அலங்கார ஊர்தி சர்ச்சை: டெல்லியில் இருந்தவர்கள் 'திருப்பூர் குமரன் யார் என்று கேட்டார்கள்'
`நிபுணர் குழுவில் உள்ளவர்கள், திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள். சுதந்திர போராட்டத்தில் தென்னகத்தின் பங்களிப்பை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை' என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
60-ஆவது குடியரசு தினத்தில் அலங்கார ஊர்தி வடிவமைப்பில் அவர் பங்கேற்றிருந்தார். தற்போது அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனது கருத்தை அவர் கூறியுள்ளார்.
"என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர்" என ட்ராட்ஸ்கி மருது பிபிசியிடம் கூறியுள்ளார்.
2009-ஆம் ஆண்டில் 60-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தன. காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.





