மது விருந்து சர்ச்சை: போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை ஏற்க மறுக்கும் எம்.பி.க்கள்
பிரிட்டனில் கொரோனா அலையின் முதலாவது தாக்கத்தின்போது பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபரை வெளியே சந்திக்க தடை விதிக்கப்பட்டது. அப்போது சுமார் தமது வீட்டில் 30 பேர் பங்கேற்ற மது விருந்து நடந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
கோவையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை, 10 பேர் கைது.
கோவை மாவட்டம் ஆலந்துறைக்கு உட்பட்ட தென்னமநல்லூரில் கொள்ளை அடிக்க முயன்ற வட மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 11-ம் தேதி இரவு தென்னமநல்லூரில் பகுதியில் பிடிபட்ட வட மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஊர் மக்கள் கடுமையாக தாக்கியதில் தலையில் அடிபட்ட இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரின் உடலை நொய்யல் ஆற்றில் சிலர் வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தகவறிந்து வந்த காவல்துறையினர், இறந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்னமநல்லூரைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இறந்த இளைஞர் யார் என்பது அடையாளம் தெரியாயதால் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போர் என வந்தால் வெற்றி பெறுவது இந்தியாதான்: ராணுவ தலைமைத் தளபதி
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, முகுந்த் நரவனே, இந்திய ராணுவ தலைமைத் தளபதி
நாட்டின் வடக்கு எல்லையில் சீனாவுடன் மோதல் ஏற்படும் சாத்தியம் குறித்து ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாட்டுடனும் சண்டையிடுவது அல்லது மோதுவது கடைசி வழியாக இருக்க வேண்டும். ஆனால் நாம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதில் வெற்றி இந்தியாவுடையதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மறுபுறம், பாகிஸ்தானுடனான நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள சமீபத்திய சூழ்நிலை குறித்து விவரித்த ஜெனரல் நரவனே, அங்குள்ள பல்வேறு ஏவுதளங்களில் தீவிரவாதிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தப் பக்கமாக ஊடுருவ முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
ராணுவ தினத்திற்கு முன்னதாக புதன்கிழமை நடந்த தமது வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் ஜெனரல் எம்.எம்.நரவனே இந்த விஷயங்களை கூறினார்.
நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் உள்ள 'மோசமான' அண்டை நாடுகளுடன் போட்டியிட இந்திய ராணுவம் அந்த பகுதிகளில் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதில், சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில் பாதைகள், கூடுதல் பாலங்கள், பாலங்கள் பழுதுபார்ப்பு, பொருட்கள், எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் சேமிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா: மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை
கொரோனா, ஒமிக்ரான் பரவல் நாடு தழுவிய அளவில் அதிகரித்து வருவதால் மாநில அளவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவற்றின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்க காலத்தில் மது விருந்து சர்ச்சை: மன்னிப்பு கேட்ட போரிஸ், பதவி விலக கோரும் எம்.பிக்கள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரதமர்
கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நாளில் "உங்கள் சொந்த மதுவை கொண்டு வாருங்கள்" என அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்டதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், பிரதமர் பொறிப்பின்றி செயல்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கையை ஒரு பிரிவு பிரிட்டன் எம்.பி.க்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
தனது மன்னிப்பு கோரலின்போது நடந்த நிகழ்வை விளக்கிய போரிஸ் ஜான்சன், தோட்டத்தில் நடந்த நிகழ்வு "தொழில்நுட்ப ரீதியாக விதிகளுக்கு உட்பட்டது" என்றாலும் அது பொதுமக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தாம் உணர்ந்திருக்க வேண்டும். என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் தனது "அபத்தமான" பொய்கள் மற்றும் சாக்குப்போக்கு கூறியதால் அவர் இப்போது விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அவரது இணையர் இருவரும் சுமார் 30 பேருடன் விருந்தில் பங்கேற்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களுக்கோ வெளியே ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தது.
பிரதமரின் செய்தித்தொடர்பாளர் விளக்கம்
20 மே 2020 அன்று "சமூக இடைவெளியுடன் பானம்" அருந்த ஊழியர்களை அழைக்கும் மின்னஞ்சலைப் பிரதமர் பார்க்கவில்லை அல்லது பெறவில்லை என்று போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை பிரதமர் அனுப்பச் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜான்சனின் அப்போதைய வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரா, அங்கு உணவு மற்றும் பானத்தை அவர் கவனித்தாரா அல்லது அவரே ஒரு பாட்டிலை கொண்டு வந்தாரா என்று கேட்டபோது, பிரதமரின் செய்தித்தொடர்பாளர் பதில் ஏதும் அளிக்கவில்லை.
பதவி விலகிய மறுநாளே பழைய வழக்கில் சுவாமி பிரசாத் மெளரியாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மெளரியாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 2014ஆம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அவர் பேசியதாக தொடரப்பட்டிருந்தது.
உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தால் இந்த வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு தெய்வங்கள் குறித்து அநாகரிக கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2014இல் சுவாமி பிரசாத் மெளரியா பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். 2016ஆம் ஆண்டு அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் யோகி அரசில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், பழைய வழக்கில் அவருக்கு எதிரான உத்தரவு வெளிவந்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கில் சுவாமி பிரசாத் மெளரியா நீதிமன்றத்தில் சரணடைந்துால் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்கிறார் வழக்கு தொடர்ந்தவரான அனில் திவாரி.
இதற்கிடையே, வரும் 14ஆம் தேதி சமாஜ்வாதி கட்சியில் சேரப்போவதாக சுவாமி பிரசாத் மெளரியா இன்று மாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் - பிரதமர் மோதி பேச்சு
பட மூலாதாரம், PIB
படக்குறிப்பு, ஒரேநேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை - பிரதமர் மோதி
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன புதிய கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி காணொளி வழியாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய நரேந்திர மோதி, "அனைவருக்கும் பொங்கல், மகர சங்கராந்தி வாழ்த்துகள். தை பிறந்தால் வழி பிறக்கும்.' என்று தமிழில் பிரதமர் மோதி பேசினார்.
''ஒரேநேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுவது, இதுதான் முதல்முறை. அண்மையில் உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிககள் தொடங்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மொத்தம் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது, 596 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது 54% அதிகம்.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. அதிகரித்துள்ள மருத்துவ கட்டமைப்புகளால், மருத்துவ சுற்றுலாவிற்கு ஏற்ற நாடாக இந்தியா உள்ளது. தரமான, சிறந்த மருத்துவ சேவைக்கான மையமாக இந்தியா உள்ளது.'' என்றார்.
மேலும், "தமிழ் மொழி, கலாச்சாரத்தின் செழுமையால் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பழமையான மொழியான தமிழில் சில வார்த்தைகள் பேசியது, வாழ்வின் மகிழ்ச்சியான தருணம். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கையை அமைக்கப்பட்டுள்ளது. எனது மக்களவை தொகுதியில் உள்ள இந்த இருக்கை, தமிழ் குறித்த ஆர்வத்தை பெரியளவில் தூண்டும் வகையில் உள்ளது.
தாய்மொழி வழிக் கல்வியை அரசு ஊக்குவிக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.'''என்றார்.
இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா உள்ளிட்டோர் சென்னையில் இருந்து பங்கேற்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் திருப்பூரில் இருந்து பங்கேற்றனர்.
ராஜிநாமா செய்த உ.பி. அமைச்சரை சமாஜ்வாதிக்கு அழைக்கும் அகிலேஷ்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்த தாரா சிங் சவுகானை சமாஜ்வாதி கட்சிக்கு வருமாறு அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்காக ட்விட்டரில் அகிலேஷ் வெளியிட்டிருக்கும் பதிவில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
எனினும் இதுவரை எந்தக் கட்சியிலும் சேருவதாக தாரா சிங் சவுகான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
வனத்துறை அமைச்சராக இருந்து தாரா சிங், பிற்படுத்தப்பட்ட, தலித் சமூக மக்களை யோகி அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி பதவியை ராஜிநாமா செய்தார்.
தங்கமீன் கார் ஓட்டும் திறன் கொண்டது: இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பட மூலாதாரம், Getty Images
கோல்ட்ஃபிஷ் எனப்படும் தங்க மீன்களுக்கு கார் ஓட்டும் அளவுக்கு திறன் இருப்பதாக இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான விசித்திர ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.
ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட சிறிய வானகத்தின் மீது தங்க மீன் இருக்கும் ஒரு தொட்டியை வைத்தனர். மீன்களின் நகர்வுகளைப் பதிவு செய்து வழிகாட்டும் வகையில் ஒரு கேமரா அமைப்பு பொருத்தப்பட்டது. மீன்களின் நகர்வுக்கு ஏற்ப வாகனம் நகரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து வாகனத்தை குறிப்பிட்ட இலக்கை நோக்கி மீனால் இயக்க முடிந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான காணொளியையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
8 மாநிலங்களில் கொரோனா வேகமாக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் கவலைக்குரிய வகையில் கொரோனா வேகமாக அதிகரிக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பரிசோதனை செய்தவர்களில் 32.18 சதவிகிதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோர் 7 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாள்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றால் மீண்டும் பரிசோதனை செய்யாமலேயே குணமடைந்ததாக அறிவிக்கப்படும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
உத்தர பிரதேசம்: யோகி அமைச்சரவையில் மேலும் ஒருவர் ராஜிநாமா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச மாநில முதல்வர்
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் மற்றொரு அமைச்சரான தாரா சிங் செளகான் ராஜிநாமா செய்துள்ளார்.
முன்னதாக, யோகி அரசில் இருந்து சுவாமி பிரசாத் மெளரியா செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
உத்தர பிரதேச மாநிலத்துக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆளும் யோகி அரசில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாக மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த தாரா சிங் செளகான் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்த நிலையில், தனது முடிவை தாரா சிங் மறுபரிசீலனை செய்யுமாறு தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு குடும்ப உறுப்பினர் தவறான பாதையில் சென்றால் எப்படி வேதனை தருமோ அதுபோல தாரா சிங் செய்வது வேதனை அளிக்கிறது. மூழ்கும் படகில் ஏறுவதால் இங்கிருந்து செல்வோருக்கு நஷ்டமே ஏற்படும் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். மூத்த சகோதரரான தாரா சிங் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேசவ் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் முடிவு – பதிவாளர் சுற்றறிக்கை
தமிழ்நாட்டில் டிசம்பர் 31ஆம் தேதி, அதற்கு முன்னதாக பதவிக்காலம் முடிந்த சங்கங்களை கணக்கிட்டு, உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகள் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக குறைக்கப்பட்டது. இதைக் கணக்கில் கொண்டு, 2021ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிந்துள்ளது.
டிசம்பர்
31ஆம் தேதி, அதற்கு முன்னதாக பதவிக்காலம் முடிந்த சங்கங்களை கணக்கிட்டு, உறுதி செய்ய வேண்டும். மூன்றாண்டுகள் பதவிக் காலம் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட
நாளில் இருந்து, கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின்
பதிவாளர் சண்முக சுந்தரம், கூடுதல், இணைப்
பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தை மூன்றாண்டுகளாக குறைக்கும்
சட்டம் அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘’ கடந்த ஆட்சியில் பல கூட்டுறவு சங்கங்களில் தேர்தலை நடத்தாமல் அதிமுகவினர் நியமிக்கப்பட்டனர். கூட்டுறவு சங்கங்களில் பெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக நகைக்கடனில் பெரும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
‘’ என்று தெரிவித்தார்.
பொங்கல் தொகுப்பு வழக்கு: இளைஞர் மரணத்துக்கு கவலை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற மகன் குப்புசாமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்த இளைஞரின் மரணம் தமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
"இளைஞரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன்.
வலைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்,
உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது.
ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது; இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று வாக்குறுதி
அளித்துவிட்டு, இப்போது ரூ.2900 என்ற அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும்
செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நான் முதலமைச்சராக இருந்த
2016-17 காலகட்டத்தில், டன்னுக்கு ரூ. 2, 300 மத்திய அரசு நிர்ணயம்
செய்தது. இத்துடன் தமிழ்நாடு அரசின் பரிந்துரை, போக்குவரத்து
செலவு என ரூ. 550 சேர்த்து டன் ஒன்றிற்கு மொத்தம் ரூ. 2, 850 வழங்கப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் டன்னுக்கு
ரூ. 3, 500 வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு
முன்பு தேர்தல் வாக்குறுதியில் டன்னுக்கு ரூ. 4, 000 ஆயிரம் வழங்கப்படும்
என்றார். தற்போது, ஒரு டன்னுக்கு ரூ. 5, 000 வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டன்னுக்கு ரூ. 2,707.50 என மத்திய அரசு விலை
நிர்ணயம் செய்துள்ளது. இத்துடன் மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ. 150 உட்பட மொத்தம் ஒரு
டன் கரும்புக்கு ரூ. 2, 900 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
எனவே, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, வாக்குறுதி அளித்தபடி,
கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 4, 000 வழங்க வேண்டும்,'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியா - சீனா 14வது கட்ட பேச்சுவார்த்தை - எல்லைப் பிரச்சினை தொடர்பாக
இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக 14வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. சீனாவின் சுஷல் -மோல்டோ சந்திப்பு மையத்தில் நடைபெறும், பேச்சுவார்த்தையில் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா தரப்பில் ராணுவ உயரதிகாரி அனிந்தியா சென்குப்தா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சிதம்பரத்தில் மருத்துவ மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா
அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ
மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, விடுதிகள்
மூடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும்
மருத்துவமனை தற்சமயம் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
கல்லூரிகளுக்கு
வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டதால், விடுதியில்
இருந்த பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் படிக்கும்
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவர்கள் சிலர் மட்டும் விடுதிகளில்
தங்கியிருந்தனர்.
இந்நிலையில்,
விடுதியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் 22,
மாணவிகள் 36 பேர் என மொத்தம் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உழவர்களின் தன்மானத் திருநாள் - மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பட மூலாதாரம், M.K.Stalin
படக்குறிப்பு, கொரோனா பரவலால் பொங்கலுக்கு நேரில் சந்திக்க வருவதைத் தவிர்க்கவும் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்ப்
பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான
உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய
துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும்
நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும்
வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள்.
இப்படித் தனித்தனியாக
வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்’ என, பூமிப் பந்தில்
தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில்
இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு
மக்களுக்கும், உலகத்
தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.
தமிழர்
திருநாளில் உங்களில் ஒருவனான என்னை நீங்கள் இல்லம் தேடி வந்து சந்திப்பது வழக்கம்.
அது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும்
பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும்
வழங்கும். ஆனால், கொரோனா
அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதைத்
தவிர்க்கும் வகையில், பொங்கல்
நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக, கட்டாயம் தவிர்க்க
வேண்டும் என அன்பு கலந்த உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள்
நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச்
செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும்
மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்!
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத்
தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்,'' என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினம் - பிரதமர் இணைய வழியில் பங்கேற்பு
பட மூலாதாரம், Narendra Modi
படக்குறிப்பு, புதுச்சேரியில் பிரதமர் மோதி திறந்து வைத்துள்ள காமராஜர் மணிமண்டபம்
புதுச்சேரியில் 25வது தேசிய இளைஞர் தின விழா இன்று தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி தொழில் நுட்பத்தில் பங்கேற்று, விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், ரூ. 122 கோடியில் சிறு. குறு தொழில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள விழா அரங்கத்தில் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டு நாட்களுக்கு இணைய வழியில் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா: இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் ஒரு நாள் தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1, 94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 60, 405 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர். ஒரு நாளில் 442 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை மொத்தம் 9, 55, 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரிசோதனைக்கு உள்ளாவோரில் தொற்று உறுதியாகும் விகிதம் 11.05% ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்த ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 4,868 ஆக உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது