ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்
ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
சுமி வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், State Emergency Services of Ukraine via REUTERS
படக்குறிப்பு, கோப்புப்படம்
யுக்ரேனின் சுமியில் நடைபெற்ற வெடிகுண்டு
தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின்
கூற்றை மேற்கோள்காட்டி, ஏஎஃப்பி
செய்தி முகமை இதனை தெரிவித்துள்ளது.
சுமியில்
நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வான்வழி தாக்குதல்களில், சில வீடுகள் அழிக்கப்பட்டன. ஒரு கட்டிடத்தில் தீப்பிடித்தது.
இந்த
தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் இதில் காயமடைந்தார்.
சுமார்
700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் பகுதி சுமி. செரீனிஹிவ்
பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பற்றிய நெருப்பு, செவ்வாய்க்கிழமை காலை அணைக்கப்பட்டது.
கிழக்கு
யுக்ரேனில் உள்ள கார்கீவில் ரஷ்ய தாக்குதலில், 9 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில்
தீப்பிடித்தது. அந்த தீயை அணைக்க 4 மணிநேரத்திற்கும் மேலானது. இதில், 4 பேர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
அர்ச்சனா ஸ்டாலின்: குடும்ப மருத்துவர் போல, குடும்ப விவசாயி - இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒரு புதிய முயற்சி
கட்டுரை தகவல்
எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
பதவி, பிபிசி தமிழ்
குடும்ப டாக்டர் போல, குடும்ப விவசாயி என்ற ஒரு கருத்தை உருவாக்கி கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி தொழில் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.
ரஷ்யாவின் ராணுவ மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டார்: யுக்ரேன்
பட மூலாதாரம், Ukrainian ministry of defence
கார்கீவ் அருகே நடைபெற்ற சண்டையில்,
ரஷ்ய ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக,
யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.
இது குறித்து, ரஷ்ய
அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
யுக்ரேன்
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர், மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ் என்றும், அவர்
ரஷ்யாவின் 41வது ராணுவப் பிரிவின் முதல் துணை கமாண்டர்
என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள்
சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளனர் எனவும்,
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த
விடாலி கெராசிமோவ் இரண்டாம் சேசென் போரிலும்,
சிரியாவில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் என, யுக்ரேன் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. “கிரைமியாவை திரும்பப் பெற்றதற்காக”
அவர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
விடாலி
கெராசிமோவ் என கூறப்படும் ஒருவரின் புகைப்படம் ஒன்றையும் யுக்ரேன் அதிகாரிகள் ட்விட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கெராசிமோவ் இறப்பு குறித்து, பிபிசி வெளியுறவு நிருபர் பால் ஆடம்ஸ் ட்விட்டர்
பக்கத்தில் பகிர்ந்துள்ளவை:
“இந்த தேவையற்ற போரின் விளைவு என்னவாக
இருந்தாலும், ரஷ்ய ராணுவத்திற்கு இது ஒரு தவிர்க்க
முடியாத பேரழிவாகும். இதன் முடிவுகள் பேரழிவு தரக்கூடியவை. "வெற்றி"
எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பது கடினமாகிக்கொண்டே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தொடர்ந்து தாக்குதல் தொடுக்கும் ரஷ்ய படைகள்; பதறியடித்து ஓடிய மக்களுக்கு உதவிய யுக்ரேன் ராணுவம்
யுக்ரேனில் உயிரிழந்த இந்திய மாணவர் உடல் தாயகம் திரும்புவது எப்போது? – கர்நாடக முதலமைச்சர் பதில்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, பசவராஜ் பொம்மை
ரஷ்ய
ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கார்கிவ் நகரில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவர்
நவீன் சேகரப்பா, கடந்த 1ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அங்கு ஷெல்
தாக்குதல் நிறுத்தப்பட்ட பின்னர், அவரது உடல் இந்தியாவுக்குக்
கொண்டு வரப்படும் என, கர்நாடக அரசிடம் வெளியுறவு துறை அமைச்சர்
ஜெய்சங்கர் தெரிவித்ததாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
தெரிவித்துள்ளார்.
தற்போது
மாணவர் நவீனின் உடல் யுக்ரேனில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என, கர்நாடக முதலமைச்சர்
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
“யுக்ரேனில்
உள்ள பிணவறையில் மாணவர் நவீனின் உடல் வைக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு துறை அமைச்சர்
ஜெய்சங்கர் எங்களிடம் தெரிவித்தார். தாக்குதல் நிறுத்தப்பட்ட பின்னர், அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும்” என அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நவீனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் வழங்கினார். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
நவீன் சேகரப்பா கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கார்கிவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் எம்பிபிஎஸ் படித்து வந்தார். உணவு வாங்கும்போது ரஷ்ய தாக்குதலால் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக மேலும் பல தடைகளை விதித்த ஜப்பான்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பைக் கண்டித்து டோக்கியோவில் நடைபெற்ற பேரணி.
ரஷ்யா மற்றும் பெலாரூஸுக்கு எதிராக மூன்றாவது
சுற்று தடைகளை ஜப்பான் விதித்துள்ளதாக, அந்நாட்டின் நிதித்துறை தெரிவித்துள்ளது.
புதிதாக
விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகள்,
மேலும் 20 ரஷ்யர்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை ஏற்படுத்தும். இவர்களுள்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தில், அலுவலர்கள் குழுவுக்கான துணை தலைவர்கள், நாடாளுமன்ற
துணை தலைவர்கள், சேசென் குடியரசின் தலைவர் மற்றும்அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுடைய வோல்கா குரூப்,
டிரான்ஸ்நெட் மற்றும் வாக்னெர் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல் அதிகாரிகளும் அடங்குவர்.
மேலும் 2 ரஷ்யர்கள், பெலாரூஸை சேர்ந்த 12 பேர் மற்றும்
12 பெலாரூஸ் நிறுவனங்களும் இதில் அடங்கும்.
மேலும், ரஷ்யாவுக்கு எண்ணெய்
சுத்திகரிகரிப்பு உபகரணங்கள், ராணுவத்தால் பயன்படுத்தப்படும், பெலாரூஸுக்கு உட்பட்ட பொது பயன்பாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஜப்பான்
தடை விதித்துள்ளதாக, ஜப்பான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"நான் யாருக்கும் அஞ்சவில்லை": யுக்ரேன் அதிபர் வெளியிட்ட காணொலி
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
சுமி வான்வழி தாக்குதல்: குழந்தைகளும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி தகவல்
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, கோப்புப்படம்
யுக்ரேனின் சுமி மற்றும் அதன் புறநகர்
பகுதிகளில் வான்வழி தாக்குதலில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டது குறித்து, உள்ளூர் ராணுவ அதிகாரி கூறியதன்
அடிப்படையில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில்,
சுமி ராணுவ நிர்வாக தலைவர் டிமிட்ரோ லெவிட்ஸ்கி கூறுகையில், உள்ளூர் நேரப்படி 23:00
மணியளவில் ரஷ்ய ராணுவ
விமானங்கள் வட-கிழக்கு நகரமான சுமியில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
“இதில்
குழந்தைகளும் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ள அவர், 10க்கும் மேற்பட்டவர்கள்
இத்தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது
இக்கூற்றை பிபிசியால் தன்னிச்சையாக சரிபார்க்க இயலவில்லை.
“குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்” என,
அவர் வெளியிட்ட முகநூல்
பதிவில் தெரிவித்துள்ளார். அந்த தாக்குதல் குறித்த காணொலியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
“இதனை
நாங்கள் எப்பொழுதும் மன்னிக்க மாட்டோம்” என அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்: ரஷ்யா, யுக்ரேனுக்கு அழைப்பு விடுத்த ஐநா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மார்ட்டின் கிரிஃபித்ஸ்
படையெடுப்பிலிருந்து தப்பிக்கும் மக்களின்
பாதுகாப்பு மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்ய
வேண்டும் என, யுக்ரேன்
மற்றும் ரஷ்யா ஆகிய இருதரப்பினருக்கும் ஐநாவின் மனிதநேய அலுவலர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்
அழைப்பு விடுத்துள்ளார்.
ஐநா
மற்றும் அதுசார்ந்த அமைப்புகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கிவருகிறது. ஆனால், சில பகுதிகளில் அவை
சென்றடைவதில்,அங்கு
நிலவும் பாதுகாப்பு சூழல்களால் சிரமங்கள் ஏற்படுகின்றன.
மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை தடுப்பதாக
இரு நாடுகளும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், ஐநா இவ்வாறு தெரிவித்துள்ளது.
மக்கள்
ஐரோப்பாவுக்கு தப்பிப்பது மற்றும் உயிர்காக்கும் உதவிகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும்
வகையில், மனிதநேய வழித்தடங்களில் ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்துவதாக, ஐநாவுக்கான யுக்ரேன் தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், மக்கள் பாதுகாப்பாக தப்பிப்பதை யுக்ரேன்
தான் மறுப்பதாக, ஆதாரமற்ற வகையிலான இந்த குற்றச்சாட்டுகளை ஐநாவுக்கான ரஷ்ய தூதர் மறுத்துள்ளார்.
யுக்ரேனில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
மனிதநேய உதவிகளை மேற்கொள்வதற்காக, தனது அலுவலகம் மாஸ்கோவுக்கு குழுவை அனுப்பியுள்ளதாக, ஐநா பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களிடம் கிரிஃபித் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை எதிர்கொள்ளும் யுக்ரேனிய பெண்கள்
ரஷ்ய தாக்குதல்களால் யுக்ரேனை விட்டு வெளியேறும் நிலையில், கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகிய சர்வதேச மகளிர் தினத்தை எதிர்கொள்ளும் இந்த யுக்ரேனிய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இடம்: ப்ரெஸ்மிஸ்லில், போலந்து, மார்ச் 6
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இடம்: ப்ரெஸ்மிஸ்லில், போலந்து, மார்ச் 6
வணக்கம் நேயர்களே!
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி
தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர்
மற்றும் லட்சுமி காந்த் பாரதி ஆகியோர் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான்
வழங்கவிருக்கிறேன்.
யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும்
படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
யுக்ரேன் அகதிகள்: எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் எங்கு செல்லக்கூடும்?
பட மூலாதாரம், GETTY IMAGES
யுக்ரேனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) மதிப்பிட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பு அகதிகள் மீதான தனது விதிகளை தளர்த்தியுள்ளது மற்றும் தனது உறுப்பு நாடுகள் அகதிகளை "திறந்த கரங்களுடன்" வரவேற்பதாகவும் கூறியுள்ளது.
இரான் மற்றும் சிரியாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக தடைகள் பெற்ற நாடாக ரஷ்யா மாறியுள்ளது என்று பொருளாதார தடைகள் கண்காணிப்பு இணையதளமான காஸ்டெல்லம்.ஏஐ(Castellum.ai) தெரிவித்துள்ளது.
காஸ்டெல்லம்.ஏஐ இணையதளதின் தகவல் படி பிப்ரவரி 22 க்கு முன்னர் ரஷ்யாவிற்கு எதிராக 2,754 தடைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்தன.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு அடுத்த நாள் சுமார் 2,778 தடைகள் விதிக்கப்பட்டன, எனவே மொத்தமாக ரஷ்யா 5,532 பெற்ற நிலையில், இதற்கு முன்னதாக 3,616 பொருளாதாரத் தடைகளை பெற்று முன்னணியில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளியது.
ரஷ்யா மீது தற்போது போடப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில், அமெரிக்கா 21 சதவீத தடைகளை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 18 சதவீத தடைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
யுக்ரேன் மீதான தாக்குதலை நிறுத்த, ரஷ்யா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யுக்ரேனுக்கு 700 மில்லியன் டாலர்களை உலக வங்கி ஒப்புதல்
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் அரசாங்கம் பொதுத்துறை ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதற்கு உதவுவதற்காக 72 கோடி டாலர்கள் அவசரகால நிதியுதவியாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பணத் தொகை பிரிட்டன்,நெதர்லாந்து, ஸ்வீடன், ஜப்பான், டென்மார்க், லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் நிதியுதவியால் வந்தது.
யுக்ரேன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இன்னும் 300 கோடி டாலர்கள், வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி வழங்க உள்ளதாக உலக வங்கி கூறுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
யுக்ரேன் மீதான ரஷ்ய படைப்பில் தற்போது வரை நடந்தது என்ன
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 13வது நாளாக இன்றும் தொடர்கிறது, கடந்த 24 மணிநேரத்தில் நடந்த சில முக்கிய முன்னேற்றங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர், துறைமுக நகரமான மரியுபோலில் உணவு மற்றும் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.
பல அகதிகள் பிரான்சில் இருந்து கலேஸ் துறைமுகம் வழியாக பிரட்டன் எல்லையை கடக்க முயற்சிக்கின்றனர்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 589 பேர் அங்கு வந்துள்ளனர் என்று கலேஸின் துணை அரசியல் தலைவர் வெரோனிக் டெப்ரெஸ்-போடியர் தெரிவித்தார். 286 பேர் இங்கிலாந்து அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ஐரோப்பாவுக்கான இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுக்ரேனிய வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது சமீபத்திய காணொளி உரையில், "இந்தப் போரில் வெற்றிபெறும் வரையில்" கீயவில் தங்கியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
கோகோ கோலா மற்றும் மெக்டொனால்ட்ஸ் ஆகியவை ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்த தவறியதால், நுகர்வோர் புறக்கணிப்பை எதிர்கொள்ளும் நிறுவனங்களில் அடங்கும்.
கார்ஹிவ் அருகே நடந்த போரில் ரஷ்ய ராணுவத்தின் உயர்மட்ட தளபதியை கொன்றதாக யுக்ரேன் கூறுகிறது - இந்த கூற்று பிபிசியால் உறுதிப்படுத்தப்படவில்லை
ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், முற்றுகையின் கீழ் உள்ள நகரங்களில் இருந்து யுக்ரேனிய குடிமக்கள் வெளியேற முடியவில்லை என்று யுக்ரேன் தகவல்.
யுக்ரேன் vs ரஷ்யா: புதின் பதவியிழப்பார், ஸெலென்ஸ்கி தப்பியோடுவார் - இந்த போர் முடிவதற்கான 5 சாத்தியங்கள் என்னென்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் போர் எப்படி முடியக்கூடும் என்பதை யூகிப்பது கடினம்தான். போரின் இழப்புகள், இடம் பெயர்ந்தவர்கள், போரை நிறுத்துவதற்கான குரல்கள் எனப் பலவும் இப்போது உலகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றுக்கு இடையே இந்தப் போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது குறித்த சில சாத்தியங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகக் கடினமானவை. மிகவும் இருண்டவை.
300 யுக்ரேனியர்கள் கலேஸில் இங்கிலாந்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்
பட மூலாதாரம், Getty Images
பிரான்சின் கலேஸிலிருந்து இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற சுமார் 300 யுக்ரேனியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
உள்துறை அலுவலகத்தால் இதுவரை வழங்கப்பட்ட யுக்ரேனிய விசாக்களின் மொத்த எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையாகும்.
பல அகதிகள் பிரான்சில் இருந்து கலேஸ் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு எல்லையை கடக்க முற்படுகின்றனர்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 589 பேர் அங்கு வந்துள்ளனர் என்று கலேஸின் துணை அரசியல் தலைவர் வெரோனிக் டெப்ரெஸ்-போடியர் தெரிவித்தார். 286 பேர் இங்கிலாந்து அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இது சமந்தமாக கலேஸில் உள்ள யுக்ரேனியர்கள் சிலர் பிபிசியிடம் பேசுகையில் குடும்ப ரீயூனியன் விசா பெறுவதற்கு ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய உள்ளது. ஆனால், உள்துறை அலுவலகம் ஐரோப்பா முழுவதும் விசா விண்ணப்ப மையங்களில் இந்த வாரம் சந்திப்பு நேரம் உள்ளன என்று தெரிவித்துள்ளது.
"இங்கே மக்கள் விசா பெறுவதற்கு இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை ஏற்படுத்தலாம் " என்று டிப்ரெஸ்-போடியர் என்ற நபர் பிபிசியிடம் கூறினார்.
"இங்கே மக்கள் விசா பெறுவதற்கு இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை ஏற்படுத்தலாம் " என்று டிப்ரெஸ்-போடியர் என்ற நபர் பிபிசியிடம் கூறினார்.
யுக்ரேனிய குடும்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 17,700 பேர் இங்கிலாந்துக்கு வர விண்ணப்பித்துள்ளனர், மேலும் 300 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை அன்று கூறியபோது, பிரிட்டன் "மிகவும் தாராளமான நாடு". ஆனால் எங்கள் நாட்டிற்குள் வருபவர்கள் யார் என்பதை நாங்கள் தீர ஆராய விரும்புகிறோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம்" - ரஷ்யாவின் துணை பிரதமர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்
ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகள் தடையை முன்னெடுத்தால், ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறுகையில், "ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிராகரிப்பது, உலக சந்தையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்" என்று கூறினார், இதனால் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக, ஒரு பீப்பாய் 300 டாலராக உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக, அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து போடக்கூடிய மேலும் சில தடைகளை விவாதித்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், திங்கட்கிழமை அன்று, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் இந்த ஆலோசனைகளை நிராகரித்தன.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த எரிவாயுவில் 40% மற்றும் அதன் எண்ணெய் கொள்முதலில் 30% ரஷ்யாவிடமிருந்துதான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"நான் யாருக்கும் அஞ்சவில்லை" - ஸெலென்ஸ்கி வெளியிட்ட புதிய காணொளி
பட மூலாதாரம், Office of Ukraine's president
கீயவில்
உள்ள தனது அலுவலகத்தில் தான் இருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி சமீபமாக
காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ஒளியவில்லை. நான் யாருக்கும் அஞ்சவில்லை.
இந்த போரில் வெற்றிப்பெறும் வரை நான் இங்குதான் இருப்பேன்,” என ஸெலன்ஸ்கி தனது காணொளியில்
தெரிவித்துள்ளார்.
கீயவிலிருந்து
இரவு நேரத்தில் அந்த வீடியோ பதவி செய்யப்பட்டது என்பதை தனது காணொளியில் காட்டினார்
ஸெலன்ஸ்கி.
தலைநகரின்
முக்கிய பகுதியிலிருந்து,
திங்களன்று இரவு தான் இந்த காணொளியை பதிவதையும் அந்த காணொளி மூலம் பதிவு
செய்தார் ஸெலன்ஸ்கி.