பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி
மேட்ச்பிக்சிங், ஊக்க மருந்து குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு எந்த வித கிரிக்கெட்டிலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
விக்னேஷ். அ
ஜனவரி 28ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிக செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் தடை விதித்த ஐசிசி - இதுதான் காரணம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்றரை ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பிரெண்டன் டெய்லர் ஏற்றுக் கொண்டதையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டனான பிரெண்டன் டெய்லர், இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து எந்த வித கிரிக்கெட்டிலும் மூன்றரை ஆண்டுகளுக்கு விளையாட முடியாது. இத்துடன் ஊக்க மருந்து உட்கொண்டதற்காக அவருக்கு ஒரு மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக நான்கு குற்றச்சாட்டுகளும் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
ஜனவரி 24ஆம் தேதி பிரெண்டன் டெய்லர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தொழிலதிபருடனான தமது சந்திப்பின் போது கோகோயின் உட்கொண்ட பிறகு தாம் மிரட்டப்பட்டதாக கூறியிருந்தார்.
மேலும், அந்த தொழிலதிபர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கிற்கு பணம் கொடுத்ததை அவர் பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்டார். அதே சமயம், உயிருக்கு பயந்து கட்டாயத்தின் பேரில் பணத்தை வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் பற்றி பேச 2019ஆம் ஆண்டு அக்டோபரில் தன்னை அந்த தொழிலதிபர் அழைத்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் டெய்லர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
இந்த சம்பவம் குறித்து ஐசிசியிடம் காலதாமதமாக கூறியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இந்த உண்மையை வெளியிடுவதற்காக என் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்று தெரியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஐசிசி நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரெண்டன் டெய்லர் 2025ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதிவரை அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது.
யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை அமெரிக்கா உதாசீனப்படுத்தியது
பட மூலாதாரம், EPA
தமது நாட்டின் பாதுகாப்பு கவலைகளை அமெரிக்கா உதாசீனப்படுத்தி விட்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளிவரும் இந்தச்சூழலில் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் ரஷ்ய அதிபர்.
யுக்ரேனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரியிருந்தது. ஆனால், ரஷ்யாவின் இந்த முக்கியமான கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
யுக்ரேன் மீது ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
இத்தகைய தகவலை ரஷ்யா ஏற்கெனவே மறுத்துள்ளது.
ஆனால் வெள்ளிக்கிழமை, புதினும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கும் பேசியபோது, யுக்ரேன் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், யுக்ரேன் விஷயம் தொடர்பாக ரஷ்யா விடுத்த கோரிக்கை மற்றும் கவலைகளை அமெரிக்காவும் நேட்டோவும் கவனிக்கவில்லை என்ற புதின் மக்ரோங்கிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் முன்பாக அமெரிக்காவின் திட்டத்தை மிக நெருக்கமாக கவனிப்பதாக புதின் கூறியுள்ளார்.
.
சிவகங்கையில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 2.08 லட்சம் பறிமுதல்
பட மூலாதாரம், ㅤ
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 2.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் வாகனச் சோதனை
இன்று முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடவை தடுக்கும்
பொருட்டு பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை, திருப்புவனம்
தாலுகாக்களில் தலா மூன்று பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை
மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர்
வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக
வந்த ஆம்னி காரை சோதனையிட்ட போது ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தைச் சேர்ந்த
ரூகுல்ஹக்எவ்வித ஆவணமும்
இன்றி இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்
கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அரசு கருவூலத்தில் அதை ஒப்படைத்தனர். உரிய ஆதாரங்களை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம்
என அவர்கள் காரில் வந்தவர்களிடம் தெரிவித்தனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 26,533 ஆக பதிவு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் புதிய பாதிப்பு எண்ணிக்கை 26,533 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 5,246 ஆக வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று மட்டும் 48 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 460 ஆகவும் பதிவாகியுள்ளது.
வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுடன் சேர்த்து ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,11,863 ஆக உள்ளது என்று பொது சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிப்பு
பட மூலாதாரம், AIADMK
படக்குறிப்பு, கோப்புப்படம்
அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன், அங்கிருந்த விழா மேடையில் பேசியபோது, நாடாளுமன்றத்தில் தான் சர்ச்சையில் சிக்காமல் இருக்க முன்பு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழியே உதவியதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் சில விஷயங்களை தனக்கு கனிமொழியே கற்றுக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
கனிமொழியை திமுக எம்.பி.யின் இல்லத்திருமண நிகழ்வில் நவநீதகிருஷ்ணன் புகழ்ந்து பேசியது அதிமுக வட்டாரத்தில் வியப்புடன் பார்க்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பிக்கள் குழு டெல்லி வந்தபோது, அதில் ஒருவராக அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார்.
நீட் விவகாரம் குறித்து அதிகம் வாய் பேசாமல் இருந்தபோதும், திமுக எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக நிற்பதாக அவர் கூறினார்.
இத்தகைய சூழலில்தான் நவநீதகிருஷ்ணனை அவர் வகித்து வரும் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியில் இருந்து அதிமுக தலைமை விடுவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினராக தேர்வானார். இரண்டு ஆண்டுகளில் அந்த பதவி நிறைவுக்கு வந்த நிலையில், 2016இல் மீண்டும் அவர் மாநிலங்களவைக்கு தேர்வானார்.
ஆறு ஆண்டுகள் கொண்ட அந்த பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
பட மூலாதாரம், AIADMK
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அடுத்த 2 நாட்களில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர் - பொன். ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தற்போது நடந்து வருவதாக கூறினார்.
அதிமுகவுடன் இடங்கள் கேட்டுப் பெறுவதில் சுமுகமான நிலை இல்லாததால் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி தொடருமா என கேட்டபோது, அது குறித்து எல்லாம் இப்போது கூற முடியாது. இதை மாநிலத் தலைவர் முடிவு செய்வார் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில் தங்களுடைய மகள் மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது தந்தை மனுவில் கூறியிருந்தார். மேலும், இந்த வழக்கில் காவல்துறையினர் சரியாக விசாரணை செய்யவில்லை என்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் அவரது தந்தை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவி லாவண்யா படித்த பள்ளியும் மனு தாக்கல் செய்தது. அதில் அரசியல் காரணங்களுக்காக மத சாயம் பூசும் வகையில் மாணவியின் மரணம் சித்திரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி லாவண்யா பேசியதாக பதிவு செய்யப்பட்ட காணொளி நீதித்துறை நடுவர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யும் முன்பே எடுத்துள்ளனர். ஆனால், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என அதை பரப்பியவர்கள் விரும்பினால் ஏன் முன்பே பகிரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் விசாரணை முறையாக நடந்து வருவதாகவும் இதுவரை 53 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக குறிப்பிட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சடலம்
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல் பெங்களூருவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனையின் தடயவியல் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு வந்த கர்நாடக சட்ட அமைச்சர் கே.சி.மதுசாமி, செளந்தர்யா இறப்புக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்று கூறினார்.
சௌந்தர்யா, வயதில் 30களின் முற்பகுதியில் இருந்தவர், பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் அவர் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடந்தது. அவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்த தம்பதி ஆறு மாத குழந்தையுடன் மவுன்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் வழக்கு: மேலும் இரு வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு
பட மூலாதாரம், ㅤ
தமிழ்நாடு காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பெண் அதிகாரிக்கு அவர் முன்பு பணியாற்றி வந்த லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி ஆக இருந்த உயரதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகார் தொடர்பான மனு மீதான விசாரணையை மேலும் இரு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையில் இணை இயக்குநராக பணியாற்றிய ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் சீண்டல் புகார் கொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக ஐஜி இருந்ததால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று பெண் எஸ்பி முறையிட்டதை ஏற்று அந்த வழக்கை தெலங்கானா மாநிலத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஐஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமது புகாரை தமிழக சிபிசிஐடியே விசாரிக்க தாம் உடன்படுவதாக பெண் எஸ்பி கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, ஐஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், தனது உத்தரவில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உரிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மாதங்களான போதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களால் இந்த விவகாரம் விசாரிக்கப்படாமல் தள்ளிப்போனது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ. சத்திய நாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஐஜி தரப்பில் வாதங்களை முன்வைக்க நான்கு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மேலும், மேலும் ஐஜி தரப்பு அவகாசம் கோரக்கூடாது என்று கூறினார்.
சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு தொடக்க நிலையிலேயே உள்ளது என்று குறிப்பிட்டார்.
குறைந்தபட்சம் சிபிசிஐடி வழக்கை விசாரிக்கவாவது அனுமதி தர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இருந்தபோதும், ஐஜி தரப்பு இனியும் அவகாசம் கேட்கக் கூடாது என்று தெரிவித்து இந்த வழக்கை மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரமோஸ் ஏவுகணைக்கான 375 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்து
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரமோஸ் ஏவகணை
இந்திய தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைக்கான 375 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
பிஏபிஎல் நிறுவனத்திற்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத் துறைக்கும் இடையே வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரமோஸ் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் டி. ராணே, துணை தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் ஜோஷி, லெப்டினன்ட் கர்னல் ஆர். நேகி மற்றும் பிரவீன் பதக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரமோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு ஆர்டர் இதுவாகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லோரென்சானா வெளியிட்ட ஓர் அறிவிப்பின் மூலம் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த தகவல் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.
பிரமோஸின் சிறப்புகள்
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணைகளில் ஒன்றாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியில் இது தயாரிக்கப்பட்டது.
இது நீர், நிலம் மற்றும் காற்றில் இருந்து ஏவப்படக்கூடியது. இந்தியாவிற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. இந்த ஏவுகணையின் வேகம் Mach 8 (ஒலியின் வேகத்திற்கு சமம்). இந்த ஏவுகணையின் பறக்கும் தூரம் 290 கி.மீ ஆகும். இதனால் 300 கிலோ எடையுள்ள வெடிசுமந்து எதிரி இலக்கை தாக்க முடியும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
'அடுத்த மாதம் ரஷ்யா யுக்ரேனை தாக்கலாம்' - ஜோ பைடன் எச்சரிக்கை
பட மூலாதாரம், Reuters
அடுத்த மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான ''தெளிவான வாய்ப்புகள்'' இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் யுக்ரேனை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட, ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் ''நேர்மறையான நிகழ்வுகளுக்கு மிகவும் குறைந்த வாய்ப்புகளே'' உள்ளன என்று ரஷ்யா கூறியுள்ளது.
சமீப வாரங்களில் யுக்ரேன் உடனான எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யுக்ரேன் உடனான எல்லையில் படைகளை தொடர்ந்து அதிகரித்து வரும் ரஷ்யா, யுக்ரேன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறி வருகிறது.
ஆனால், மேற்கத்திய நாடுகள் ரஷ்ய யுக்ரேனை தாக்கலாம் என்று கூறி வருகின்றன.
அரியலூர் மாணவி தற்கொலை: 'பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை' - கல்வித் துறை அறிக்கை
அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லையென கூறும் பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான கருத்துகள்:
ஒயின் மது அல்ல - சிவ சேனா முக்கியத் தலைவர் சஞ்ஜெய் ராவத்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒயின் மாதிரிப் படம்
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் சூப்பர் மார்க்கெட் மற்றும் சாதாரன கடைகளில் கூட ஒயினை விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. அதற்கு பாரதிய ஜனதா கட்சி தரப்பில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அதற்கு பதில் கொடுக்கும் விதத்தில், ஒயின் மது அல்ல, ஒயின் விற்பனையால் விவசாயிகள் நன்மை அடைவர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்கிற நோக்கில்தான் இதை நாங்கள் செய்தோம் என்று கூறியுள்ளார் சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்ஜெய் ராவத் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கேடரில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி வி.ஆர்.எஸ் பெற்று பஞ்சாப் தேர்தலில் போட்டி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாஜக
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், உள்ளுறை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் ஜக்மோகன் சிங் ராஜு ஐ.ஏ.எஸ் (பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்), தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரது விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதாக, தமிழக தலைமைச் செயலர் தரப்பிலிருந்து அறிவிப்புக் கடிதம் வெளியாகியுள்ளது.
மறு பக்கம், அவர் பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அம்ரித்சர் கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.
தமிழ்நாட்டில் கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும்
படக்குறிப்பு, அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளதால் இதில் மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். மேலும் தேர்வுகள் இல்லாத நாளில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என்றும் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்?
இன்று தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தபின் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல்கள் எப்படி நடைபெறும், மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் எப்படித் தேர்வுசெய்யப்படுவார்கள்?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,51,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 627 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 21,05,611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேற்கு வங்கத்தில், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கண்டி என்கிற பகுதியில் ஆறு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அன்ருல் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளதாக முர்ஷிதாபாத் மாவட்ட வெடிகுண்டு அப்புறப்படுத்தும் படை கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியானோரில் 95% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியா
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில், 95% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் சுகாதார அமைச்சகத்தின் டுவிட்டர் கணக்கில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக இந்தியாவில் 164.35 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் இரவு 7 மணி வரையிலான நிலவரப்படி, 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.