குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநிலங்கள், 9 அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தங்களுடைய மாநில அலங்கார ஊர்திகளுக்கான மாதிரியை ஏற்க பாதுகாப்புத்துறை மறுத்த நடவடிக்கை குறித்து கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சந்தேகம் எழுப்பியிருந்தன. இந்த நிலையில், 21 அலங்கார ஊர்திகள் மட்டுமே இந்த ஆண்டு பங்கேற்கும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும்.

    மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா?

    ஆப்பிள்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவில் உள்ள 6 பெண்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் ஆப்பிள் ஏர்டேக்கை பயன்படுத்தித் தாங்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

    ஒரு பட்டன் அளவுக்கு இருக்கும் இந்தச் சாதனங்கள், ஆப்பிளின் 'ஃபைண்ட் மை,' நெட்வொர்க்கோடு இணைந்து இயங்கி, தொலைந்துபோன பொருட்களைக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது தங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் பல புகார்கள் வந்துள்ளன.

    பிபிசியிடம் ஆப்பிள் பேசியபோது, "நாங்கள் வாடிக்கையாளர் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் ஏர்டேக்கின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பெடுத்துள்ளோம்," என்று கூறியது.

    போட்டியாளர்களின் தயாரிப்புகளை விட, ஏர்டேக் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

    இருப்பினும், அவை அமெரிக்கா முழுவதும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,452 பேரும், கோயம்புத்தூரில் 3,886 பேரும், செங்கல்பட்டில் 2,377 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இத்துடன் 31 லட்சத்து 3 ஆயிரத்து 410 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

  4. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 9 அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இறுதி ஒப்புதல்

    குடியரசு தினம்

    பட மூலாதாரம்,

    இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 21 வகை அலங்கார ஊர்திகளுக்கு பாதுகாப்புத்துறை இறுதி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    இதில் 12 வாகனங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. மீதமுள்ள 9 அலங்கார வாகனங்கள் அரசுத்துறைகள் தொடர்புடையவை.

    இந்த ஆண்டு குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் என்று பாதுகாப்புத்துறை மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.

    மேகாலயாவின் அலங்கார ஊர்தி அதன் 50 ஆண்டுகால வரலாற்றின் ஒரு காட்சியை பிரதிபலிக்கும் என்றும் அதனுடன், மூங்கில் மற்றும் கரும்புகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் அலங்கார ஊர்தியில் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே வேளை, குஜராத்தின் அலங்கார ஊர்தியில் மாநிலத்தின் பழங்குடி சுதந்திர புரட்சியாளர்களின் வாழ்க்கை முறை இடம்பெற்றிருக்கும்.

    குடியரசு தினம்

    பட மூலாதாரம்,

    ஹரியாணா மாநிலம் அதன் விளையாட்டுத் துறைக்கு முதலிடம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட அலங்கார ஊர்தியை வடிவமைத்துள்ளது. ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 10 வீரர்களின் உருவ மாதிரிகளை அந்த அலங்கார ஊர்தி தாங்கிச் செல்லும்.

    உத்தரகாண்ட் அலங்கார ஊர்தி, 'உத்தரகாண்ட் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது' என கருப்பொருளுடனும் மாநிலத்தின் மத வழிபாட்டுத்தல மேம்பாடு மற்றும் தேச இணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை அந்த மாநில அரசின் அலங்கார ஊர்தி பிரபலிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    உத்தரப்பிரதேசத்தின் அலங்கார அட்டவணை 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற பிரசாரத்தின் கீழ் அடைந்த திறன் தொடர்பான சாதனைகளை பறைசாற்றும்.

    பஞ்சாபின் அலங்கார ஊர்தி, நாட்டின் சுதந்திரத்தில் ஆற்றிய முக்கிய பங்களிப்பை பிரதிலிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  5. மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவிக்கும் முதல்வர் - செல்லூர் ராஜு

    செல்லூர் ராஜு

    பட மூலாதாரம்,

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளையோட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அதிமுக ஆட்சி காலத்தில்கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் தற்போது அறிவிப்பாக வெளியீட்டு உள்ளார்," என்றார்.

    "முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்க்கு பதில் வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார்.

    மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும், திமுக ஆட்சி காலத்தில் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை.

    மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதை விளக்க வேண்டும்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது, தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர் கொள்கிறது" என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

  6. கன்னியாகுமரி அருகே நகைக்காக 4 வயது சிறுவன் கொலை

    கன்னியாகுமரி

    பட மூலாதாரம்,

    கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த பெண்ணின் வீட்டை ஊர் பொதுமக்கள் சூறையாடியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட். இவர் தற்போது வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.அவரது மனைவி சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி வெள்ளிக்கிழமை மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானார் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிறுவன் மாயமான நேரம் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் மாயமான சிறுவன் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் மீது சந்தேகமடைந்து அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதனிடையே பாத்திமா மீது சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய போது பீரோவும் உடைந்தது அதில் மாயமான சிறுவன் வாய்நல் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து பாத்திமாவின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பாத்திமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  7. உ.பி தேர்தல்: அமித் ஷா கைரானாவில் வீடு வீடாக பிரசாரம்

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி சனிக்கிழமை அங்குள்ள கைரானாவில் வீடு வீடாக பிரசாரம் செய்தார்.

    2017ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு ஏராளமான இந்து குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வால் கைரானா வெளியுலகின் வெளிச்சத்திற்கு தெரிய வந்தது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமித் ஷா, அந்த பகுதிக்குத் திரும்பி வந்த குடும்பங்களை சந்தித்தார்.

    மேற்கு உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் அமைந்துள்ள கைரானாவுக்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தாம் வந்ததாகவும், அப்பகுதியில் "மாறிய சூழ்நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும்" அமித் ஷா கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. 5 மாநில தேர்தல்: பொதுவெளியில் நடத்தப்படும் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு

    தேர்தல் ஆணையம்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்பட ஐந்து மாநில சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 10 மார்ச் 7ஆம் தேதிவரை நடைபெறவுள்ள தேர்தலின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளியிடங்களில் தேர்தல் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு விதித்துள்ள தடையை ஜனவரி 31ஆம் தேதிவரை தலைமைத் தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

    இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, துணை ஆணையர்கள் ராஜிவ் குமார், அனூப் சந்திர பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதன் முடிவில் சில முக்கிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனவரி 31வரை எவ்வித சாலை பேரணியோ பாத யாத்திரையோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள், வேறு வாகன பேரணிக்கோ அனுமதியில்லை.

    முதலாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஜனவரி 27ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு விடுவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் திறந்தவெளியில் 500 பேருக்கு மிகாமல் அல்லது அந்த இடத்தின் கொள்ளவில் 50 சதவீத அளவுக்கான பார்வையாளர்களைக் கொண்ட பேரணியை நடத்தலாம்.

    இதே நடைமுறை ஜனவரி 31ஆம் தேதி இறுதி செய்யப்படும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் பொருந்தும்.

    வீடு, வீடாக 5 பேர் வரை சென்று வாக்கு சேகரிக்க நிர்ணயிக்கப்பட்ட வரம்பு இனி 10 ஆக உயர்த்தப்படுகிறது.

    உள்ளரங்க தேர்தல் கூட்டம் என்றால் அதிகபட்சமாக 300 பேர் அல்லது அந்த அரங்கில் பாதி அளவுள்ள பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்தலாம்.

    காணொளி வாயிலாக திரையிடப்படும் பிரசார காணொளிகளை திரையிடும் வாகனங்கள், கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றப்படும் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்படும்போது, அதை அதிகபட்சமாக 500 பேர் வரையோ அந்த வாகனம் நிறுத்தப்படும் இடத்தின் அளவில் 50 சதவீத அளவுக்கோ மக்களைக் கொண்டதாக இருந்தால் அந்த காணொளிகள் திரையிடப்படலாம்.

    இந்த வசதிகள் இருப்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  9. ஸ்ரீவில்லிப்புத்தூரில் பறிமுதலான நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு

    நாட்டு வெடிகுண்டு
    படக்குறிப்பு, நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் இன்று செயலிழக்கச் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி - கான்சாபுரம் செல்லும் சாலை அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் வனத்துறையினர் கடந்த 18ஆம் தேது ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்த புஷ்பராஜ்,ராம்குமார், சின்னச்சாமி ஆகியோர் சாலையோரத்தில்உள்ளஓடைமுட்புதருக்குள்இரண்டு பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரையும் கைது செய்தனர்.

    மேலும், வெப்பம் காரணமாக வெடிகுண்டுகள் வெடித்து விடும் என்ற காரணத்தினால் உடனடியாக பள்ளம் தோண்டப்பட்டு, நாட்டு வெடிகுண்டுகளை வைத்து காவல்துறையினர் பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

    இந்நிலையில், 9 நாட்டு வெடிகுண்டுகளையும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று இன்று செயலிழக்கச் செய்தனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் - ஐசியு சிகிச்சை தொடரும் - மருத்துவமனை

    லதா மங்கேஷ்கர்

    பட மூலாதாரம், ANI

    லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து அவர தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    திரைப்பட்துறையில் முதுபெரும் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு, ஜனவரி 8ஆம் தேதி, லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டதால் அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் சோகத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை அளித்து, ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் இணைப் பேராசிரியர் டாக்டர் பிரதித் சம்தானி வெளியிட்டுள்ளார்.

    "லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். ஆனாலும், அவர் ஐசியுவிலேயே சிகிச்சை பெறுவார். எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பதை இப்போதே சொல்வது கடினம்" என்று அவர் கூறியுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அவற்றை லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு நெருக்கமான அனுஷா சீனிவாசன் ஐயர் நிராகரித்தார்.

    "இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினரும் மருத்துவர்களும் தங்கள் வேலையைச் செய்யட்டும். லதா அம்மா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் 1942ஆம் ஆண்டு தனது 13வது வயதில் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். கலை உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    லதா மங்கேஷ்கர்

    பட மூலாதாரம், ANI

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, உத்தர பிரதேசம்: அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டி

    உத்தர பிரதேச தேர்தல்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, லக்னெளவில் செய்தியாளர்களை சந்திக்கும் அகிலேஷ் யாதவ்.

    உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

    மேலும், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், தகவல் தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கு 22 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

    லக்னெளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் உறுதிமொழிகளை பட்டியலிட்டார்.

    "வீட்டு நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அல்லது மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கியது போல பல முக்கிய முடிவுகள் சமாஜ்வாதி கட்சி ஆட்சியிலேயே எடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஐடி துறையில் 22 லட்சம் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும்," என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    இதேவேளை, உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் மைன்புரியின் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்ற அதிகாரபூர்வ தகவலை சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் அறிவித்தார்.

    "எங்கள் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். மேலும் அவர் மகத்தான ஆணையுடன் வெற்றி பெறுவார்" என்று அகிலேஷின் செய்தியாளர் கூட்டத்தில் உடனிருந்த ராம்கோபால் யாதவ் கூறினார்.

    சில நாட்களுக்கு முன்பு, சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா, அகிலேஷ் யாதவ் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலின்போது கர்ஹாலில் போட்டியிடுவது பற்றிப் பேசியிருந்தார், ஆனால் முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மக்களவை தொகுதியாக மெயின்புரி இருந்து வருகிறது. அந்த தொகுதிக்குள்தான் கர்ஹால் இருக்கிறது.

    உத்தர பிரதேசத்தில் 2012 முதல் 2017 வரை சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றது. அதில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார்.

    உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

  12. உற்பத்தி விலைக்கே டீசல் - ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை, பிரபுராவ்ஆனந்தன்

    ராமேஸ்வரம்
    படக்குறிப்பு, ரூ. 5.66 கோடி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

    மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல், கைது நடவடிக்கையை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனர்.

    இதையடுத்து ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 20ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

    சிறையில் உள்ளத மீனவர்களை விடுதலை நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில்உள்ள 108 படகுகளுக்கு ஐந்துலட்ச ரூபாய், 17 நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ. 1.50 லட்சமும் மொத்தம் ரூ. 5.66 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

    இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    மீன்பிடி படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உற்பத்தி விலைக்கே அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

  13. மும்பை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோதி

    மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

    மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று மோதி அறிவித்துள்ளார்.

    மும்பை பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள டார்டியோவில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டிடத்தில் 3வது அடுக்கில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம் – கர்நாடக முதலமைச்சர்

    தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டத்தை நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்க்கிறோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எல்லையோ, தண்ணீர் தகராறோ ஏற்படும் போதெல்லாம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவது வழக்கமானது. அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளேன்," என்றார்.

    "கிருஷ்ணா மற்றும் காவிரி இரண்டிலும் நிலுவையில் உள்ள பல்வேறு நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட அம்சங்கள் குறித்து மிக நீண்ட விவாதம் நடைபெற்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் மேலும் ஒரு வீடியோ கான்பரன்ஸ் நடத்துவோம்.'' என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணி விதி திருத்தத்தால் மத்திய, மாநில உறவு சிக்கலாகும் - டிடிவி தினகரன்

    இந்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் விதிகளை திருத்தினால் மத்திய-மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    இது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன," என்று கூறியுள்ளார்.

    "இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய-மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும்.

    சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டுகிறேன்,'' அவர் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. ஆஸ்கர் இணையதளம், யூடியூப் தளத்தில் ஜெய்பீம் இடம்பெற்றது எப்படி? இயக்குநர் ஞானவேல் பேட்டி

    ஆஸ்கர் இணையதள பக்கத்தில் ஜெய்பீம் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதிற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்

    காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் இணையதளம், யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் தமிழ் பட டிரெய்லர் - எப்படி நடந்தது?
  17. அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை, இணைக்கப்பட்டுள்ளது -இந்திய பாதுகாப்புத்துறை

    இந்திய முப்படைகளின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இந்தியா கேட் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச்சின்னம் இருந்த பகுதியில் இருந்த சுடருடன் நேற்று இணைக்கப்பட்டது.

    ஆனால், 50 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த அமர்ஜவான் ஜோதியை வேறு இடத்துக்கு மாற்றவும் அதை அணைக்கவும் பரவலாக எதிர்ப்பு காணப்பட்டது.

    இந்த விவகாரத்தில் அந்த ஜோதி அணைக்கப்படவில்லை, இணைக்கப்பட்டிருக்கிறது என்ற விளக்கத்தை கொடுத்திருக்கிறது இந்திய பாதுகாப்புத்துறை.

    இது குறித்து விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்

    காணொளிக் குறிப்பு, எதிர்ப்பைக் கடந்து தேசிய போர் நினைவுச்சின்னத்தில் இணைந்த அமர் ஜவான் ஜோதி
  18. தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    செம்மொழி விருது

    பட மூலாதாரம், CMOTamilNadu

    படக்குறிப்பு, செம்மொழித் தமிழ் விருது பெற்ற அறிஞர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    விழாவில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்'' என்று அறிவித்தார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ''செம்மொழித் தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில், முதல்கட்டமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

  19. உத்தர பிரதேசத்தில் ராமர் சிலை அமைக்க நிலம் பறிப்பு - விவசாயிகள் புகார்

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி அருகே 251 மீட்டர் உயர ராமர் சிலை அமைப்பதற்காக தங்கள் நிலங்களை அரசு பலவந்தமாகப் பறிப்பதாக விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.

    அயோத்தியில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து மாஞ்சா பர்ஹட்டா. இந்த கிராம பஞ்சாயத்தில் 251 மீட்டர் உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்போவதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

    சிலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால், தங்களது நிலங்களை அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக கிராம மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...

  20. இங்கிலாந்தில் விரைவில் முக கவசம் கட்டாயம் இல்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன்

    இங்கிலாந்தின் கொரொனா தொடர்பான பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முடிவடைகிறது. பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது, கோவிட் பாஸ்போர்ட் ஆகிய இரண்டும் கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

    மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசு உடனடியாகக் கைவிடும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...