடைத்துள்ளதால் மேரியோபோலுக்கு வாகனங்கள் புறப்பட்டுள்ளன.

    மேரியோபோலுக்கான இந்த பயணம் "மிகவும் முக்கியமானது" என செஞ்சிலுவை ஆணையம் விவரித்துள்ளது. ரஷ்யப்படைகளின் தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட அந்நகரத்தில், இன்னும் மக்கள் சிக்கியுள்ளனர்.

    அந்நகரத்தில் பாதுகாப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவதற்கான முந்தையை முயற்சிகள் தோல்வியடைந்தன.

  11. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன் ராணுவம்

    பட மூலாதாரம், Ukrainian Armed Forces

    படக்குறிப்பு, யுக்ரேன் ராணுவத்தால் ரஷ்ய டேங்கு அழிக்கப்பட்டதாக தகவல்

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த தாக்குதலுக்கு யுக்ரேன் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
    • ரஷ்யப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோலில் உள்ள மக்களை வெளியேற்றவும் அவர்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்கவும் அனுப்பப்பட்ட பேருந்துகள் இன்று அந்நகரை சென்றடைய உள்ளன.
    • ஆனால், தங்கள் குழுவினருக்கான பாதுகாப்பு உத்தரவாதம் இன்னும் பெறப்படாததால், செஞ்சிலுவை சார்பாக அனுப்பப்பட்ட வாகனங்கள் ஸாப்போரீஸியா நகரத்தில் தாமதமாகியுள்ளதாக, செஞ்சிலுவை தெரிவித்துள்ளது.
    • ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள் சிறப்பு வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் என ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதற்கான புதிய விதிமுறைகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
    • செரீனிஹிவ் தெற்கில் உள்ள தாங்கள் இழந்த கிராமங்களை யுக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தினசரி உளவு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேன் தொடர்ந்து "வெற்றியடைந்து வருவதாகவும்" ஆனால், கீயவின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பகுதிகளில் அதன் எதிர்தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  12. 210 ரன்கள் விளாசியும் வெற்றியை கோட்டைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

    23 பந்துகளில் 55 ரன்கள். நடப்பு ஐபிஎல் சீசனில் வேகமாக அரைசதம் விளாசிய பெருமை. 'கேம் சேஞ்சர்', 'ஆட்ட நாயகர்' விருது, எவின் லூயிஸின் கிளாஸான ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றியை கானல் நீராக்கிவிட்டது. அதனை விளக்கும் காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  13. சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - அதிமுக உண்ணாவிரத போராட்டம்

    கே.பி.முனுசாமி அதிமுக
    படக்குறிப்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கே.பி.முனுசாமி உள்ளிட்டோர்.

    சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 3,000 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயர்ணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 5வது சிப்காட் அமைக்க அரசு முயற்சி மேற்கொள்வதாகவும் இதனால் விளைநிலங்கள் பறிபோவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கே.பி.முனுசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் கே.பி.முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான அசோக்குமார், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

  14. டெல்லி அரசு நவீன பள்ளிகளை போன்று தமிழகத்திலும் உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

    பட மூலாதாரம், ANI

    டெல்லியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, சனிக்கிழமை திறந்துவைக்க உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் டெல்லிக்கு வருகை தந்தார்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் செயல்பட்டு வரும் அரசு நவீன பள்ளி ஒன்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக எம்.பி டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் கல்வி முறை, நவீன தொழில்நுட்பம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகளிடம் மு.க.ஸ்டாலின் உரையாடினார். தேசபக்தி, இந்தியாவை பெருமைப்படுத்துவது குறித்த ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மாணவிகள் பதிலளித்தனர்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    பின், மாணவ, மாணவிகளின் ஓவியங்கள், செயல்முறை விளக்கங்களை அவர் பார்வையிட்டார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக, கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    டெல்லியில் செயல்படுவது போன்ற இத்தகைய நவீன பள்ளிகளை தமிழகத்திலும் உருவாக்கப் போகிறோம். அந்த பள்ளிகளை தொடங்கிவைக்க அரவிந்த் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வருவார்" என தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  15. செர்னோபில் அணுமின் நிலையத்தை யுக்ரேனிடம் ஒப்படைத்த ரஷ்ய படைகள்

    ரஷ்ய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறிவிட்டது என யுக்ரேன் கூறியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

    ரஷ்ய படைகள், “எழுத்துப்பூர்வமாக அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டை யுக்ரேனிய பணியாளர்களுக்கு மாற்றியுள்ளன,” என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.

    ஆலையின் ஊழியர்கள் தளத்தில் வெளியாட்கள் இல்லை என்று யுக்ரேன் தரப்பில் தெரிவித்திருந்தாலும், அதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதிசெய்ய முடியவில்லை என்றும் கூறியது.

    யுக்ரேன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் செர்னோபிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் க.சுபகுணம் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  17. நள்ளிரவில் இலங்கையில் உக்கிரமான போராட்டம்

    நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. வெளிநாட்டு கல்வி: மாணவர்களின் ஆர்வத்துக்கு காரணம் என்ன?

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகமெங்கும் பேசுபொருளாக தொடங்கியபோது, இந்தியாவில் இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியை இந்தியாவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். ஊடகங்களும் அதை வைத்து விவாதங்களை நடத்தின.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கலாம்.

    எனவே, வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

  19. மேரியோபோல் நகரத்தின் பேரழிவுக் காட்சிகள்

    வெள்ளிக்கிழமை அன்று, முற்றுகையில் இருக்கும் தென்கிழக்கு துறைமுக நகரமான மேரியோபோலில் இன்னமும் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை வெளியேற்ற யுக்ரேன் முயன்று வருகிறது.

    நகரத்திற்குச் செல்லும் வழியில் 45 பேருந்துகளைக் கொண்ட தொடரணி ரஷ்ய படைகளால் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

    கடந்த ஐந்து வாரங்களாகத் தொடர்ந்து குண்டுவெடிப்புகளுக்கு உள்ளான நகரத்தில் சுமார் 100,000 மக்கள் உள்ளனர்.

    மேரியோபோல் நகரத்தின் உள்ளிருந்து சரிபார்க்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் அந்த நகரத்தில் ஏற்பட்ட அழிவின் அளவைக் கைப்பற்றியுள்ளன.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  20. "ராணுவ துரோகிகள் தண்டிக்கப்படுவார்கள்" - அதிபர் ஸெலன்ஸ்கி

    யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

    பட மூலாதாரம், EPA

    அதிபர் ஸெலென்ஸ்கியின் இரவு நேர உரையில், யுக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை "துரோகிகள்" என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார்.

    "இதுபோன்றவர்கள் தொடர்பாக இன்று மற்றொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை, ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு, அவர் இரண்டு உயர் அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, "யுக்ரேன் மக்களுக்கு விசுவாசமாக இருக்காமல், ராணுவ உறுதிமொழியை மீறுபவர்கள் உயர் ராணுவ பதவிகளை இழக்க நேரிடும்," என்றும் கூறினார்.