பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்
    • மீராபாய் சானுவுக்கு 2021-ஆம் ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
    • பாகிஸ்தான்: இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
    • யுக்ரேனில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் திங்கட்கிழமை செயல்படுத்தப்படாது என்று அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யா, யுக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவுகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
    • மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
    • 3500 கோடி ரூபாய் முதலீடு: லுலு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
    • பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு காவல் நீட்டிப்பு
  2. மீராபாய் சானுவுக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

    மீராபாய்

    2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த மீராபாய், தனது விளையாட்டு வாழ்க்கையின் தொடக்க காலத்தில், பல நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனால், அவர் ஒலிம்பிக் சாம்பியனாவதற்கு அனைத்து இடையூறுகளையும் முறியடித்தார்.

  3. கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது

    கர்ணம் மல்லேஸ்வரி

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வழங்கினார்.

  4. ஷஃபாலி வர்மாவுக்கு பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது

    ஷபாலி

    பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    2019-ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் டி-20 அணியில் பங்கேற்று சர்வதேசப் போட்டிகளில் ஷஃபாலி வர்மா விளையாடினார்.

    இந்த விருதுக்காக பிபிசிக்கு நன்றி தெரிவித்த அவர், "அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கா விளையாடுவேன் என நம்புகிறேன்" என்றார்.

  5. இது உடல் குறைபாடல்ல; எனது அதீதத் திறன் - பாலக் கோலி

    பாலக் கோலி

    'இது எனது உடல் குறைபாடல்ல, அதீதத் திறன்' என்று பாரலிம்பிக் பாட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி பேசினார்.

    பிபிசியின் இந்திய வீராங்கனை விருது வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், “இது எனக்கு இறக்கைகளை அளித்தது. பாராலிம்பிக் அரையிறுதியில் பங்கேற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையும் கிடைத்தது ” என்றார்.

  6. சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்

    பள்ளி மாணவர் உயிரிழப்பு

    இன்று வழக்கம் போல வேனில் பள்ளிக்கு சென்ற தீக்ஷித்தை, வேனில் இருந்து மாணவர்களை இறக்கி விடும் பெண் பணியாளர் ஞானசக்தி இறக்கி விட்டிருக்கிறார். வேனில் இருந்து கீழே இறங்கி வகுப்பறைக்கு செல்லும்பொழுது வேனில் டிபன் பாக்ஸை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வந்துள்ளது, அதை எடுப்பதற்காக மீண்டும் வேனை நோக்கி தீட்சித் ஓடி சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது, வேன் ஓட்டுனர் பூங்காவனம் வேனை பின்னோக்கி இயக்கிக்கொண்டிருந்தார். அங்கே ஓடிவந்த தீக்ஷித் வேனின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தான். உடனே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாணவனை கொண்டு சென்றனர். மாணவனின் தாய் ஜெனிபரிடம் பள்ளி நிர்வாகம் போனில் தகவல் தெரிவித்தது. பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் தீக்‌ஷித் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவன் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  7. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விழா - நேரலை

  8. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விழாவில் பிரபலங்கள்

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
    படக்குறிப்பு, பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

    2021ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் விளையாட்டு, அரசியல் மற்றும் அரசுத் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

    மொய்த்ரா
    படக்குறிப்பு, பிபிசியின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் பிபிசி இந்திய மொழிகள் ஆசிரியர் ரூபா ஜா ஆகியோருடன் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா (நடுவில்)

    டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை யார் என்பது தெரிய வரும். பிபிசியின் இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீராங்கனை மற்றும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்படும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, பாகிஸ்தான்: இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

    இம்ரான் கான்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

    பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில், இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அறிவித்தன.

    இந்த நடவடிக்கையின் முன்னணியில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) என்ற கூட்டணி உள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, PDM இன் தலைவர் மௌலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான், "இந்த முறைகேடான ஆட்சியாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர PDM-ல் உள்ள எல்லா கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று அறிவித்தார்.

    பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.

    ஆளும் பிடிஐக்கு, 155 இடங்கள் உள்ளன. மேலும், அது தன் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அரசை நடத்துகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷரீஃப் தாக்கல் செய்ததாக, பாகிஸ்தான் ஊடகத்தை மேற்கோளிட்டு ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

    • பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் கர்ணம் மல்லேஸ்வரி

      கர்ணம் மல்லேஸ்வரி

      2021ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழா சற்று நேரத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பங்கேற்றுள்ளார்.

      டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை யார் என்பது தெரிய வரும். பிபிசியின் இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீராங்கனை மற்றும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று அறிவிக்கப்படும்.

    • பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடக்கம் - டெல்லியில் இருந்து நேரலை

    • "ரஷ்ய போரால் யுக்ரேனுக்கு இதுவரை 564.9 பில்லியன் டாலர் இழப்பு"

      யுக்ரேன்

      பட மூலாதாரம், DSNS.GOV.UA

      யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பு நடத்திவரும் நிலையில், இதனால், யுக்ரேனுக்கு 564.9 பில்லியன் டாலர் (429.3 பில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இழப்பில், உள்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

      மேலும், இதனால், 8,000 கி.மீ தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதார அமைச்சர் யுலியா ஸ்விரிடென்கோ சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

      யுக்ரேனை ஆயுதமற்ற நாடாக மாற்றும் நோக்கத்தோடு "சிறப்பு ராணுவ நடவடிக்கையை" மேற்கொண்டு வருவதாக ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது.

      தூண்டப்படாத படையெடுப்புக்கான சாக்குப்போக்காக, ரஷ்யா இவ்வாறு கூறிவருகிறது என, யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகள் தெரிவித்துவருகின்றன.

    • இரவு 7 மணிக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது அறிவிப்பு

    • யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

      யுக்ரேன்

      பட மூலாதாரம், Reuters

      இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைகிறீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

      • யுக்ரேனில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் திங்கட்கிழமை செயல்படுத்தப்படாது என்று அந்நாட்டின் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
      • ரஷ்யா, யுக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதால், பாதிப்படைந்த மேரியோபோல் நகரத்திற்கு இன்னும் எந்த உதவுகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
      • யுக்ரேனின் முக்கிய துறைமுக நகரமான மேரியோபோல் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.
      • யுக்ரேனும் ரஷ்யாவும் இந்த வாரம் துருக்கியில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதில் நடுநிலை தன்மையை ஏற்றுக்கொள்வது பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
      • இந்த பேச்சுவார்த்தை பலனை அளிக்கும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாக, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
      • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா உடனான தமது நாட்டின் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுக்களில் யுக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தான் தனது முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
      • ரஷ்யப்படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், யுக்ரேனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், யுக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.
      • இதனிடையே, யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளன.
    • திருச்சி அருகே இ-பைக்கில் தீ விபத்து

      இ-பைக்

      திருச்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-பைக்கில் இருந்து புகை கிளம்பியது.

      திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் சிங்கப்பூரில் எலெக்ட்ரீஷியன் ஆக பணியாற்றி வருகிறார். அண்மையில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், மீண்டும் நேற்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக தனது இ-பைக்கில் (எலெக்ட்ரிக் பைக்) மணப்பாறைக்கு வந்துள்ளார்.

      பின்னர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள தனது நண்பர் பாலு என்பவரது கடையில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று விட்டார். இன்று காலை பாலு கடையினுள் இருந்து இ-பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்துள்ளனர்.

      இருப்பினும் சிறிது நேரத்தில் அதிகளவில் புகை வெளியேறிய நிலையில் பேட்டரி பகுதி முற்றிலும் சேதமடைந்தது. சமீபத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வினால் பலரும் இ-பைக்கிற்கு மாறிவரும் நிலையில், இதுபோன்று தீ விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

      இதனிடையே, இரு தினங்களுக்கு முன் வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா (49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்தனர். இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்:

      காணொளிக் குறிப்பு, நீங்கள் இ-பைக் வைத்திருப்பவரா? தீ விபத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
    • "ரஷ்யப்படைகளால் எங்கும் முன்னேற முடியவில்லை": யுக்ரேன்

      யுக்ரேன்

      பட மூலாதாரம், Getty Images

      ரஷ்யப்படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், யுக்ரேனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், யுக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.

      இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யப்படைகள் தாங்கள் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், கீயவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், ஆனால், "தலைநகரை கைப்பற்றுவதில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

      "எதிரிப்படைகள் (ரஷ்யப்படைகள்) மீண்டும் ஒருங்கிணைந்துள்ளன, ஆனால், அவர்களால் யுக்ரேனில் எங்கும் முன்னேற முடியவில்லை," என, அவர் தெரிவித்தார்.

      அதிகரித்துவரும் இழப்புகளுக்கு மத்தியில், செர்னோபில் வாயிலாக ரஷ்ய ராணுவக் குழுக்கள் பெலாரூஸில் ஒன்றிணைந்துள்ளதாக, யுக்ரேன் ஆயுதப்படை தளபதி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

      தலைநகர் கீயவை சுற்றி வளைக்கும் முயற்சிகளை வலுப்படுத்த ரஷ்யப்படைகள் திரும்பலாம் எனவும், அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2021: வெற்றியாளர் பெயர் இன்று அறிவிப்பு

      பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2021

      2021ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையை ரசிகர்கள் இன்று அறியவுள்ளனர்.

      டெல்லியில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர் யார் என்பது தெரிய வரும். பிபிசியின் இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீராங்கனை மற்றும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று அறிவிக்கப்படும்.

      பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருதுகளை வென்றவர்களுடன், இந்திய ஹாக்கி அணிகள் உட்பட டோக்யோ ஒலிம்பியன்கள், பாராலிம்பியன்கள் சிலரையும் பிபிசி கௌரவிக்கும்.

      இந்த விழாவில் பிபிசியின் தலைமை இயக்குநர் டிம் டேவி, விளையாட்டு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

      பிபிசியின் அனைத்து இந்திய மொழி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இந்நிகழ்வு குறித்த விவரங்களை நீங்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.

    • மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

      தாயை கொன்ற மகன்
      படக்குறிப்பு, சந்தோஷ் குமார்

      மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

      புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் லீலாவதி. இவரது மகன் சந்தோஷ் குமார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

      இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த சந்தோஷ் குமார் தன் தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

      இது தொடர்பான வழக்கில், சந்தோஷ் குமார் அன்னவாசல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று நீதிபதி அப்துல் காதர் இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.

      அதில், "சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி 40 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். தவறை உணரும் வகையில், முதல் மூன்று மாதத்திற்கு வாரத்தில் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும். அரசு சலுகைகள் எதுவும் வழங்கக்கூடாது. நன்னடத்தை விதிகளை காட்டி முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • 3500 கோடி ரூபாய் முதலீடு: லுலு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

      தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயை தொடர்ந்து இன்று அபுதாபியில் பல்வேறு முதலீட்டாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது குறித்துப் பேசினார்.

      இந்த சந்திப்பின்போது, லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் செய்யவுள்ள 3,500 கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

      இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மார்ச் 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்த முதலீட்டின் மூலம் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது லுலு நிறுவனம். அதில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

    • பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு காவல் நீட்டிப்பு

      தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பு மூலம் சந்தைத் தரவுகளை முன்னுரிமையாக ஒரு தரகருக்குத் திறந்துவிட்டதாக 2018 மே மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கைது செய்யப்பட்ட தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஏப்ரல் 11 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      X பதிவை கடந்து செல்ல
      X பதிவை அனுமதிக்கலாமா?

      இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

      எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

      X பதிவின் முடிவு

      முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும், மும்பை மற்றும் சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.