ரஷ்ய தாக்குதல்: அதிகரிக்கும் மனிதாபிமான நெருக்கடி - பேச்சுக்கு அழைக்கும் ஸெலென்ஸ்கி

படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, "யுக்ரேனை புதிய வைரஸ் தாக்கியுள்ளது": செலன்ஸ்கி

    விளாடிமிர் புதினை நோக்கி பேசிய செலன்ஸ்கி, “உங்களின் நாட்டுக்கு திரும்பி போங்கள். உங்கள் நாட்டிற்கே.” என்று தெரிவித்துள்ளார்.

    “ரஷ்ய மொழி பேசும் மக்களை புதின் பாதுகாக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் உள்ளவர்களை அல்ல. உங்கள் நாட்டில் உள்ளவர்களை மட்டும்”

    யுக்ரேனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களுக்காக என தங்களின் படையெடுப்பை நியாயப்படுத்திய ரஷ்யாவின் கூற்றுக்கான பதிலாக இவ்வாறு செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    “யுக்ரேனில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதிவாகி இரண்டு வருடங்கள் ஆகின. ஆனால் கடந்த வாரம் யுக்ரேனை இன்னொரு வைரஸ் தாக்கியுள்ளது,” என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, "இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை"

    செலன்ஸ்கி

    பட மூலாதாரம், Volodymyr Zelensky

    யுக்ரேன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    “யுக்ரேனிய பாதுகாப்பு படைகள் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய படைகள் யுக்ரேன் நகரங்களில் தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.”

    “பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமிட்டிருப்பதன் மூலம், ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் யுக்ரேன் வெற்றிப் பெற்றுள்ளது என்று தெரிகிறது.”

    “எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை” என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது சர்வதேச கூட்டணி நாடுகளிடமிருந்து தினந்தோறும் ஆயுதங்களை பெற்று வருவதாக செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்திய கூறப்படும் குற்றச்சாட்டின் மீது விசாரணை தொடங்கியுள்ள நிலையில் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, "மூன்றாம் உலகப் போர் என்பது அணுஆயுதப் போராகதான் இருக்கும்"

    ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரவ், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

    “தடைகளுக்கான எதிர்வினை என்பது மூன்றாம் உலகப் போர் மட்டுமே என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்; மூன்றாம் உலகப் போர் என்பது அணு ஆயுதப் போராக மட்டும்தான் இருக்கும்” என செர்கேய் லாவ்ரஃப் தெரிவித்துள்ளார்.

    இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களின் மூளையில் மட்டுமே உள்ளது. ரஷ்யர்களின் மூளையில் அவ்வாறு இல்லை.

    “எங்களின் மீது உண்மையான போர் தொடுக்கப்படுமானால் அவ்வாறு திட்டமிட்டவர்கள் நன்கு யோசிக்க வேண்டும். எனது கருத்துப்படி அம்மாதிரியான திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன” என்றார்.

  4. 40 லட்சம் பேர் யுக்ரேனைவிட்டு வெளியேறலாம்: ஐரோப்பிய ஒன்றியம்

    படையெடுப்பு தொடங்கியதிலிருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் யுக்ரேனைவிட்டு வெளியேறிவுள்ளதாக ஐ.நா தெரிவித்திருந்தது.

    தற்போது 40 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறலாம் என ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிட்டுள்ளது.

    இந்த மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை ஐந்து லட்சத்து 75 ஆயிரம் பேர் போலாந்திற்குள் நுழைந்துள்ளதாக போலாந்தின் எல்லை பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

    போலாந்தில் அதிகளவிலான யுக்ரேனிய மக்கள் வசித்து வருகின்றனர். போர் தொடங்கிய பிறகு தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களை தேடி செல்கின்றனர்.

  5. ரஷ்ய படைகளை எதிர்க்கும் யுக்ரேனிய மக்கள்: டிமிட்ரி குல்லேபா

    ரஷ்ய மக்களுக்கு எதிராக யுக்ரேனிய மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்று யுக்ரேனின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் டிமிட்ரி குல்லேபா தெரிவித்துள்ளார்.

    "இதுதான் யுக்ரேனுக்கான உண்மையான மக்களின் போர். இதில் வெற்றி பெற புதினுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த புகைப்படத்தில் பொதுமக்கள் ரஷ்ய படைகளை வழிமறிக்கிறார்கள். இம்மாதிரியான நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் வீடியோக்களும் உள்ளன. எங்களின் கூட்டணி நாடுகள் யுக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவ வேண்டும். குறிப்பாக வான்பரப்பில்." என டிமிட்ரி குல்லேபா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. வணக்கம் நேயர்களே!

    நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். யுக்ரேனில் நடந்துவரும் ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக களத்திலிருந்து செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

  7. செலன்ஸ்கியை புகழ்ந்துள்ள டைம் பத்திரிகை

    செலன்ஸ்கி மற்றும் யுக்ரேன் மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமான அட்டை படத்துடன் வெளியாகியுள்ளது டைம் பத்திரிகை.

    யுக்ரேனிய தேசிய கொடியின் வண்ணங்களோடு யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கியின் வார்த்தைகளோடு வெளிவந்துள்ள டைம் பத்திரிகையின் அட்டை படத்தை யுக்ரேனியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    யுக்ரேனிய மொழியில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செலன்ஸ்கி பேசிய –“மரணத்தை வாழ்க்கை வெல்லும், இருளை வெளிச்சம் வெல்லும்” என்ற வாசகத்தோடு வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் யுக்ரேனின் கதாநாயகர்கள் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்த பத்திரிகை கீயவில் தொடர்ந்து தங்குவதன் மூலம் செலன்ஸ்கி வரலாற்றை மாற்றியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க சொல்லும் நாடுகள்

    தங்களது குடிமக்களை ரஷ்யாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது ஃபிரான்ஸ்.

    தற்போது யுக்ரேனில் நடைபெற்று வரும் தாக்குதலை தொடர்ந்து பிரஞ்சு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மிகவும் அத்தியாவசிய தேவைகளின்றி பிரான்ஸ் குடிமக்கள் யாரும் ரஷ்யாவில் தங்க வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இதேபோல வேறு நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

    பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், “ரஷ்யா முழுவதும் எந்த இடத்திற்கும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது. நாட்டைவிட்டு வெளியேறுவது கடினமாகும் மற்றும் "பொருளாதார சரிவு" எனக்கூறி இந்த அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவும் இதேபோன்றுதொரு அறிவிறுத்தலை வெளியிட்டுள்ளது. பல காரணங்களை சுட்டிக் காட்டியுள்ள அமெரிக்கா, ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடிமக்கள் தாக்கப்படலாம் என்ற காரணத்தையும் சேர்த்துள்ளது.

  9. “யுக்ரேனுக்கு எதிரான போரை உடனே நிறுத்துங்கள்”: அமெரிக்கா

    புதின்

    பட மூலாதாரம், REUTERS

    படக்குறிப்பு, புதின்

    யுக்ரேனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், நேற்று, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    அந்த அறிக்கையில், படையெடுப்பு குறித்த தகவல்களை சுயாதீன ஊடகங்கள் ஒளிபரப்பும் திறனை தடுப்பதன் மூலம், “ஊடக சுதந்திரம் மற்றும் உண்மையின் மீது முழு தாக்குதலை” ரஷ்யா தொடங்கியிருப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் சுதந்திரமான தகவல்களை அணுகவும், உலகம் முழுவதும் ஒருவருக்கொருவரை இணைக்கவும் உதவும் டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் ரஷ்யாவின் "அழுத்தத்தை" அமெரிக்கா சுட்டிக்காட்டியது.

    முக்கியமான யுக்ரேன் நகரங்கள் மீது ரஷ்யத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் யுக்ரேனிலிருந்து வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

  10. ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY

    நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய யுக்ரேனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. யுக்ரேன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும், அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.

    30 நாடுகளின் தற்காப்புக் கூட்டணியான நேட்டோவுடன் அது இணையாது என்றும், யுக்ரேன் ராணுவ விலக்கலை மேற்கொண்டு, நடுநிலை நாடாக மாற வேண்டும் என்றும் மேற்கத்திய நாடுகள் மற்றும் யுக்ரேனிடம் இருந்து புதின் உத்தரவாதம் கோரியுள்ளார்.

  11. யுக்ரேன் – ரஷ்யா போர்: தற்போது என்ன நடக்கிறது?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பு இன்று 8வது நாளாக தொடர்கிறது. இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • யுக்ரேனின் முக்கியமான தெற்கு துறைமுக நகரமான கேர்சன் நகரத்தை ரஷ்ய படையினர் கைப்பற்றியதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அப்படையினரால் கைப்பற்றப்படும் முதல் பெரிய நகரம் இதுவாகும்.
    • கடந்த சில மணிநேரங்களில் கீயவ் மற்றும் மற்ற நகரங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
    • நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய போர் வாகனங்கள், எரிபொருள் மற்றும் உணவு பற்றாக்குறையால், நகர முடியாமல் “சிக்கிக்கொண்டது” என, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    • தங்கள் நாட்டைப் காக்கும் குடிமக்களின் தைரியத்தைப் பாராட்டும் வகையில், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நள்ளிரவில் காணொலி ஒன்றை வெளியிட்டார்.
    • யுக்ரேனில் சாத்தியமுள்ள போர் குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
    • இதுவரை யுக்ரேனிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் மீதான தாக்குதலின் போது 498 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 1,597 படையினர் காயமடைந்த நிலையில், அதிக ராணுவ இழப்புகளை ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டது.
  12. யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.

    இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

    நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்? என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக படியுங்கள்:

  13. கீயவ் நகரில் சக்திவாய்ந்த வெடிப்புகள்

    யுக்ரேன் நெருக்கடி
    படக்குறிப்பு, கோப்புப்படம்

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை யுக்ரேன் தலைநகர் கீயவ் உள்ளிட்ட நகரங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டது.

    உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு குறைந்தது 4 பெரிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அதனை நேரில் கண்டவர்கள் வீடியோ எடுத்தனர்.

    இந்த தாக்குதலின் இலக்குகள் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகவில்லை.

    இந்த குண்டு வெடிப்புகள், கீயவ்வின் மத்திய ரயில் நிலையத்தில் அந்நகரத்தையே உலுக்கியபெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்தன. ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் இது நிகழ்ந்தது.

    வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்த ஏவுகணையின் பாகங்கள் விழுந்து உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் கூறினார்.

    முக்கியமான வெப்பமூட்டும் குழாய் ஒன்றும் சேதமடைந்ததாக, அவர் தெரிவித்தார். இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என, கீயவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

  14. யுக்ரேனுக்கு எதிரான போரைக் கண்டித்து ரஷ்ய மக்கள் போராட்டம்

    ரஷ்யா

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா படைபெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ரஷ்ய மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    முன்பு நடைபெற்ற போராட்டங்களில், போலீசார், கலவர தடுப்பு அதிகாரிகள் ஆகியோர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மேலும், டஜன் கணக்கானோரை கைது செய்தனர். கடந்த சில தினங்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நவால்னி ராணுவத் தாக்குதலுக்கு எதிராக தினசரி பேரணிகளுக்கு அழைப்பு விடுத்ததால், புதிய எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. "பயமுறுத்தும் கோழைகளின் தேசமாக" ரஷ்யா இருக்கக்கூடாது என அவர் முன்னதாக கூறியிருந்தார்.

  15. யுக்ரேனில் தொடரும் போர்: 8ஆவது நாளாக இன்று என்ன நடக்கிறது?

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், 8ஆவது நாளான இன்று என்ன நடக்கிறது என்பது குறித்து, கீயவில் உள்ள பிபிசி நிருபர் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, கீயவில் சில குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், ரஷ்ய படைகளிடம் கேர்சன் நகரம் வீழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையிடம் வீழ்ந்த முதல் முக்கியமான நகரமாக கேர்சன் கருதப்படுகிறது.

    64 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய போர் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ரஷ்ய படைகள் மரியுபோல் நகரத்தை சுற்றிவளைத்துள்ளதாகவும், கார்கீவில் அதிகளவில் ஷெல் தாக்குதல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. ரஷ்ய கப்பலை கைப்பற்றிய ஜெர்மனி

    கப்பல்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யாவின் பெரும் பணக்காரரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் டாலர்கள் (445 மில்லியன் பவுண்ட்) மதிப்பிலான கப்பல் ஒன்றை ஜெர்மன் அதிகாரிகள் கைப்பற்றியதாக, செய்தி வெளியாகியுள்ளது.

    ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட செய்தியின்படி, தில்பார் என்று பெயரிடப்பட்ட 512 அடி (156 மீ) கப்பல் ஹாம்பர்க்கில் கைப்பற்றப்பட்டது.

    உலோக தொழிலதிபரான உஸ்மானோவ், ரஷ்ய அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட 25 முக்கிய ரஷ்யர்களுள் ஒருவர்.

    ரஷ்யாவிற்குச் சொந்தமான பிற படகுகள், அமெரிக்காவுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இல்லாத இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு படையெடுப்பதைக் காண முடிந்தது.

  17. எந்தவொரு மாணவரும் பிணைக்கைதியாக இல்லை: ரஷ்யப் புகாரை மறுத்த இந்தியா

    மாணவர்கள்

    பட மூலாதாரம், bbc

    படக்குறிப்பு, யுக்ரேனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள்

    யுக்ரேனில் இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யா கூறும் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது.

    இந்திய மாணவர்கள் “மனித கவசங்களாக” யுக்ரேன் ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படுவதாகவும், “எல்லைப்பகுதியிலிருந்து வெளியேற விடாமல் அனைத்து வழிகளிலும் அவர்களை தடுப்பதாகவும்” ரஷ்யா கூறியிருந்தது.

    ஆனால், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “யுக்ரேனில் எந்தவொரு மாணவரும் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் எதுவும் பெறப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கார்கீவ் மற்றும் அண்டை பகுதிகளிலிருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் இந்திய மாணவர்கள் வெளியேற சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதற்கு, யுக்ரேன் அதிகாரிகளிடம் அந்த அறிக்கை வாயிலாக இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    கார்கீவில் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்து வருவதாக நம்பப்படுகிறது.

    மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், அவர்களை இந்தியா அழைத்து வருவதில் போக்குவரத்துத் தடைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. யுக்ரேனில் மாணவர் மரணம், நீட் விலக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்த்துகிறது - முதல்வர் ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், M.K.Stalin

    யுக்ரேனுக்கு மருத்துவம் படிக்கச் சென்று, போரில் உயிரிழந்த மாணவரின் துயர நிலை நீட் தேர்வு விலக்கப்படவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  19. வேக்யூம் குண்டுகள் என்றால் என்ன? யுக்ரேன் போரில் அவை பயன்படுத்தப்பட்டனவா?

    வேக்யூம் குண்டு

    பட மூலாதாரம், Getty Images

    வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன, ரஷ்யா அவற்றை யுக்ரேனில் பயன்படுத்தியுள்ளதா?

    யுக்ரேனில் நடந்த சண்டையில் ரஷ்யா தெர்மோபரிக் ஆயுதம் அதாவது வேக்யூம் வெடிகுண்டைப் பயன்படுத்தியதாக மனித உரிமைக் குழுக்களும் அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திங்களன்று யுக்ரேனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஒக்திர்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அழித்த வெடிப்பு ஒரு தெர்மோபரிக் ஆயுதத்தால் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது, இருப்பினும் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.மிக அபாயமான இந்த வெடிகுண்டு பற்றியும், அது தொடர்பான சர்ச்சை பற்றியும் விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  20. யுக்ரேனிலிருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்: ஐநா

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    யுக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கிய 7 நாட்களில் இத்தனை பேர் வெளியேறியுள்ளனர். அந்நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த வியாழக்கிழமை (பிப். 24) அன்று தொடங்கியது.

    “2015 அகதி சிக்கலின்போது ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றோரின் எண்ணிக்கை 13 லட்சம். தற்போது கடந்த ஒரு வாரத்திலேயே யுக்ரேனிலிருந்து அகதிகளாக செல்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது” என, பிபிசியின் லூயிஸ் குடால் சுட்டிக்காட்டுகிறார்.

    அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி “துப்பாக்கிகள் மௌனமாக வேண்டும். இதனால், யுக்ரேனில் இன்னும் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்காக்கும் மனித நேய உதவிகளை வழங்க முடியும்” என, ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

    யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடியால், யுக்ரேனில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்வார்கள் என்றும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் என்றும் இந்த ஆணையம் கணித்துள்ளது.