"பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் பருவத் தேர்வுகள் நடைபெறும்” – அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

பட மூலாதாரம், Twitter Dr.K.Ponmudy
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தோற்று காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர், பேராசிரியர், மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் க. பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மூலம் அனைத்து பொறியியல், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக ஆன்லைனில் பருவத் தேர்வை நடத்துவது என்றும் இந்தத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றின் பரவலைப் பொருத்து பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு மேல் ஆன்லைனிலோ நேரடியாகவோ தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.









