மும்பையில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடிச்சம்பவம்: மூன்று பேர் பலி

இந்த வெடிச்சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம். மணிகண்டன் and ஜோ மகேஸ்வரன்

  1. ஜனவரி 18ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிக செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடிப்பு சம்பவம்: மூன்று கடற்படை வீரர்கள் பலி

    இந்திய கடற்படை

    பட மூலாதாரம், Indian Navy

    படக்குறிப்பு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல்

    மும்பை கடற்படை கப்பல் தளத்தில் செவ்வாய்க்கிழமை ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

    கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை.

    கிழக்கு கடற்படை கட்டளைப் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை கடற்படை பிராந்திய தலைமை நியமித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 11 பேர் உள்ளூர் கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

  3. குடியரசு தினம்: இந்திய நிபுணர் குழு ஏற்காத தமிழக அலங்கார அணிவகுப்பு சென்னை நிகழ்வில் இடம்பெறும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளை இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழு கவனத்தில் கொள்ளாத நிலையில், அந்த தலைவர்களின் விடுதலை வேட்கையை பறைசாற்றும் அலங்கார ஊர்தி தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த அலங்கார ஊர்தி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

    இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் முதல்வரின் அறிவிப்பு என்ற பெயரில் செய்தி மக்கள்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட செய்திக்குறிப்பு பகிரப்பட்டிருக்கிறது.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு புதிய செயலாளர்

    திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைமை கழக அறிவிப்பு தெரிவிக்கிறது.

    திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அரசு பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் கொடுத்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி.ஆர்.பி ராஜா திமுக பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    trb raja

    பட மூலாதாரம், trb raja facebook

    படக்குறிப்பு, டி.ஆர்.பி. ராஜா
  5. கொரோனாவால் பணக்காரர்கள் சொத்து மதிப்பு உயர்வு

    கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது.

    மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 2020 மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் அவர்களின் சொத்துகள் 700 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து $1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருந்தாலும், அவர்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஈலோன் மஸ்கின் சொத்து மதிப்பு, மேலே குறிப்பிட்ட காலத்தில் 1,000 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது, அதே நேரத்தில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 30% உயர்ந்துள்ளது.

  6. போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றம்

    இந்தியா முழுவதும் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

    கொரோனா பரவல் காரணமாக, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதால், வரும் 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போலியோ தடுப்பூசி முகாம் பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  7. கோவை: பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், மோகன்

    கடந்த ஜனவரி 8-ம் தேதி கோவை மாவட்டம் வெள்ளலூரில் திராவிடர் கழக கிளை முன்பாக அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது மர்ம் நபர்கள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்திருந்தனர்.

    இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்த வெள்ளலூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இந்து முன்னணியைச் சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் என்கிற இருவரை கைது செய்திருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

    தற்போது இருவரும் கோவை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  8. குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அரசியலாக்க கூடாது - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

    டாக்டர் கிருஷ்ணசாமி

    குடியரசு தின பேரணியில் தமிழ்நாடு அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அரசியலாக்க கூடாது என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ''குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி மட்டுமின்றி, மேற்கு வங்கத்தின் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ரவீந்திரநாத் தாகூரை தாங்கிய ஊர்தியும் கேரள அரசின் நாராயண குருவை தாங்கிய ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரம், பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று அர்த்தம் அல்ல.

    மூன்று கட்ட கலந்தாய்வில் தமிழக அரசு வழங்கிய மாதிரிகளை பற்றி மக்களிடம் தெரிவிக்காமல், ஒட்டுமொத்தமாக தமிழகத்தை புறக்கணித்துவிட்டார்கள் எனப் பேசக் கூடாது.

    இந்த வருடம் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் அடுத்த வருடம் கிடைக்கப்போகிறது. அதனால் இதை அரசியலாக்கக்கூடாது.'' என்றார்

  9. காவிரியில் மேக்கேதாட்டு அணை கூடாது – விவசாயிகள் பேரணி தொடக்கம்

    விவசாயிகள் பேரணி

    பட மூலாதாரம், P R Pandian

    படக்குறிப்பு, தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியைத் தொடர்ந்த விவசாயிகள்

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேக்கேதாட்டு முற்றுகை வாகனப் பேரணி இன்று தொடங்கியது.

    தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூரில் இன்று காலை தொடங்கிய பேரணி, தஞ்சாவூர், திருச்சி வழியாக இரவு ஓசூர் சென்றடைகின்றது. நாளை காலை மேக்கேதாட்டு பகுதி நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    ''முடிந்து போன காவிரிப் பிரச்சினையை, அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக காங்கிரஸ் கட்சி மீண்டும் கிளப்பியுள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டக் கோரி, அங்கு காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியுள்ளது. இதைக் கண்டித்தும் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிகளை முழுமையாக தடுத்து நிறுத்தக் கோரியும் இந்த போராட்டம்,'' என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    விவசாயிகள் போராட்டம்

    பட மூலாதாரம், P R Pandian

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் - நிபுணர் குழு பரிந்துரைப்படி ஊர்தி தேர்வு

    இந்திய குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி இடம் பெறாதது குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    ''நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன. முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பரிசீலனையில் இருந்தது. இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.

    அணிவகுப்பில் பங்கேற்கும் 12 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை. கடந்த 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இடம் பெற்றுள்ளன,'' என அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, குடியரசு தினம்: தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லை - பாதுகாப்புத்துறை

    இந்திய குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு ஊர்தி இடம் பெறாது என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 25, 000 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது 5, 000 – 8, 000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது உருவங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

    தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநில அரசு ஊர்திகளுக்கும் அனுமதி இல்லை.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. என்னைக் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை - பஞ்சாப் முதலமைச்சர்

    தேர்தலைக் கருத்தில் கொண்டு தன்னை குறி வைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது என்று பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சன்னி உறவினர் பூபேந்திர சீங் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக மணல் அள்ளியது, கனிம முறைகேடு குறித்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி கூறுகையில், ''வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு அழுத்தம் தரும் வகையில், என்னை குறி வைத்து, இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதை எதிர்த்து போராடுவோம். மேற்கு வங்கத்திலும் இது போல்தான் நடந்தது.'' என்றார்.

    பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. பஞ்சாப் தேர்தல்; ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பஹ்வன்ட் மான்

    பஞ்சாப் தேர்தல்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, பஹ்வன்ட் மான்

    பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பஹ்வன்ட் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பஹ்வன்ட் மான், பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் தொகுதி எம்.பியாக தற்போது உள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தியை உறுதி செய்ய வேண்டும்- ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை

    குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்கவும் ஹஜ் புனிதப் பயணத்திற்கான விமானநிலையப் பட்டியலில் சென்னையை சேர்க்கவும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    '' கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்க இருந்த ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்கிற செய்தி வருத்தம் அளிக்கிறது. இது குறித்து முதமைச்சர், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழ்நாடு அரசின் ஊர்தி இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும், புனித் ஹஜ் பயணம் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த இரு விவகாரங்களும் அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டியவை. அப்படி முடியவில்லை என்றால், பிரதமரிடம் முதலமைச்சர் நேரடியாக பேசி, உறுதி செய்ய வேண்டும். இவ்விரு கோரிக்கைகளுக்கும் அதிமுக முழு ஆதரவினை நல்கும்.'' என்றும் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. வண்டலூர் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த சிறுத்தை இன்று உயிரிழந்தது.

    கொரோனா பரிசோதனைக்காக தனியாக அடைக்கப்பட்டிருந்த சுமார் 17 வயதுடைய பெண் சிறுத்தை, கூண்டிற்குள் சிக்கி இறந்தது.

    இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் கருணபிரியா பிபிசி தமிழிடம் கூறுகையில்,"சிறுத்தைக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. தற்போது வரை கிடைத்துள்ள தகவல்படி, சிறுத்தை இறப்பிற்கு கோவிட் காரணமில்லை. உடற்கூறு ஆய்வு நடந்து வருகிறது. அதன் முடிவுகள் வந்தபிறகு தான் முழு விபரங்களையும் கூறமுடியும்," என்றார்.

    உயிரியல் பூங்கா ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 31ம் தேதி வரை பூங்காவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து விலங்குகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

  16. திருச்சி நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு – 800 காளைகள் பங்கேற்பு

    நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம், Vijay

    படக்குறிப்பு, இரண்டு மணி நேரம் தாமதமாக ஜல்லிக்கட்டு தொடங்கியது

    திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதன்படி இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள் வந்தன. மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேரம் குறைவாக இருப்பதால், மாடுகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டுமென ஜல்லிக்கட்டு குழுவிடம் காவல் துறையினர் வலியுறுத்தினர்.

    இது குறித்த பேச்சுவார்த்தையால் 2 மணி நேர காலதாமத்திற்கு பின்னர் காலை 10 மணிக்கு பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது. பாதுகாப்பு பணியில், 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக, கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளையும், மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்களையும் பரிசோதனை செய்து களத்திற்கு அனுமதித்தனர்.

    ஜல்லிக்கட்டு

    பட மூலாதாரம், Vijay

    படக்குறிப்பு, நவலூர் குட்டப்பட்டில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  17. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 22 பேர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்

    பட மூலாதாரம், USGS HANDOUT

    படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்டன.

    ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க புவியியல் சங்கத்தின் (USGS) விபரப்படி 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் திங்கள் கிழமை ஏற்பட்டன.

    மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது வரை குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் இறந்து கிடந்தவர்களில் நான்கு குழந்தைகளும் உள்ளதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எப்.பியிடம் தெரிவித்தார்.

    பிற்பகலில் முதல் நிலநடுக்கமும், தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 2வது நில நடுக்கமும் ஏற்பட்டது. காதிஸ் மற்றும் முகர் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும், அங்கு பல குடியிருப்புகள் உறுதியானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

  18. திருப்பூர் அமராவதி ஆற்றில் 6 பேர் பலி - புதை மணலில் சிக்கி

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் சென்றுவிட்டு, நேற்று மாலை திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்க ஆற்றில் இறங்கினர்.

    அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர்கள் சிலர் புதை மணலில் சிக்கினர். அருகிலிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சித்தினர். ஆனாலும், ரஞ்சித், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்ரவர்மன், மற்றும் அமிர்த கிருஷ்ணன் ஆகிய 6 இளைஞர்கள் புதை மணலில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இளைஞர்கள் குளிக்கச் சென்ற இடம் ஆழம் மற்றும் புதைமணல் நிறைந்த பகுதி. அதை அறியாமல் இளைஞர்கள் இறங்கி விட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

    அமராவதி ஆற்றில் இதே போல சமீப காலங்களில் 10க்கும் மேற்பட்டோடர் புதைமணலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதே போல், நேற்றைய தினம் பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் அருகே கல்லாறு தடுப்பணையில் குளிக்க சென்ற 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

  19. இந்தியாவில் கொரோனா தொற்று 2.38 லட்சம் - குறையத் தொடங்கியுள்ளது

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2, 38, 018 ஆக பதிவாகியுள்ளது. முந்தைய நாளை விட 20, 071 குறைந்துள்ளது. ஒரு நாளில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்றைய தினம் மட்டும் 1, 57, 421 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 17, 36, 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 14.43 விழுக்காடாக உள்ளது.

    நாடு முழுவதும் மொத்த ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8, 891 ஆக உயர்ந்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. இந்திய குடியரசு தின ஊர்தி விவகாரம்: எங்களுக்கும் பொறுமை இருக்கிறது – கவிஞர் வைரமுத்து

    வைரமுத்து

    பட மூலாதாரம், வைரமுத்து

    படக்குறிப்பு, ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை - வைரமுத்து

    இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உருவங்களைக் கொண்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, ''தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை.

    வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம்.

    நிபுணர் குழுவின் புரிதல் இது.

    திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு