ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி
பரோலில் வெளிவந்துள்ள நளினிக்கு சில நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, வெளி நபர்களை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் அடங்கும். மேலும் அருகில் வீட்டுக்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இந்தியாவில் மொத்தம் 578 பேருக்கு ஒமிக்ரான் தொற்று
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை ஒரு நாளில் மட்டும்156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியில் 148 பேருக்கும், மகராஷ்ட்ராவில் 141 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
கடந்த 7 மாதங்களில் அதிக அளவாக ஒரே நாளில் மும்பையில் 922 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகமானால் ஜல்லிக்கட்டு நடக்காது - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி, பிரபு ராவ் ஆனந்தன்
பட மூலாதாரம், மு.நியாஸ் அகமது
ஒமிக்ரான் பரவல் அதிகமானால் ஜல்லிக்கட்டு நடக்காது என்று சட்டதுறை அமைச்சர் ரகுபதி காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, "ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, அரசு தடை விதிக்காமல் இருந்தால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். மாறாக தொற்று பரவுவது அதிகமாகி, கட்டுபாடுகள் விதிக்கப்பட்டால், ஜல்லிக்கட்டு நடக்காது" என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள நளினி வழக்கில், ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது . ஆளுநர் முடிவுக்கு காத்திருக்கிறோம். வரும் 2022 ல் ஏழு பேர் விடுதலை செய்யப்படுவார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் உரிமைக்காக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார் . தேடுதல் வேட்டை நிறுத்தப்படவில்லை தலைமறைவாக இருக்கும் இடத்தை நெருங்கி விட்டோம். விரைவில் கைது செய்யப்படுவார்" என்றார்.
தெலங்கானா, சத்தீஸ்கர் எல்லையில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை
தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள கிஸ்டாராம் வனப்பகுதியில் காவல் துறையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
அப்பகுதியில், "தேடுதல் வேட்டை தொடர்கிறது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று தெலங்கானா பத்ராத்ரி கோதகுடெம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் தத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தஞ்சாவூரில் 8வது உலகத் தமிழ் மாநாட்டின் போது கட்டிய ஓட்டலுக்கு சீல்
படக்குறிப்பு, தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரால் சீல் வைக்கப்பட்ட தனியார் ஓட்டல்
தஞ்சாவூரில் 8வது உலகத் தமிழ் மாநாட்டிற்காக கட்டப்பட்ட தனியார் நட்சத்திர விடுதி, ரூ. 12 கோடி குத்தகைய தொகையை அரசுக்கு செலுத்தவில்லை என்று மூடி முத்திரையிடப்பட்டது.
தஞ்சாவூர் மாநகரில் உள்ள ஹோட்டல் டெம்பிள் டவர் என்கிற தனியார் நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதி நிர்வாகம் ரூ. 12 கோடி ரூபாய் குத்தகை தொகையை பல ஆண்டுகளாக அரசுக்கு செலுத்தவில்லை.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் 2016ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தொடர்ந்து, இடத்தை அரசிடம் ஒப்படைக்க வருவாய்த்துறையினர் நீதிமன்றம் மூலம் 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் விடுதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அதிகாரிகள் விடுதியை மூடி, சீல் வைத்தனர். முன்னதாக, விடுதியில் 10க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 1995ம் ஆண்டு 8வது உலக தமிழ் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. அப்போது தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாக சார்பாக தனியார் விடுதிகள் கட்டுவதற்கு சலுகைகள் வழங்கப்பட்டது. இதன்படி, 07.06.1994 அன்று அரசு நிலத்தில் 30 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் செல்வராஜ் என்பவருக்கு விடுதி கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 1
ஒடிசா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியிலுள்ள தென்துலிபதர் என்ற இடத்தில் மூன்று ஐ.இ.டி குண்டுகளை எல்லை பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி குழுவினர் மீட்டுள்ளதாக ஏ.என்.ஐ முகிமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தகுந்த நேரத்தில், மாவோஸ்டுகளில் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதாக ஒடிசாவின் எல்லை பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு, 2
ஆப்கன் பெண்கள் பயணிக்க ஆண் துணை அவசியம் - தாலிபன்
ஆப்கானிஸ்தானில் நீண்ட தூரமாக பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்றபயணத்தின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது இப்போது கட்டாயம் என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.
தங்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் கிடைக்காது என்று தாலிபன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தாலிபனின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம், உரிய வழிமுறையை வெளியிட்டுள்ளது.
சீனாவில் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்த தினசரி கொரோனா எண்ணிக்கை
கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தொற்றாளர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷியான் நகரம் தற்போது சீனாவில் கோவிட் பரவலில் மையமாக உள்ளது. இங்கு 1.3 கோடி பேர் வசிக்கிறார்கள். இங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று இங்கு 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் சீனாவில் ஒருநாளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது.
2020இன் தொடக்கத்தின் பின் இதுதான் சீனாவில் ஒரே நாளில் கொரோனா உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே!
இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொகுத்து வழங்குவோர் விக்னேஷ்.அ, ஜோ மகேஸ்வரன்.