நன்றி நேயர்களே...
மார்ச் 9ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
- செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.
- வடகிழக்கு நகரமான சுமியில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து இன்னும் ஏராளமான மக்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலுக்கு உள்ளான சுமியிலிருந்து செவ்வாய்க்கிழமை சுமார் 7,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
- சுமியில் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
- கீயவ், செரீனிஹிவ், சுமி, கார்கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களிலும் மனிதநேய வழித்தடம் அமைக்கப்படும் என, ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
- ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து, யுக்ரேனிலிருந்து 20 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
- ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜேய் லாஃபராவ் மற்றும் யுக்ரேனின் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா இருவரும் நாளை, வியாழக்கிழமை துருக்கியில் சந்திக்க உள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
- யுக்ரேன் தலைநகர் கீயவ்வின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்திவரும் நிலையில், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்

















