You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மும்பையில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடிச்சம்பவம்: மூன்று பேர் பலி

இந்த வெடிச்சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம். மணிகண்டன் and ஜோ மகேஸ்வரன்

  1. மோதி உரையின்போது டெலிபிராம்டர் கோளாறு?

    உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை மாலை உரையாற்றியபோது திடீரென்று தன் பேச்சுக்கு இடையே இடர்பாட்டை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோதி தனது பக்கவாட்டாகப் பார்த்து கேள்வி எழுப்புவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவரது டெலிப்ராம்ப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.

    எனினும் ஆல்ட் நியூஸின் முகமது ஜுபைர் தனது பதிவில், " இது டெலிபிராம்டர் பிரச்னையாகத் தோன்றவில்லை. இருபது நிமிட உரையில் அவர் பக்கவாட்டில் பார்க்கவில்லை. டெலிபிராம்டர் முன்னால் இருந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  2. சுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?

    எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவான டோங்காவில் வசிக்கும் மக்களுக்கு என்னவாயிற்று என்பது இரண்டு நாள்களாகியும் வெளியுலகத்துக்குத் தெரியவில்லை.

    தொலைத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால், நிலைமையை ஆராய விமானங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

    கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததால் தீவு முழுவதும் சாம்பல் மூடியிருப்பதாகவும், ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான சுனாமி அலைகளால் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.

    எரிமலை வெடித்த சத்தம் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கும் நியூசிலாந்து வரைக்கும் கேட்டிருக்கிறது.

    10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பெரு நாடு வரைக்கும் சுனாமி அலைகள் சென்றிருக்கின்றன.

  3. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்