யுக்ரேன்: இந்தியாவின் நிலைப்பாட்டை பாராட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவின் நிலைப்பாடு உண்மையின் அடிப்படையில் அமைந்ததாகவும், ஒருபக்க சார்புடன் இல்லை எனவும், அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
    • இந்த தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என, ரஷ்ய நாட்டின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
    • மேரியோபோலில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்திற்கு யுக்ரேன் மற்றும் ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக, செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    • ரஷ்ய படைகள் கைப்பற்றிய ஒரே பெரிய நகரமான கேர்சனில் தாங்கள் வலுவடைந்து வருவதாக யுக்ரேன் படைகள் தெரிவித்துள்ளன.
    • ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
    • விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • டெல்லி அரசு நவீன பள்ளிகளை போன்று தமிழகத்திலும் உருவாக்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  2. இலங்கையில் அதிபர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் - இதுவரை என்ன நடந்தது?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. கல்லல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய ஒன்பதாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கோமளவள்ளி பாஸ்கரன் என்பவர் 3 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோமளவள்ளியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி ஆறுமுகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்.

    நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றிய ஒன்பதாவது வார்டு மறு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    அதில் அதிமுக வேட்பாளர் கோமளவள்ளி 1421 வாக்குகள், திமுக வேட்பாளர் சரஸ்வதி 1420 வாக்குகள் பெற்று இருந்தனர். இதையடுத்து அதிமுக வேட்பாளர் கோமளவல்லி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  4. ஒரு நகைச்சுவை தவறாக போனால் என்னாகும்? கலைஞர்கள் பகிரும் அனுபவங்கள்

    ஆஸ்கர் விருது விழாவில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கிறிஸ் ராக் அறை வாங்கும் அளவுக்கு, அவர் கூறிய நகைச்சுவை மிகவும் தவறான பார்வையில் இருந்தது. வில் ஸ்மித் மனைவியான ஜாடா பிங்கெட் ஸ்மித்திற்கு இருக்கும் மருத்துவ பிரச்சனை குறித்து அந்த நகைச்சுவை இருந்தது.

    "நான் எல்லை மீறி நடந்து கொண்டேன். நான் செய்தது தவறு." என்று ராக்கிடம் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    ஒரு நகைச்சுவை தவறாக போனால் என்னாகும் என்று பிபிசி பல நகைச்சுவை கலைஞர்களிடம் கேட்டது.

    "போராடுவதற்குஉங்களுக்கு உரிமை உண்டு"

    இந்தியாவைச் சேர்ந்த அபிஷ் மாத்யூ, மதம் குறித்த சர்ச்சைக்குரிய நகைச்சுவைகளை கூறியதால், அவர் மறைந்து வாழும் நிலைக்கு நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அத்தகைய நிலைக்குதான் தள்ளப்பட்டனர்.

    இது குறித்து விரிவாக படிக்க

    ஆஸ்கர் ஹாலிவுட்

    பட மூலாதாரம், Getty Images

  5. யுக்ரேன்: இந்தியாவின் நிலைப்பாட்டை பாராட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

    இந்தியா - ரஷ்யா

    பட மூலாதாரம், Twitter/@mfa_russia

    ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

    ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இந்தியா வருகை தந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். இதன்பின்னர், செர்ஜேய் லாவ்ரோவ் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

    அப்போது, பிரதமர் மோதியிடம் யுக்ரேன் சூழல், ரஷ்யா - யுக்ரேன் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து அவர் எடுத்துரைத்தார். அப்போது, தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாகவும், அதற்கு இந்தியா எவ்விதத்திலும் பங்குவகிக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மேலும், கடந்த டிசம்பர் 2021இல் இந்தியா - ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் செர்ஜேய் லாவ்ரோவ் மோதியிடம் தெரிவித்தார்.

    முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த செர்ஜேய் லாவ்ரோவ், இந்தியா - ரஷ்யா உறவின் மீது எந்த அழுத்தமும் இல்லை என தெரிவித்தார்.

    யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் அவர் பாராட்டியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாடு உண்மையின் அடிப்படையில் அமைந்ததாகவும், ஒருபக்க சார்புடன் இல்லை எனவும், அவர் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  6. இலங்கையில் நேற்று கலவரம் நடந்த மிரிஹான பகுதியில் தற்போதைய கள நிலவரம் என்ன?

    இலங்கையில் நேற்று கலவரம் நடந்த மிரிஹான பகுதியில் தற்போதைய கள நிலவரம் என்ன? களத்தில் இருந்து பிபிசி தமிழ் நடத்திய நேரலையை இங்கே வழங்குகிறோம்:

  7. செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு செல்லவுள்ள அணுசக்தி நிபுணர்கள்

    செர்னோபில் அணுமின் நிலையம்

    பட மூலாதாரம், Getty Images

    செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி நிபுணர்கள் செல்லவுள்ளனர்.

    யுக்ரேன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் செர்னோபிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறிவிட்டது என யுக்ரேன் கூறியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி தொடர்பான நிபுணர்கள் அனுப்பப்பட உள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் மரியானோ கிராஸி தெரிவித்துள்ளார்.

    அந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான இந்த ஆய்வுக்கு அவர் தலைமை வகிக்க உள்ளார்.

    யுக்ரேனில் இத்தகைய ஆய்வு நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறியது, சரியான திசையில் பயணிப்பதாகும் என தெரிவித்தார்.

    செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சின் அளவு "இயல்புநிலையில்" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இன்று காலையில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் ரஷ்யப்படையினர் சிலர், அணுமின் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்ததாக, யுக்ரேன் அணுசக்தி நிறுவனமான எனெர்கோடம் (Energoatom) தலைவர் தெரிவித்துள்ளார்.

    1986ஆம் ஆண்டில் செர்னோபிலில் உள்ள ஒரு அணு உலையில் விபத்து ஏற்பட்டதால், செர்னோபில் அணுமின் நிலையம் பிரபலமானது.

  8. ஜிஎஸ்டி: இதுவரை இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடி வசூல்

    ஜிஎஸ்டி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)

    நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் மார்ச் மாதத்தில் 1.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜனவரி மாதம் 1.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

    மார்ச் மாதம் வசூல் செய்யப்பட்ட ரூ.1.42 லட்சம் கோடியில் மத்திய ஜிஎஸ்டி 25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 32,378 கோடியாகவும் உள்ளது. ஒன்றிணைந்த ஜிஎஸ்டி 74,470 கோடியாகவும், செஸ் வரி 9,417 கோடியாகவும் உள்ளது என, மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  9. இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் – நள்ளிரவில் வெடித்த வன்முறையை காட்டும் படங்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து ஜனாதிபதி வீட்டின் முன் நேற்று இரவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுகுறித்த சில புகைப்படங்கள்:

    இலங்கை பொருளாதார நெருக்கடி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, தடுப்புகளை தகர்த்த போராட்டக்காரர்கள் பேருந்து ஒன்றிற்கு தீ வைத்தனர்.
    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, ஜனாதிபதியின் வீட்டுக்கு வெளியே தொடங்கிய இந்த போராட்டம் அமைதியாகவே தொடங்கியது ஆனால் காவல்துறை கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தியதால் அது வன்முறையாக மாறியது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
  10. ரஷ்ய எண்ணெய் கிடங்கு தாக்குதல்: "உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது" - யுக்ரேன்

    ரஷ்யா - யுக்ரேன்

    பட மூலாதாரம், RUSSIAN MINISTRY OF EMERGENCY SITUATION

    ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடைபெற்றதாக கூறியுள்ள நிலையில், இதனை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

    தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நகரம் யுக்ரேன் தலைநகர் கீயவின் வடக்கில் அருகாமையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இந்த தாக்குதல் குறித்து தன்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார். ராணுவ தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    "நான் பொதுமக்களுள் ஒருவன்," என வார்சாவில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதனிடையே, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகமும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மொடுஸ்யானிக், "யுக்ரேன் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேன் தற்போது தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய பகுதிகளில் நடக்கும் எந்தவொரு அழிவுக்கும் யுக்ரேன் பொறுப்பு என்பது இதன் அர்த்தமாகாது...

    "இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ என்னால் முடியாது" என அவர் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  11. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு - கைதான பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி விசாரணை

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி காவல்துறை கடந்த 25ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், கைது செய்யப்பட்ட 8 பேரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிசிஐடி காவல்துறை ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து கடந்த 29ம் தேதியிலிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்த விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதை தொடர்ந்து, மதுரை கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு பள்ளி மாணவர்களை முதல்கட்டமாக 4 பேரை ஒரே இடத்தில் வைத்து பின்னர் தனித் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக, ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி பிரவீன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்ட அனைவரின் செல்போன்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் பள்ளி மாணவர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சிபிசிஐடி காவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

  12. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியவை என்னென்ன?

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

    அதன் விவரம்:

    "14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டுக்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோருதல்

    அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.

    மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகள்

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான காலக்கெடுவினை நீட்டிக்கக் கோருதல்

    சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022க்குப் பின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. திருவிழா மன நிலையில் தேர்வுகளுக்கு செல்லுங்கள் - பிரதமர் நரேந்திர மோதி

    "காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும். திருவிழா மன நிலையில் தேர்வுகளுக்கு செல்லுங்கள்" என, தேர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை வழங்கியுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோதி
  14. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, சனிக்கிழமை திறந்துவைக்க உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் டெல்லிக்கு வருகை தந்தார்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் செயல்பட்டு வரும் அரசு நவீன பள்ளி ஒன்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து, அரசு மொஹலா கிளினிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

    இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து உரையாடினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. இலங்கை: குடும்பம், குடும்பமாக திரண்ட மக்கள்; அதிபர் வீடு முன் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது

    நேற்றிரவு (வியாழக்கிழமை) இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

    இதுகுறித்த காணொளி:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், Russian Ministry of Emergency Situation

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    களத்தில் நடப்பது என்ன?

    • தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நகரம் யுக்ரேன் தலைநகர் கீயவின் வடக்கில் அருகாமையில் அமைந்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு யுக்ரேன் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
    • இந்த தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என, ரஷ்ய நாட்டின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
    • மேரியோபோலில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்திற்கு யுக்ரேன் மற்றும் ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக, செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    • மேரியோபோலில் உள்ள மக்களை வெளியேற்ற 54 யுக்ரேனிய பேருந்துகள் மற்றும் தனியார் கார்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மேரியோபோல் நகரம் கடந்த பல வாரங்களாக தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உள்ளானது.
    • வடக்கு யுக்ரேனில் உள்ள செரீனிஹிவ்வில் இருந்து ரஷ்யப்படைகள் திரும்பிசெல்வதாகவும், ஆனால் அவர்கள் அங்கிருந்து முழுவதும் திரும்பிச் செல்லவில்லை எனவும், அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் தொடர்ந்து "வெற்றியடைந்து வருவதாகவும்" ஆனால், கீயவின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பகுதிகளில் அதன் எதிர்தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அரசுமட்டத்தில் நடப்பது என்ன?

    • ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா வந்துள்ளார்.
    • ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள் சிறப்பு வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் என ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதற்கான புதிய விதிமுறைகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
  17. சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

    கே.பாலகிருஷ்ணன் சிபிஎம்

    பட மூலாதாரம், CPI(M) Puducherry

    படக்குறிப்பு, கே.பாலகிருஷ்ணன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் கடந்த மூன்று தினங்களாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வந்தது. மாநாட்டின் கடைசி நாளான இன்று அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த மாநாட்டில் 80 பேர் கொண்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கட்சி விதிப்படி 72 வயது நிறைவடைந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்திரராசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    80 பேரிலிருந்த 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களாக கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், ப.செல்வசிங், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், எஸ்.நூர்முகமது, பி.சண்முகம், என்.குணசேகரன், கே.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி, ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மீண்டும் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கே.பாலகிருஷ்ணனுக்கு, புதுச்சேரி சிபிஎம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. தமிழக சுங்கச் சாவடிகளில் 120 ரூபாய் வரை கட்டண உயர்வு - இன்று முதல் அமல்

    தமிழக சுங்கச் சாவடிகளில் 120 ரூபாய் வரை கட்டண உயர்வு இன்று முதல் அமல். இந்த கட்டண உயர்வு குறித்து உங்கள் பார்வை என்ன என்பது குறித்து கீழே உள்ள பிபிசி தமிழின் ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. வெளிநாட்டு கல்வி: மாணவர்களின் ஆர்வத்துக்கு காரணம் என்ன? படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி? - விரிவான அலசல்

      • எழுதியவர், முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
      • பதவி, இணைப் பேராசிரியர், கெரியட் வாட் பல்கலைக்கழகம், பிரிட்டன்
    வெளிநாட்டு கல்வி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகமெங்கும் பேசுபொருளாக தொடங்கியபோது, இந்தியாவில் இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருக்கும்போது, மாணவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியை இந்தியாவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். ஊடகங்களும் அதை வைத்து விவாதங்களை நடத்தின.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அவர்களில் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது கனவாக இருக்கலாம்.

    வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது அல்லது வெளிநாடுகளில் பயின்று விட்டு இந்தியா திரும்பும் போது முன்னோடி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கிறது.

    எனவே, வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. இக்கட்டுரையை விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  20. செரீனிஹிவில் இருந்து ரஷ்யப் படைகள் திரும்பி செல்கின்றனர் - ஆளுநர்

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், EPA

    வடக்கு யுக்ரேனில் உள்ள செரீனிஹிவ்வில் இருந்து ரஷ்யப்படைகள் திரும்பிசெல்வதாகவும், ஆனால் அவர்கள் அங்கிருந்து முழுவதும் திரும்பிச் செல்லவில்லை எனவும், அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, இன்று காணொளி பதிவு ஒன்றில் பேசிய ஆளுநர் வியாசெஸ்லாவ் சாவ்ஸ் கூறுகையில், "இந்த பிராந்தியத்தில் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இன்னும் சாத்தியமுள்ளது, இதனை யாரும் மறுக்க முடியாது," என அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேலும், ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை யுக்ரேன் படைகள் திரும்பி மீட்டுவருவதாகவும் அப்பகுதிகளில் யுக்ரேன் படைகள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால், செரீனிஹிவ்வில் யுக்ரேன் படைகள் தங்கள் பாதுகாப்பை விலக்கிக்கொள்வது இது மிகவும் முன்கூட்டியது எனவும், ரஷ்யப்படைகள் "இன்னும் எங்கள் நிலத்தில் உள்ளனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

    செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், "ஒருமித்த நம்பிக்கையை வலுப்படுத்த" செரீனிஹிவ் மற்றும் தலைநகர் கீயவை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைப்போம் என, ரஷ்யா கடந்த தெரிவித்திருந்தது.

    ஆனால், கடந்த புதன்கிழமை இரவு செரீனிஹிவில் தாக்குதல் தொடர்ந்ததாக, ஆளுநர் சாவ்ஸ் முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.