யுக்ரேன் கோரிக்கைக்கு நேட்டோ தயங்குவது ஏன்?
யுக்ரேன் கோரிக்கைக்கு நேட்டோ தயங்குவது ஏன்? யுக்ரேனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதைத் தடுக்க நேட்டோவால் முடியாதது ஏன்? இந்த காணொலியை காணுங்கள்:
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொளியை வெளியிட்டுள்ளார்.
நந்தினி வெள்ளைச்சாமி
யுக்ரேன் கோரிக்கைக்கு நேட்டோ தயங்குவது ஏன்? யுக்ரேனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதைத் தடுக்க நேட்டோவால் முடியாதது ஏன்? இந்த காணொலியை காணுங்கள்:
இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 14-வது நாளில் என்ன நடந்தது என்பதை இங்கே வழங்குகிறோம்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
யுக்ரேனின் வடகிழக்கு நகரமான சுமியில், நேற்று மனிதநேய வழித்தடம் மூலம் அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியது. இந்நிலையில், இன்றும் அந்த பணி தொடரும் என சுமி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சுமார் 5,000 பேர் சுமியிலிருந்து வெளியேறியுள்ளதாக, யுக்ரேன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லையில் உள்ள சுமியில் கடந்த சில தினங்களாக ரஷ்ய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தின.
இதில், கடந்த திங்கள்கிழமை மட்டும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் லட்சுமி காந்த் பாரதி வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளுடன் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் இதை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மக்கள் நலன் கருதி முடிவுகள் எடுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும். ஆற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்" என்றும் கூறினார்.
எண்ணெய் விலைஉயர்வு பற்றி ராகுல் காந்தி போட்ட ட்வீட் பற்றி கேட்டபோது, "ஒரு இளம் தலைவர் 'ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வர உள்ளது. அதனால் தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டாங்குகளை நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்."
ஆனால், ரஷ்யா படையெடுப்பு அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும்" என்று கூறினார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியுள்ள கங்குபாய் திரைப்படத்தின் மூலம் இணையத்தில் தேடுபொருளாகியிருக்கிறார் கங்காபாய். எழுத்தாளர் சைதி ஹுசைன் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இது படமாகி இருக்கிறது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் என்ன சொல்கிறது இந்தப் புத்தகம்? உண்மையான கங்குபாயின் கதை என்ன?
அந்த 16 வயதுப் பெண்ணுக்கு இது ஒரு வினோதமான அனுபவம். நன்கு அலங்கரிக்கப்பட்டு தான் இந்த அறையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதன் காரணம் முழுமையாகத் தெரியவில்லை என்றபோதும் தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று மட்டும் அவளது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.
ஆம். அவள் நினைத்தபடி அந்தத் தவறு நடக்கத்தொடங்கியது. அறைக்கதவு திறக்கப்பட்டது முதல், முதல் வாடிக்கையாளர் வெறுப்படைந்து, பாலியல் தொழிலாளர் விடுதி பொறுப்பாளரான பெண்ணிடம் அதிருப்தி தெரிவித்தது வரை என எல்லாமே அன்று அந்தப் பெண்ணுக்கு எதிராகத்தான் நடந்தன.
ரஷ்யா தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி அடுத்து, வடகிழக்கு யுக்ரேனிய நகரமான சுமியில் இருந்து ஆயிரக்கணக்கான யுக்ரேனிய குடியிருப்பாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய வெளியேற்றத்தில், மக்களைப் பேருந்துகள் மூலம் தெற்கே உள்ள பொல்டாவா நகரத்தை நோக்கி சென்று வருகின்றனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியை புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் ஒரு நாள் காவல் நிலைய அதிகாரியாக பணி அமர்த்தியுள்ளனர். எப்படி நடந்தது இது? யார் இந்த மாணவி?
இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுவதுமாகப் பாருங்கள்.
கோவையிலிருந்து யுக்ரைனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற சாய் நிகேஷ் என்கிற நான்காம் ஆண்டு மாணவர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் சுப்ரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சாய் நிகேஷ். கடந்த 2018-ம் ஆண்டு கோவை வித்யா விகாஷினி பள்ளியில் படிப்பை முடித்தவர். இந்திய ராணுவத்தில் சேர இரண்டு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அது சாத்தியப்படாத நிலையில் அமெரிக்க இராணுவத்தில் இணைய முடியுமா என்று அமெரிக்க தூதரகத்திலும் விசாரித்துள்ளார்.
சாய் நிகேஷின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் யுக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய விண்வெளி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் பொறியியல் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் யுக்ரேனில் போர் தொடங்கிய பிறகு இந்திய மாணவர்கள் வெளியேறிய நிலையில் சாய் நிகேஷ் கார்கிவ் நகரை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
நாடு திரும்ப அவரின் பெற்றோர் வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை என்கிறார்கள் சாய் நிகேஷின் உறவினர்கள். சாய் நிகேஷுக்கு தம்பி ஒருவர் உள்ளார்.
யுக்ரேனில் வடகிழக்கு நகரமான சுமியில் இருந்து மக்களை வெளியேற்றும் இரண்டு நிலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.
"சுமார் 5,000 பேர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் ஏற்கனவே பாதுகாப்பாக உள்ளன" என்று அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ கூறியுள்ளார்.
புதன்கிழமை அதிகாலையில், திமோஷென்கோ தனது டெலிகிராம் கணக்கில், இரவு நேரத்தில் மக்கள் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சிகளை வெளியிட்டார். வேறு எந்த கூடுதல் விவரங்களையும் அதில் வழங்கவில்லை.
ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள சுமி, பல நாட்களாக ரஷ்யாவால் கடுமையான குண்டுவெடிப்புக்கு உள்ளானது. கடந்த திங்கள்கிழமை மட்டும், ரஷ்ய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய நிமிடங்களில், யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதாக, அப்பகுதியில் உள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கீயவ் நகரில் மீண்டும் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன். உள்ளூர் நேரப்படி தற்போது 06:00 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
யுக்ரேன் இராணுவம் மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 24:00 (22:00 GMT) முதல் கணக்கெடுத்துக் கொள்ளப்படும், அதன் சமீபத்திய "செயல்பாட்டுத் தகவலை" வெளியிட்டது.
அதில் ரஷ்ய படையெடுப்பின் 13 ஆம் நாளின் சுருக்கத்தை வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில், "ரஷ்யா படையினரின் நடவடிக்கை குறைந்துள்ளது, மேலும் பொது மக்களின் உட்கட்டமைப்புகளை ஏவுகணை மற்றும் குண்டுகளால் தாக்குவதே அவர்களின் முதன்மையாக உள்ளது" என்று யுக்ரேனின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
கீயவ், சுமி, கார்ஹிவ், மேரியோபோல் , மைகோலாயிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்து கைப்பற்றுவதில் ரஷ்யா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், ரஷ்யாவிற்கும், இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்திற்கும் இடையே நில வழித்தடத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அது கூறியது.
ரஷ்ய ராணுவம் தொடர்ந்து கணிசமான இழப்பை சந்தித்து வருவதாகவும், " குழாய்களின் வலையமைப்பை" அமைப்பதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அது கூறியது.
இந்த அறிக்கை பிபிசியால் சரி பார்க்கப்படவில்லை.
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் தங்கள் ஏற்றுமதி மற்றும் தேநீர் கடைகளைின் செயல்பாடுகள் உட்பட, அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்த உள்ளதாக கூறியுள்ளது.
முன்னதாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், ரஷ்யாவில் உள்ள தங்கள் அனைத்து உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாகவும், செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், கடந்த வெள்ளிக்கிழமை இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார். இந்நிலையில், விரைவாக உடல் எடையை குறைக்க 14 நாட்களாக அவர் திரவ உணவு முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது.
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பழைய புகைப்படத்தை ட்வீட் செய்து, "ஜூலைக்குள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வடிவத்திற்கு திரும்ப வேண்டும் என்பது இலக்கு." என்று தெரித்திருந்தார்.
இதற்கு முன்பு அவர் பலமுறை முயற்சித்த உணவு முறைதான் இது என்று ஷேன் வார்னின் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது திடீர் மரணத்திற்கும் இந்த உணவு முறைக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை
ரஷ்யாவில் புதிய ஊடகச் சட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர், தங்கள் பணியை நிறுத்திவைத்த சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பிபிசி செய்தியாளர்கள் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.
ரஷ்யாவின் ஆயுதப் படைகளைப் பற்றி "போலி" செய்திகளைப் பரப்பினால் அவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. "கவனமாக ஆலோசித்த பிறகு" பணியை மீண்டும் தொடங்க பிபிசி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் "புதிய சட்டத்தின் தாக்கங்களை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், ரஷ்யாவிற்குள் இருந்து செய்தியை வழங்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.
ரஷ்யாவில் உள்ள எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. பிபிசியின் தலையங்க தரங்களுக்கு உட்பட்டு, நாங்கள் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செய்திகளை வழங்குவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நாங்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்: