You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விராட் கோலியின் நிதானப் போராட்டம் 201 பந்தில் முடிந்தது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகளைச் சந்தித்து 79 ரன்களை எடுத்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு தொற்று

    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 1, 68, 063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 277 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மொத்தம் 69, 959 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர்.

    தற்போது வரை 8, 27, 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோதனை செய்ய்யப்படுவோரில் தொற்று உறுதியாகும் விகிதம் 10.64% ஆக உள்ளது.

    இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4, 461 ஆக உள்ளது.

  2. தொடர்ந்து நேரலைப் பக்கத்தில் இணைந்திருங்கள் - தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இன்றைய நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

  3. பொங்கல் தொகுப்பில் இந்தி - ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம்

    தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    திமுக அரசு பொறுப்பேற்றபோது 4,000 ரூபாய் பணம் மற்றும் 14 பொருட்கள் வழங்கப்பட்டபோது யாரும் குறை சொல்லவில்லை. ஏனெனில், அப்போது குறை இல்லை. ஆனால், இப்போது குறை இருக்கிறது; அதைத்தான் சொல்கிறார்கள் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  4. தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் - முழு விவரம்

    தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

    அது குறித்த விரிவான விவரங்களை வழங்கும் பிபிசி தமிழின் நேற்றைய பேஸ்ஃபுக் நேரலை.

  5. பன்றியின் இதயம்: மனிதருக்குப் பொருத்தி அமெரிக்காவில் சாதனை

    உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    பால்டிமோரில் 7 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் டேவிட் பென்னெட் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  6. யுக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கமில்லை - அமெரிக்காவிடம் கூறிய ரஷ்யா

    யுக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

    திங்களன்று ஜெனிவாவில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையின்போது இதை ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா தரப்பில் வெண்டி ஷெர்மன் மற்றும் ரஷ்யா தரப்பில் செர்கெய் ரியாப்கோவ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினர்.

    யுக்ரைன் உடனான எல்லைப் பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினர் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் ரஷ்யா யுக்ரைன் மீது படையெடுப்பதற்கான வாய்ப்புள்ளதாகக் கருதும் மேற்குலக நாடுகள், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தன.

    யுக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் சேரக் கூடாது என்று ரஷ்யா கடந்த மாதம் கூறியிருந்தது.

  7. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குவது விக்னேஷ்.அ, ஜோ மகேஸ்வரன்