பல ஆண்டுகளாக போரை நடத்த யுக்ரேன் விரும்பவில்லை: ஸெலென்ஸ்கி

“நாங்கள் வாழ விரும்புகிறோம், எங்கள் மக்களை காப்பாற்ற விரும்புகிறோம்,” என ஸெலென்ஸ்கி கூறினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இலங்கையில் பரிதவிக்கும் தமிழர்கள்: தமிழ்நாடு அரசு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தரும் - முதல்வர் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்
  2. ரஷ்யா – யுக்ரேன் போர்: இந்த தலைமுறையின் மிக தீவிரமான பாதுகாப்பு நெருக்கடி – நேட்டோ

    யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், AFP/GETTY

    ரஷ்யா – யுக்ரேன் போர் குறித்து விவரித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க், யுக்ரேனில் நடைபெறும் போர் “இந்த தலைமுறையில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான பாதுகாப்பு நெருக்கடி” என தெரிவித்துள்ளார்.

    பிரஸ்ஸல்ஸில் இன்று நேட்டோ அவசரகால உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் நேட்டோ நாடுகளின் தலைவர்களிடையே யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உரையாற்றுவார் என, அவர் தெரிவித்தார். நேட்டோ நாடுகள் ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடியை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    நேட்டோ நாடுகள் இவ்விவகாரம் தொடர்பாக மேலும் பலவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், ”பாதுகாப்பு துறையில் முதலீட்டை அதிகரிக்க” நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் தெரிவிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    “யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடியை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இன்றைய சந்திப்பு உணர்த்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.

  3. லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ

    வருமான வரித்துறை அதிகாரி கைது
    படக்குறிப்பு, டேனியல் ராஜ்

    கோவையில் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறி வருமான வரித்துறை துணை ஆணையர் டேனியல் ராஜ் மற்றும் தணிக்கையாளர் ஸ்ரீகாந்த் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

    கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பால தண்டபாணி என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

    பால தண்டபாணி விற்பனை செய்த விவசாய நிலம் ஒன்றின் மீது வருமான வரி செலுத்த வேண்டும் என்கிற விவகாரம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வருமான வரித்துறையிடம் இருந்து வருகிறது.

    இந்நிலையில், நிலம் தொடர்பான விவகாரத்தை சுமூகமாக பேசி முடிக்க தணிக்கையாளர் ஸ்ரீகாந்த் மற்றும் துணை ஆணையர் டேனியல் ராஜ் ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ரூ.2.5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட பால தண்டபாணி, டேனியல் ராஜும் ஸ்ரீராந்த்தும் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரசாயனம் தடவிய 50,000 ரூபாயை பால தண்டபாணியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். மார்ச் 22ஆம் தேதி மாலையில் டேனியல் ராஜ் அந்த நோட்டுகளை வாங்கியபோது அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, டேனியல் ராஜ் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக கூறியதால் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

    பிறகு டேனியல் ராஜுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்து, தெரிவித்த நிலையில், அவரையும் ஸ்ரீகாந்த்தையும் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவருக்கும் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்களும் ரூ.5.75 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

  4. நாங்கள் ஏன் இந்தியாவுக்குள் நுழைந்தோம்? இலங்கையில் என்ன பிரச்னை?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி

    உமர் காலித்

    பட மூலாதாரம், HTTPS://WWW.FACEBOOK.COM/UMAR.KHALID.984

    படக்குறிப்பு, உமர் காலித்

    டெல்லி கலவர வழக்கில் கைதானவர் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித். இவருடைய ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் கலவரத்தில் முடிந்தன. 2020 பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை 13ம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் பிரமாண பத்திரத்தின்படி, இறந்தவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.

    கலவரத்தின் பின்னால் ஆழ்ந்த சதி நடந்ததாக, டெல்லி போலீஸ் சிறப்புப்பிரிவும் குற்றப்பிரிவும் கூறுகின்றன. எஃப்.ஐ.ஆர் 59 இந்த சதித்திட்டம் பற்றியது.

    இதில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) மூன்று பிரிவுகள் போடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை ஜாமீன் இல்லாமல் நீண்ட காலம் சிறையில் அடைக்க சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சட்டத்தின்கீழ் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் செப்டம்பர் 13, 2020 அன்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்து, அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, உமர் காலித் ஜாமீன் மனு மார்ச் 14 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்மனு மீதான விசாரணை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், உமர் காலித்திற்கு ஜாமீன் வழங்குவதற்கு “தகுதியோ முகாந்திரமோ இல்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. “தனுஷ்கோடின்னு சொல்லி இறக்கினாங்க, ஆனா அது நடுக்கடல்” கைக்குழந்தையுடன் கடலில் தவித்த இலங்கைத் தமிழ் தம்பதி

      • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    இலங்கை பொருளாதார நெருக்கடி
    படக்குறிப்பு, தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதி

    இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் கூலி தொழிலாளியான கஜேந்திரனால் குடும்ப பொருளாதார சுமையை சமாளிக்க முடியவில்லை. இதனால் இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக வந்ததை போல் மீண்டும் பட்டினிச்சாவுக்கு பயந்து கஜேந்திரனும் அவரது மனைவியும் 4 மாத குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து ஃபைபர் படகில் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கினர்.

  7. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Ukraine Emergency Services

    படக்குறிப்பு, யுக்ரேனின் செரீனிஹிவில் ரஷ்யப் படைகளால் நடைபெற்ற தாக்குதல்: கோப்புப்படம்

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்து இன்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், யுக்ரேனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
    • பிரஸ்ஸல்ஸில் இன்று அவசரகால நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார்.
    • கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் படைகளை அதிகப்படுத்துவதற்கான ஒப்புதலை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் வழங்குவார்கள் என, நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
    • ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா ஆகிய நாடுகளில் நான்கு புதிய படைக்குழுக்கள் அனுப்பப்படும் எனவும், யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்ய படையினர் யுக்ரேனில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  8. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை பரணி தரன் மற்றும் பிரசாந்த் முத்துராமன் வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  9. யுக்ரேனுக்கு ஆதரவைக் காட்ட போராடுங்கள்: அழைப்பு விடுக்கும் ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், ZELENSKY

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

    யுக்ரேனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    தனது சமீபத்திய காணொளியில் அவர் வழக்கத்துக்கு மாறாக யுக்ரேனிய மொழியில் அல்லாது ஆங்கிலத்தில் பேசினார். ரஷ்யாவின் போர் யுக்ரேனுக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது - ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் என்று ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

    "உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால் யுக்ரேனை ஆதரிக்கவும், சுதந்திரத்தை ஆதரிக்கவும், எங்களுடைய வாழ்க்கையை ஆதரிக்கவும் வாருங்கள்" என்று ஸெலென்ஸ்கி அந்த காணொளியில் அழைப்பு விடுத்தார்.

    Instagram பதிவை கடந்து செல்ல
    Instagram பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    Instagram பதிவின் முடிவு

  10. யுக்ரேன் போர்: "எதிரி யார், நண்பன் யார் என்பது இன்று தெரிந்து விடும்" - ஸெலென்ஸ்கி

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

    பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெறவுள்ள அவசரகால உச்சிமாநாட்டில் நமது நண்பர் யார், எதிரி யார் என்பது தெரிந்து விடும் என்று யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் புதன்கிழமை பிற்பகலில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அதில், யுக்ரேனின் நட்பு நாடுகள் போரில் தலையிடுவதைத் தடுக்க ரஷ்யா தனது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    "ரஷ்யர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ரஷ்யாவுடன் அதன் சில கூட்டாளி நாடுகள் வேலை செய்கின்றன. இன்று நடைபெறவுள்ள ஜி7, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய மாநாடுகள் முக்கியமானது. அதில் நமது நிலைப்பாட்டை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.

    "இந்த மூன்று உச்சிமாநாடுகளில் யார் நண்பர், யார் கூட்டாளி, யார் பணத்திற்காக நம்மை ஏமாற்ற முடியும் என்பது தெளிவாகத் தெரியும்," என்று ஸெலென்ஸ்கி காணொளியில் பேசியுள்ளார்.

    ஐரோப்பாவின் 40 சதவீத எரிவாயு விநியோகம் ரஷ்யாவில் இருந்தே இயக்கப்படுகிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதற்கு முன் ஐரோப்பிய தலைவர்கள் மாற்று எரிசக்தி ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியும் காணொளி மூலம் பேசவிருக்கிறார். அப்போது யுக்ரேனில் படையெடுப்பை தீவிரமாக்கும் ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் விமானம் மற்றும் விமான எதிர்ப்பு ராணுவ தளவாடங்களை வழங்குமாறு அவர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  11. யுக்ரேனில் நடக்கும் மோதலில் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி - நேட்டோ

    யுக்ரேன் ரஷ்யா போர்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் நடந்து வரும் போரில் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோவின் மூத்த அதிகாரி ஒருவர் ஏபி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு, போரில் 7,000 முதல் 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000 முதல் 40,000 ரஷ்யர்கள் சண்டையில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று தெரிவித்தார்.

    மார்ச் 2 முதல் இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் எதையும் ரஷ்யா வெளியிடவில்லை.

    ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகால ஆக்கிரமிப்பில் சுமார் 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதேவேளை யுக்ரேனிய ராணுவமும் அதன் உயிரிழப்புகள் குறித்து தெளிவற்றதாக உள்ளது. அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு போரில் 1,300 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் பிந்தைய உயிர் சேதம் தொடர்பாக அவர் இதுவரை கருத்து வெளியிடவில்லை.

  12. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம் நேற்றைய நேரலை பக்கத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது பரணி தரன் மற்றும் பிரசாந்த் முத்துராமன்.

    உங்கள் பகுதியின் செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இங்கே.

    • பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், யுக்ரேன் தலைநகர் கீயவை முற்றுகையிட்டிருக்கும் ரஷ்ய துருப்புக்கள் மனச்சோர்வுடன் உள்ளதாகவும் அவர்கள் சுற்றி வளைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறுகிறது.
    • நேட்டோ தலைவர்கள் பங்கேற்கும் அவசரகால உச்சிமாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளைக் குவிக்க ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று நேட்டோவின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
    • ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு நான்கு புதிய போர்க்கால குழுக்கள் அனுப்பப்படும் என்று யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகிறார்.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய்க்கு செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அவர் துபாய், அபு தாபியில் தொழிலதிபர்களுடன் பேச திட்டமிட்டுள்ளார்