ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்

ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    மார்ச் 8ஆம் தேதி நேரலை பக்கம் நிறைவடைகிறது. இதுவரை எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் கீயவ், மேரியோபோல், சுமி போன்ற நகரங்களிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் சிக்கி வருகின்றனர்.
    • முக்கிய ரஷ்ய ராணுவ கமாண்டர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக யுக்ரேனிய பாதுகாப்புத் துறையின் உளவு சேவை தெரிவித்துள்ளது.
    • பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
    • கீயவில் உள்ள தனது அலுவலகத்தில் தான் இருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி சமீபமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
    • யுக்ரேனிலிருந்து மேலும் 410 இந்தியர்கள் நாடு திரும்பினர்
    • ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்
    • ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்
    • சுமி வான் தாக்குதலில் 9 பேர் பலி

    பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    முகப்பு பக்கத்திற்குஇங்கே கிளிக் செய்யவும்

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்த அமெரிக்கா, படிப்படியாக குறைக்க முடிவு செய்த பிரிட்டன்

    எண்ணெய்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.

    புதின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என்று தெரிவித்துள்ளார் பைடன்.

    "புதினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துகொண்டுள்ளன.

    ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.

  3. ரஷ்யா பொதுமக்களை குறிவைக்கிறது: நேட்டோ

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்ய படைகள் குறிவைப்பதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ரஷ்யா சண்டையை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், இந்த போரை பரப்புவதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். “யுக்ரேனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது நம் கடமை. எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்தார்.

    ரஷ்ய தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், லாட்வியன் அதிபர் ஈகில்ஸ் லெவிட்ஸுடனான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  4. வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் இவிஎம் இயந்திரங்கள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

    அகிலேஷ் யாதவ்

    பட மூலாதாரம், ANI

    வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஏழு கட்டங்களாக உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்தது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகவுள்ளன. நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வாரணாசியில் வேட்பாளர்களுக்குத் தெரிவிக்காமலேயே, வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “பாஜகதான் வெல்லும் என்பது போன்ற தோற்றத்தை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உருவாக்க முயலுகின்றன. இது ஜனநாயகத்திற்காக நடைபெறும் கடைசி போராட்டம். வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்படாமலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

    தேர்தல் ஆணையம் இதனை கவனிக்க வேண்டும்.

    இம்மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படுவது குறித்து நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். இது திருட்டு. நம் வாக்குகளை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். ஆனால், அதற்கு முன்னால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. யுக்ரேனிலிருந்து மேலும் 410 இந்தியர்கள் நாடு திரும்பினர்

    இந்திய மாணவர்கள்

    பட மூலாதாரம், bbc

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேனின் சுமி நகரில் சிக்கிய இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்பியதாக, இந்திய அரசு தெரிவித்துள்ளது.

    சுமியிலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறியதாக, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜியா பலூனி, பிபிசி நிருபர் அபினவ் கோயலிடம் தெரிவித்தார்.

    இதனிடையே, ‘ஆபரேஷன் கங்கா’ மூலம், இன்று செவ்வாய்க்கிழமை யுக்ரேனிலிருந்து 410 பேர் இந்தியா வந்ததாக, வான்வழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும், இரண்டு சிறப்பு பயணிகள் விமானம் மூலம் இந்தியா திரும்பினர்.

    இந்நிலையில், ரஷ்ய ராணுவப் படைகள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்திவரும் யுக்ரேனின் சுமி நகரிலிருந்து இந்திய மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டதாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “சுமியிலிருந்து இந்திய மாணவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டோம் என அறிவிப்பதில் மகிழ்ச்சி. அவர்கள் தற்போது போல்டாவா நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் ரயில் மூலம் மேற்கு யுக்ரேனுக்கு செல்வார்கள். அவர்களை இந்தியா அழைத்துவர ஆபரேஷன் கங்கா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது” என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்

    சாய் நிகேஷ்

    பட மூலாதாரம், SAI NIKESH

    கோவையிலிருந்து யுக்ரைனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற சாய் நிகேஷ் என்கிற நான்காம் ஆண்டு மாணவர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளார்.

  7. இரண்டு பைகள், பாஸ்போர்ட் உடன் 1,200 கி.மீ தனியாக பயணித்து எல்லையை வந்தடைந்த 11 வயது சிறுவன்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Slovak Interior Ministry

    11 வயது சிறுவன் ஒருவன், கிழக்கு யுக்ரேனிலிருந்து 1,200 கி.மீ. தன்னந்தனியாக பயணித்து, பாதுகாப்பாக ஸ்லொவாக்கியா வந்தடைந்தான். அச்சிறுவன் தன்னுடன் இரண்டு சிறிய பைகள், பாஸ்போர்ட், உறவினரின் தொடர்பு எண் மட்டுமே வைத்திருந்தான்.

    யுக்ரேன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்துவரும் நிலையில், ஸாப்போரீஷியாவிலிருந்து அச்சிறுவன் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தனியாக வெளியேறியுள்ளான். தன்னுடைய வயதான தாயைவிட்டு வெளியேற முடியாத சூழல் இருந்ததால், சிறுவனின் தாயார் சிறுவனுடன் செல்லவில்லை.

    இதனால், தன் மகனை தனியே ரயிலில் ஏற்றிவிட்டுள்ளார். சிறுவன் எல்லைக்கு வந்தடைந்த நிலையில், அவனுக்கு சுங்க அதிகாரிகள் உதவினர்.

    அச்சிறுவன் உண்மையான “ஹீரோ” எனவும், தன் புன்னகையின் மூலம் அனைவருடைய மனதையும் கவர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தன்னுடன் ஒரு பிளாஸ்டிக் பை, சிவப்பு நிறுத்திலான சிறிய முதுகுப்பை, பாஸ்போர்ட்டை மட்டுமே வைத்திருந்தான் அச்சிறுவன். அவனுக்கு தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். எல்லையில் உள்ள அதிகாரிகள், ஸ்லொவாக்கிய தலைநகர் பிரடிஸ்லாவாவில் உள்ள அச்சிறுவனின் உறவினரை தொடர்புகொண்டு விவரத்தைத் தெரிவித்தனர்.

    ஸ்லொவாக்கியா காவல்துறை வெளியிட்ட வீடியோவில், சிறுவனின் தாயார் அனைவருக்கும் நன்றி கூறினார். அச்சிறுவன் ஏன் இவ்வளவு தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது என்பது குறித்தும் அந்த வீடியோவில் தெரிவித்தார்.

    “எங்களின் வசிப்பிட பகுதிக்கு அருகில் ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்திவரும் மின்நிலையம் உள்ளது. என்னுடைய தாயைவிட்டு என்னால் வர முடியாது. அவரால் நடக்க முடியாது. எனவே, நான் என் மகனை ஸ்லொவாக்கியா அனுப்பினேன்” என, சிறுவனின் தாயார் ஜூலியா பிசெக்கா கூறினார்.

  8. இளம் பெண்களை குறிவைக்கும் ரஷ்ய ஆதரவாளர்கள்; ட்ரோல்கள், போலி செய்திகளால் பதறும் இளம் யுக்ரேனியர்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. யார் இந்த கங்குபாய்? கணவனால் விற்கப்பட்ட 16 வயது பெண். மாஃபியா ராணியாக மாறியது எப்படி?

      • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
      • பதவி, பிபிசி தமிழ்
    கங்குபாய்

    பட மூலாதாரம், PEN PRODUCTIONS

    பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் தொழில் இது. இதில், உடல்தான் மூலதனம். அதிலும், பெண்னின் மனதை பிரதான பொருண்மையாகப் பார்க்கும் கனிவு மிக்க கணிகையாக இருந்தார் கங்குபாய்.

    16 வயது மதுவின் நிலைமையை உணர்ந்து கொண்டு அவர் எடுத்த இந்த முடிவுக்கான பின்னணிக் காரணத்தை தெரிந்துகொண்டால், அதுதான் யார் இந்த கங்குபாய் என்ற கேள்விக்கு பதில்.

  10. நெடுவாசல் போராட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகும்: அச்சம் தொடர்வதாக கிராம மக்கள் சொல்வது ஏன் ?- கள நிலவரத்தை சொல்லும் விரிவான கட்டுரை

      • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
      • பதவி, பிபிசி தமிழ்
    நெடுவாசல்

    பட மூலாதாரம், NEDUVASAL PROTEST COMMITTEE

    படக்குறிப்பு, 2017ம் ஆண்டு நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டாலும், அச்சம் தொடர்கிறது. அறிவித்தபடி, நெடுவாசலைச் சுற்றியுள்ள எண்ணெய் கிணறுகளை இன்னும் அகற்றவில்ல என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஏற்கனவே அமைக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவிக்கிறார்.

  11. யுக்ரேன் மோதல்: புதினுக்கு நிழலாக விளங்கும் உள் வட்டாரம் - அறியப்படாத தகவல்கள்

      • எழுதியவர், பால் கிர்பி
      • பதவி, பிபிசி செய்திகள்
    புதின்

    பட மூலாதாரம், RUSSIAN PRESIDENCY

    விளாதிமிர் புதின் இப்போது ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய ராணுவத்தை மிக ஆபத்தான போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறார், இது அவரது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அச்சுறுத்தலாக முன் நிற்கிறது.

    அவர், அண்மையில் நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான ஆலோசகர்களிடமிருந்தும் இடைவெளி விட்டே அமரிந்திருந்த காட்சிகள் வெளியாயின.

  12. "தொடர்ச்சியா குண்டுகள் விழுந்துச்சி..இன்னுமே அந்த தாக்கத்தில இருந்து மீள முடியல..." யுக்ரேனில் இருந்து தப்பி வந்த மருத்துவ மாணவரின் பயண அனுபவம்

  13. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் அணு ஆயுத குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது: பிரிட்டன்

    அணு ஆயுதம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

    அணு ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்களை யுக்ரேன் தயாரித்து வருவதாக, ரஷ்யா குற்றச்சாட்டு கூறிவருவது கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தீவிரமடைந்துள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    “இது நீண்டகாலமாக சொல்லப்படும் கதைதான்” என, தெரிவித்துள்ள அந்த அமைச்சகம், “யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை நியாயப்படுத்துவதன்” ஒருபகுதியாக அவை பெரிதாக்கப்படலாம் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் மக்களை பாதிக்கும் வகையிலான பிரசாரப் பணிகளை மேற்கொண்டு, ரஷ்யா உளவியல் போரில் ஈடுபடுவதாக யுக்ரேன் ராணுவம் முன்னதாக குற்றம்சாட்டியது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. யுக்ரேனிலிருந்து 20 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் – ஐநா

    யுக்ரேனில் நடைபெற்று வரும் போரிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளதாக, பிபிசியிடம் ஐநா தெரிவித்துள்ளது.

    அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிரான்டி, யுக்ரேனிலிருந்து பெரும் திரளான மக்கள் வெளியேறுவது, ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்திற்குப் பின்னான வேகமாக வளரும் அகதிகள் நெருக்கடி என தெரிவித்திருந்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. ஓபிஎஸ், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

    ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஆறுமுகசாமி ஆணையத்தில், செவ்வாய்கிழமையன்று நடந்த இரண்டாவது நாள் விசாரணையில், அப்போலோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    குறிப்பாக, “ஜெயலலிதா இறப்பதற்கு முதல்நாள் அவரது உயிரைக் காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா?” எனக் கேட்டபோது, “2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சை முறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றினோம்” என, அப்போலோ மருத்துவர் மதன்குமார் தெரிவித்தார்.

    இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அப்போலோ தரப்பிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகள் குறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டோம். அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட பிறகு முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்'' என்றார்.

    மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் அவரை 15 ஆம் தேதிக்குப் பிறகு நேரில் அழைத்து ஆணையம் விசாரிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக, ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதாலேயே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது வரையில் ஒருமுறைகூட ஓபிஎஸ் ஆஜராகாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  16. அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு: சசிகலா முயற்சிகள் தோல்வியடைவது ஏன்?

      • எழுதியவர், ஆ. விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழ்
    சசிகலா

    பட மூலாதாரம், Getty Images

    "கட்சியின் சின்னம் ஒரு குழுவிடம் இருக்கும்போது புரட்சி வெடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஓ.பி.எஸ் தரப்பில் சமாதானக் கொடியை காட்டினாலும் எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி இறங்கி வர வேண்டும் அல்லது அவரை கீழே இறக்க வேண்டும்.

    'ஒருமித்த கருத்து வந்து அனைத்து மாவட்டங்களும் சேர்ந்து முடிவெடுக்கட்டும்' என தினகரன் கூறுகிறார். அவர்கள் அவ்வாறு வர மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் பேசுகிறார்'' என்கிறார்.

  17. சுமியிலிருந்து இந்திய மாணவர்கள் 694 பேர் வெளியேறினர்: மத்திய அமைச்சர் தகவல்

    இந்திய மாணவர்கள்

    பட மூலாதாரம், HardeepSPuri/Twitter

    படக்குறிப்பு, யுக்ரேனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள்: கோப்புப்படம்

    ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள யுக்ரேனின் சுமியில் சிக்கிய 694 இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி போல்டோவாவுக்கு சென்றதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    சுமியிலிருந்து அவர்கள் பேருந்து மூலம் வெளியேறியதாக, ஹர்தீப் சிங் பூரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மனிதநேய வழித்தடத்தை அமைக்க, ரஷ்யா மற்றும் யுக்ரேன் சம்மதித்ததையடுத்து, அங்கு சிக்கியிருந்தவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியது என, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை சுமியில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மக்களை வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். இதன்மூலமாக, மக்கள் சுமியிலிருந்து வெளியேறி, அங்கிருந்து தெற்கில் 175 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள யுக்ரேன் நகரமான போல்டாவாவுக்கு சென்றனர்.

    ரஷ்ய ராணுவம் சுமியை பகுதியளவு சுற்றி வளைத்துள்ளது. அங்கு நடைபெறும் வான்வழி தாக்குதல்களில் திங்கள்கிழமை 9 பேர் உயிரிழந்தனர். உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 700 இந்திய மாணவர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

    இந்திய மாணவர்களின் நிலை மற்றும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

    ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் யுக்ரேனிலிருந்து இதுவரை சுமார் 16,000 பேர் வெளியேறியுள்ளதாக, இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக இதுவரை 76 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  18. மகிழ்ச்சியில் இளையராஜா & ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள்: டிவிட்டரில் இளையராஜா வெளியிட்ட தகவல்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  19. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு என்ன தண்டனை?

    யுவராஜ்

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் வெளியாகுமென மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இதன்படி தற்போது தண்டனை விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கோகுல்ராஜுக்கு மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  20. ரஷ்ய படையெடுப்பு:"அடுத்தடுத்து விழுந்த குண்டுகள்; அதிர்வில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை" - ஊர் திரும்பிய தமிழக மாணவர்

      • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
      • பதவி, பிபிசி தமிழுக்காக
    முகமது அதீம்

    "யுக்ரேனில் இருக்கும்போது போர் பதற்றம் காரணமாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குண்டுவெடிப்புக்கு பயந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு கீழே உள்ள பதுங்கு குழியில் தங்கி எங்களை பாதுகாத்துக் கொண்டோம். போதுமான உணவு இல்லாமல் கஷ்டப்பட்டோம்.

    யுக்ரேன் அரசு போக்குவரத்தை முற்றிலும் துண்டித்ததால் பேருந்து வசதி இன்றி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருகே உள்ள நகரத்திற்கு சென்றோம்."