இந்திய பிரதமர் மோதி பொங்கல் வாழ்த்து - எழுச்சிமிக்க கலாச்சார அடையாளம்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்புமிகு நாளில் அனைவருக்கும் குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
இயற்கை உடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதர உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்.'' என்று மோதி தெரிவித்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.