You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மது விருந்து சர்ச்சை: போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை ஏற்க மறுக்கும் எம்.பி.க்கள்

பிரிட்டனில் கொரோனா அலையின் முதலாவது தாக்கத்தின்போது பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபரை வெளியே சந்திக்க தடை விதிக்கப்பட்டது. அப்போது சுமார் தமது வீட்டில் 30 பேர் பங்கேற்ற மது விருந்து நடந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறை - விசாரணை குழு அமைப்பு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் சென்ற போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மல்ஹோத்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில், பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் மாநில டி.ஜி.பி., தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    கடந்த 5ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோதி சென்ற போது, அவரது வாகன தொடரணிக்கு முன்பாக சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

  2. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருங்கள் - தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

  3. மூன்றாம் பாலினத்தவர்கள் மீது காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்

    திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் நான்கு பேர் அவர்களின் பாலினத்தை நிரூபனம் செய்வதற்காக காவல் நிலையத்திலேயே ஆடை களைய வைக்கப்பட்டனர் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

    சனிக்கிழமை அன்று அங்குள்ள ஒரு விடுதியில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பின்பு இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

    தாங்கள் இனிமேல் வேறு பாலினத்தின் உடையை அணிய மாட்டோம் என்று எழுதி வாங்கப்பட்டது அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்புகார் குறித்த செய்தி நேற்றுதான் ஊடகங்களிடம் பகிரப்பட்டுள்ளது.

  4. ஊதியமாக தானியம் வாங்கும் தாலிபன்கள்

    வேலை செய்பவர்களுக்கு சன்மானமாக உணவு வழங்கும் திட்டத்தை தாங்கள் விரிவுபடுத்தி உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பல்லாயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நன்கொடையாக பெறப்பட்ட கோதுமை ஊதியமாக வழங்கப்படும்.

    2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பின்பு அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

    ஊழியர்களுக்கு ஊதியமாக தானியத்தை வழங்கும் தாலிபான்களின் முடிவு பொருளாதார நெருக்கடியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு வகையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

    4400 கோடி அமெரிக்க டாலர் நிதியும் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் மனிதநேய சேவைகளுக்காக தேவை என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் கூறுகிறது.

  5. 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்

    அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார்.

    2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று உண்டாகியுள்ளதன் அடிப்படையில் இந்தக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு வார காலத்தில் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

  6. சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

    இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தாம் கூறிய 'மரியாதைக் குறைவான' நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

    ஆபாசமாகப் பொருள் கொள்ளும்படி சித்தார்த்தின் ட்வீட் இருந்தாக அவர் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார்.

    சாய்னா நேவாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து , தமது மன்னிப்புக் கடிதத்தை அவர் நேற்று இரவு தமது ட்விட்டர் கணக்கிலும் பகிர்ந்துள்ளார்.

  7. தடுப்பூசி போடாதவர்களுக்கு கூடுதல் வரி

    கனடாவின் கியூபெக் மாகாண அரசு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ளது.

    கனடாவிலேயே அதிகமான கொரோனா மரணங்களைச் சந்தித்துள்ள இந்த மாகாணத்தில் இப்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கியூபெக் மாகாணத்தில் இதுவரை 12.8% பேர் தடுப்பூசி போடவில்லை. ஆனால், கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் இவர்கள் பாதி அளவு உள்ளனர்.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியைத் தொகுத்து வழங்குவது விக்னேஷ்.அ.