ராஜேந்திர பாலாஜிக்கு உதவிய கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படும்: அண்ணாமலை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தொடர்ந்து இணைந்திருங்கள் - இனி நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்,

  2. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு

    தமிழ்நாட்டில் ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு தமிழ்நாடு மாநிலம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    பால், நாளிதழ், மருத்துவ சேவைகள், சமையல் எரிவாயு, சரக்கு வாகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இரவில் அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

  3. கேப்பிட்டல் கட்டட தாக்குதல் ஓராண்டு நிறைவு - டிரம்பை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்

    Biden

    பட மூலாதாரம், Getty images

    கடந்த 2021 ஜனவரி 06ஆம் தேதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஜோ பைடன் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற முடிவுகளை உறுதி செய்வதற்கான நாடாளுமன்றக் கூட்ட நடைமுறைகளை இடைமறித்தனர்.

    கலவர சூழலில், அவையில் இருந்த அமெரிக்க அரசியல் தலைவர்கள் பயந்து நடுங்கிய காட்சிகள், உலகம் முழுக்க ஒளிபரப்பாயின.

    இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்நிகழ்வு நடந்து முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அது குறித்து பேசிய ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    ''தனது ஆதரவாளர்களிடம் காங்கிரஸை நோக்கி அமைதியாக பேரணியை நடத்தச் சொன்ன டிரம்ப், போராடவும் ஊக்குவித்தார். தான் தோற்ற தேர்தலில் பெரிய அளவில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமின்றி கூறினார்'' என ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "தேர்தலைக் குறித்து பைடன் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேப்பிட்டல் கட்டட முதலாமாண்டு நிறைவைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளனர்.

  4. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன், விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் கெளதமன் முராரி.