நன்றி நேயர்களே...
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
- யுக்ரேன் தலைநகர் கீயவின் மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான மகாரீவ் பகுதியில் மீண்டும் யுக்ரேனின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எனினும், யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் ரஷ்யப்படைகள் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்திவருகிறது.
- மேரியோபோல் நகர மக்கள்தொகையில் கால்வாசி மக்கள் அல்லது சுமார் 1,00,000 பேர் “மனிதநேயமற்ற சூழல்களில்” இன்னும் சிக்கியுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில் ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் எட்டு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ‘நியாயமான’ முறையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல இல்லாமல் இந்த அரசு குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்தார்.