You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினரின் ரூ. 6 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

தமிழ்நாட்டில் 2001-2006 ஆண்டில் நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பின்னர் வந்த திமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை தனியாக விசாரித்து வருகிறது. 2009இல் திமுகவில் சேர்ந்த அவர், தொடர்ந்து எம்எல்ஏ ஆகவும் இப்போது அமைச்சராகவும் இருக்கிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. கொரோனா: அமெரிக்காவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிப்ரவரி இறுதிக்குள் எதிர்பார்ப்பு

    அமெரிக்கா இந்த மாத இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) அதிகாரிகளிடம் இரண்டு தவணை தடுப்பூசியை அங்கீகரிக்க கோரியிருந்தது. மூன்று தவணை விதிமுறைகளையும் இந்நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது, ஆனால், இதற்கான தரவுகள் மார்ச் வரை சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவில், கொரோனா ஓமிக்ரான் திரிபுக்கு பிறகு குழந்தைகளுக்கான கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளது. குழந்தைகள் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்றும் பதிவாகியுள்ளது.

    அமெரிக்க குழந்தைகள் மருத்துவ கழக ஆய்வின்படி, கடந்த மாதம் அமெரிக்காவில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. டிசம்பரில், ஃபைசர் நிறுவனம் குழந்தைகளுக்கான குறைந்தப்பட்ச தடுப்பூசி டோஸ் சோதனையை அறிவித்தது. முதியவர்களுக்கான மருந்தில் பத்தில் ஒரு பங்கு செலுத்தப்படுவது குறித்து கலவையான முடிவுகள் கிடைத்தது.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, எம்.பி.பிஎஸ் மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

    தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல் முறையாக ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதன்படி, ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    வரும் 5ம் தேதி மாலை 5 மணி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. பிப்ரவரி 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேரடியாக நடைபெறுகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 15ம் தேதி சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு இடங்கள் வெளியிடப்படும். வரும் 16ம் தேதி முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பிப்ரவரி 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குநரக சேர்க்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

  3. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது விஷ்ணுப்ரியா ராஜசேகர், ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்