You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்யா-யுக்ரேன் மோதல்: குடிமக்களிடம் துப்பாக்கியை கொடுத்து சண்டையிட யுக்ரேனிய அதிபர் அழைப்பு

யுக்ரேனிய தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறும்போது, படையெடுக்கும் துருப்புகளை எதிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு அதிகாரிகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இரண்டும் கியவ் மக்களிடம், “படைகளின் நடமாட்டம் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும் பெட்ரோல் குண்டுகளை உருவாக்கவும் எதிரிகளைச் செயலிழக்க வைக்கவும் வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன்

வணக்கம் நேயர்களே!

நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றைய நேரலைப் பக்கத்தை இங்கே காணலாம்.

நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

  • யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டார்.
  • "ரஷ்ய ராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்" என்று ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
  • யுக்ரேனில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தது பற்றிய செய்திகளை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
  • ரஷ்ய ராணுவாம் நாட்டின் கிழக்கிலுள்ள யுக்ரேனிய படைப் பிரிவுகள் மீது தீவிர தாக்குதல்களைத் தொடங்கியதாக யுக்ரேனிய ஆயுதப் படைகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
  • ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்தன.
  • யுக்ரேன் தலைநகருக்கு பயணம் செய்ய வேண்டாம் என, இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
  • யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கிய நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நாள் இனியதாகட்டும்.