நன்றி நேயர்களே...
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
- யுக்ரேன் – ரஷ்யா போர் இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் கூடினர்.
- யுக்ரேன் – ரஷ்யா போர் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ளனர். நேட்டோ வரலாற்றில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
- கிழக்கு ஐரோப்பா மற்றும் ஸ்லொவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான படையினரை நிறுத்துவதற்கு இம்மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் ஸெலென்ஸ்கி யுக்ரேனியர்களின் தைரியத்தைப் பாராட்டிய அதே வேளையில், “எங்கள் வானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தினார். யுக்ரேன் வான் தளத்தை 'நோ ஃப்ளை சோன்'ஆக (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவார் என தோனி முடிவு செய்துள்ளதாக அந்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசிதமிழின்புதியநேரலைப்பக்கம்நாளைகாலைமீண்டும்தொடங்கும். மேலதிகச்செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசிதமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும்செய்திகளைஅறியலாம்.