சென்னையில் 20 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின விழா
சென்னையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய குடியரசு தின விழா, முப்படையினர், மத்திய துணை ராணுவ படையினர், மாநில காவல்துறையினர் ஆகியோரின் அணிவகுப்பு மற்றும் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது.
இதையொட்டி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி அணிவகுப்பை மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.
தேசிய கொடி ஏற்றிய நிகழ்வு முதல் சரியாக 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சி 8.20 மணிக்கு முடிந்ததும் ஆளுநர் ரவி விழா பகுதியில் இருந்து விடைபெற்றுப் புறப்பட்டார்.
அவரை வழியனுப்பி வைத்ததும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதக்கம் பெற்ற அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டுப் புறப்பட்டார்.