You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மேக்கேதாட்டு: தடையை மீறி பாத யாத்திரை - 33 காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறி மேக்கேதாட்டு நோக்கி பேரணியாக செல்ல முயன்றதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது கர்நாடகா மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

    இந்தியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை போடப்படுகிறது.

    சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோர் இதனைப் போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிறது.

    இணை நோய்கள் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் அதற்கான மருத்துவச் சான்று எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமையே தொடங்கிவிட்டது.

  2. நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 19 பேர் பலி

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 32 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளநர்.

    19 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் பாதிக்கப்பட்டவர்களைக் காண முடிந்ததாக தீயணைப்புத் துறை ஆணையர் டேனியர் நீக்ரோ தெரிவித்தார்.

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உயிரிழப்பு இது எனவும் அவர் கூறினார்.

    மூன்றாவது தளத்தில் இருந்து தீப் பிடிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சில நாள்களுக்கு முன் பிலடெல்பியாவின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

  3. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், ஜோ. மகேஸ்வரன்.