ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி
பரோலில் வெளிவந்துள்ள நளினிக்கு சில நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, வெளி நபர்களை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் அடங்கும். மேலும் அருகில் வீட்டுக்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
'RRR' பட முன்னோட்ட விழா: ராம்சரண் 'விஜய் அஜீத் போல தமிழ் பேச வராது", ச. ஆனந்தப்பிரியா
பட மூலாதாரம், @LycaProductions
பட மூலாதாரம், @LycaProductions
ராஜமெளலி
இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,
அலியாபட் ஆகியோர் நடிக்கும் 'RRR' படத்தின் முன்னோட்ட விழா சென்னை ட்ரேட்
சென்ட்டரில் இன்று மாலையில் நடைபெற்றது. வரும் ஜனவரி 7ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும்
வெளியாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில்
நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பட மூலாதாரம், @LycaProductions
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, இயக்குநர் ராஜமெளலியின் 'மாவீரன்', 'நான் ஈ' படஙகளுக்கு விசிறி என்றவர் 'RRR' படத்திற்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.
பட மூலாதாரம், @LycaProductions
அடுத்து வந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், "இந்த கதாபாத்திரத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து கொடுத்ததற்கு இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி. சிவகார்த்திகேயனின் அன்பு, பண்பு, அவரது வாழ்த்துக்கு நன்றி. ரஜினி, கமல்ஹாசனுக்கு பிறகு இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பது இந்த படத்தில்தான். இயக்குநர் பாலச்சந்தர் அதை செய்து விட்டார். அதற்கு பிறகு, இராஜமௌலிதான். திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்" என்றார்.
நடிகர் ராம்சரண், "அஜீத், விஜய் போல இல்லை என்றாலும் ஓரளவு தமிழில் நன்றாக பேசியுள்ளேன்" என்றவர், தமிழ் டப்பிங்கில் உதவிய மதன் கார்க்கிக்கும் நன்றி தெரிவித்தார். ஜூனியர் என்.டி.ஆர். இந்த படம் மூலம் தனக்கு நல்ல சகோதரன் என்பதையும் தெரிவித்தார்.
இயக்குநர் இராஜமௌலி பேசும்போது, "நாம் எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் நம் பள்ளி தலைமையாசிரியரை பார்த்தால் பயம் இருக்கும். அதுபோலதான் நான் படித்த கல்லூரியான சென்னையும். நாம் நினைக்கும் அனைத்தையும் திரையில் எடுத்து வர தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், காஸ்ட்யூம் என அனைவரும் தேவை. இவர்கள் இருந்தால்தான் நான் நினைத்தை திரையில் எடுத்துவர முடியும்," என்றார்.
மேலும், "இந்திய மண்ணில் மட்டுமே இருக்ககூடிய உணர்வு, புரட்சிதான் இந்த படம். இதை கொண்டு வர எனக்கு இரண்டு துப்பாக்கிகள் தேவை. இது போன்ற படம் செய்ய உழைப்பு, நட்பு இதெல்லாம் தேவை. அவர்கள்தான் ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆர்-ம். படத்தில் இருவரும் எதிரெதிர் துருவங்கள். இவர்கள் இருவரையும் இணைத்து படம் செய்ததில் மகிழ்ச்சி" என்று கூறினார்.
நியூயார்க்கில் புதிய கூடுதல் தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்தது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நியூயார்க் நகரில் ஐந்து வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் கொள்ளும் அனுமதியை அந்த மாகாண அரசு வழங்கியிருக்கிறது.
புதிய கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டம் நியூயார்க் நகரில் நடைமுறைக்கு வந்துள்ளது,
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டால் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நியூயார்க்கில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளரங்க உணவக பகுதிகள் மற்றும் பல பாடநெறிக்கு அப்பாற்பட்ட பள்ளி நடவடிக்கைகளை அணுக முழு தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான தடுப்பூசி ஆணையையும் நகர நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை அமெரிக்காவிலேயே முதலாவதாக நியூயார்க் மாகாண அரசு எடுத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பது ஏற்கனவே அமலில் உள்ளது.
நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோவால் இந்த நடவடிக்கை இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
ஓமிக்ரான் அச்சுறுத்தலை பிற வைரஸ் திரிபுகளை விட இது மிகவும் கொடியதாகத் தோன்றுகிறது. ஆனால், அது லேசான பாதிப்பைக் கொண்டது என்று மேயர் பில் டி ப்ளாசியோ குறிப்பிட்டார்.
நியூயார்க்கில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் கொரோனா பாதிப்புகள் சமீபத்திய வாரங்களில் அதிகமாகியிருக்கிறது.
திங்கட்கிழமை முதல்:
நியூயார்க்கில் 1,84,000 தனியார் வணிகங்களை பாதிக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோஸை தாங்கள் பெற்றுள்ளதை தொழிலாளர்கள் காட்ட வேண்டும்.
அதன்பிறகு, அவர்கள் இரண்டாவது டோஸின் ஆதாரத்தைக் காட்ட 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்
உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், காபி கடைகள், துரித உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைய 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் முழு தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
தற்போது, ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள், அந்த இடங்களுக்குள் நுழைய குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றதாக நிரூபிக்க வேண்டும். ஜனவரி 29 முதல், அவர்கள் முழு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.
அரசியை கொல்லும் முயற்சியுடன் வின்சர் கோட்டையில் 19 வயது சந்தேக நபர் - காவல்துறை விசாரணை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வின்சர் கோட்டை
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வின்சர் கோட்டையில் அம்பு, வில் போன்ற ஆயுதத்துடன் காணொளி பேசிய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த காணொளியை தி சன் நாளிதழ் கண்டறிந்துள்ளது, அதில் ஹூட் அணிந்த ஒரு நபர் முகமூடி அணிந்து கையில் குறுக்கு வில் வைத்திருந்தார்.
அந்த காணொளியில் அரசியைக் கொன்று பழி வாங்குவதே தனது எண்ணம் என்று கேமிராவை பார்த்து பேசுகிறார்.
செளத்தாம்ப்டனைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
"அந்த நபர் பேசிய காணொளி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்" என்று காவல்துறையினர் கூறினர். எனினும், காணொளியில் காணப்பட்ட நபரின் அடையாளம் குறித்து கருத்து தெரிவிக்க காவல்துறை செய்தித்தொடர்பாளர் மறுத்து விட்டார்.
பக்கிங்ஹாம் அரண்மனையும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
19 வயதுடைய சந்தேக நபர் மீது மனநல சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸுக்காக வின்சர் கோட்டையில் இருந்தார். அங்கு அவர் கிறிஸ்துமஸ் நாளில் மதிய உணவில் பங்கேற்றார்.
3 ஆண்டுகளில் மும்மடங்கான போதைப்பொருள் கடத்தல்: மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா
பட மூலாதாரம், @AmitShah
படக்குறிப்பு, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இந்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்புத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழுவின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ‘போதையில்லா இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, நரேந்திர மோதி அரசு போதைப்பொருளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது என்று கூறினார். அவர் மேலும் பேசியது:
போதைப்பொருள் பரவல் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல். அதை ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் மட்டுமே சமாளிக்க முடியும். எல்லை கடந்த குற்றமாக கருதப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க அனைத்து போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்புகளுக்ம் புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையே, தேசிய அளவில் மட்டுமின்றி, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தேவை என்று அமித் ஷா அறிவுறுத்தினார்.
இந்தியாவில் 2018 முதல் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ. 1881 கோடி மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது 2011 மற்றும் 2014க்கு இடையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது ரூ. 604 கோடி மதிப்பிலான 35 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2011 முதல் 2014ஆம் ஆண்டில் சுமார் 16 லட்சம் கிலோ போதைப்பொருள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:
1. அனைத்து மாநிலங்களும் டிஜிபிகளின் கீழ் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை (ANTF) அமைக்க வேண்டும், அவை மாநில NCORD செயலகங்களாக செயல்படும்.
2. தேசிய அளவிலான தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறையின் கீழ் மத்திய NCORD பிரிவை உருவாக்க வேண்டும்.
3. போதைப்பொருள் பயிற்சித் திட்டம் தேசிய அளவில் தயாரிக்கப்பட வேண்டும், இதன் மூலம் காவல்துறை, மத்திய ஆயுதப்படைகளின் வீரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் துறைகளைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெறலாம்.
4. இந்திய ரசாயனம் மற்றம் உரத்துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படும் இரட்டைப் பயன்பாட்டு முன்னோடி ரசாயனங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க ஒரு நிலையான-அமைச்சகங்கள் இடையிலான குழு அமைக்கப்படும். இது உள்துறை மற்றும் வருவாய் துறை பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். இதனுடன் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை, நிதித்துறையின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.
5. இரட்டைப் பயன்பாட்டு மருந்து மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு நிலையான இடைநிலைக் குழு அமைக்கப்பட வேண்டும், அதில் மருந்து நிபுணர்கள், தேசிய மருத்துவ ஆணையம், உள்துறை மற்றும் தொழில்துறை தொடர்பான குழுவினர் இருப்பார்கள்.
6. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மாநில NCORD குழு கூட்டங்களில் கடலோர காவல்படை, கடற்படை, துறைமுக ஆணையம் போன்ற அனைத்து பங்குதாரர்களும் இடம்பெற வேண்டும்.
7. அனைத்து துறைமுகங்களிலும், அரசு அல்லது தனியார் என அனைத்து துறைமுகங்களிலும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் கொள்கலன்களை ஸ்கேன் செய்வதற்கான கொள்கலன் ஸ்கேனர்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை ஏற்பாடு செய்வதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
8. தேசிய அளவில் நர்கோ-கேனைன் குளத்தை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையுடன் தேசிய பாதுகாப்புப் படை ஒருங்கிணைத்து, ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். அதன் கீழ் மாநில காவல்துறையினருக்கும் மோப்ப நாய் படை வசதி வழங்கப்பட வேண்டும்.
9. தேசிய போதைப்பொருள் கால் மையம் 'மனஸ்' தொடங்கப்பட வேண்டும்
10. மத்திய அளவில் ஒரு ஒருங்கிணைந்த NCORD இணையதளம் அமைக்கப்பட வேண்டும், இது பல்வேறு நிறுவனங்கள்/ஏஜென்சிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான பயனுள்ள வழிமுறையாக செயல்படும்.
11. சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் டார்க் நெட் மற்றும் கிரிப்டோ-கரன்சியின் அதிகரித்து வரும் பயன்பாட்டை நிறுத்துவதற்கு ஒரு பயனுள்ள அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
12. ட்ரோன்கள், செயற்கைக்கோள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் சாகுபடியை கட்டுப்படுத்த வேண்டும் .
13. போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை விரிவாக பரப்ப வேண்டும்.
14. அனைத்து பெரிய சிறைச்சாலைகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
அன்னை தெரசா வங்கிக் கணக்கை மத்திய அரசு முடக்கவில்லை: உள்துறை விளக்கம்
பட மூலாதாரம், MOC - KOLKATTA
அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் (MoC) வங்கிக் கணக்குகளை நாங்கள் முடக்கவில்லை, இந்திய ஸ்டேட் வங்கியிடம் மிஷனரிஸ் ஆப் சேரிட்டி அமைப்பே தமது கணக்குகளை முடக்குமாறு கோரிக்கை அனுப்பியுள்ளது என்று இந்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்னை தெரசாவின் நிறுவனத்தை கிறிஸ்துமஸ் நாளில் இந்திய அரசு முடக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்த நிலையில் இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிஸ் தமது பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் பாதகமான உள்ளீடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பு, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பதிவு எண் 147120001 மூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த பதிவு இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிவரை மட்டுமே செல்லுபடியாகும். பிறகு அது டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு பதிவை புதிப்பிப்பதற்கான விண்ணப்பம் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், புதுப்பித்தல் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, சில பாதகமான உள்ளீடுகள் கவனிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை உள்துறை முடக்கவில்லை. அந்த நிறுவனமே இந்திய ஸ்டேட் வங்கியிடம் தமது கணக்குகளை முடக்குமாறு தெரிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
கட்டுக்கட்டாக ரூ. 194 கோடி ரொக்கம் பதுக்கிய தொழிலதிபருக்கு நீதிமன்ற காவல்
வீட்டில் கட்டுக்கட்டாக ரூ. 194 கோடி ரொக்கப் பணத்தை பதுக்கி வைத்திருந்த கான்பூர் தொழிலதிபர் பியூஷ் ஜெயினை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.
இந்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் கான்பூரில் வாசனை திரவிய தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொத்தம் ரூ. 194.45 கோடி ரொக்கம், 23 கிலோ தங்கம், 600 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கட்டுக்கட்டாக சிக்கிய ரொக்கப் பணத்தை பல மணி நேரம் அதிகாரிகள் எண்ணி முடித்தனர். இதையடுத்து கான்பூர் நீதிமன்றத்தில் பியூஷ் ஜெயின் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவரது குடியிருப்பு வளாகத்தில் கைப்பற்றப்பட்ட பணம், ஜி.எஸ்.டி செலுத்தாமல் பொருட்களை விற்றது தொடர்பானது என்று பியூஷ் ஜெயின் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கான ஆதாரங்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் முடக்கம் - மமதா பானர்ஜி
அன்னை தெரசாவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை முடக்கியது அதிர்ச்சியளிக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கிறிஸ்துமஸ்ஸின் போது, அன்னை தெரசா மிஷ்னரிஸ் ஆப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. இதனால், அவர்களின் 22, 000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மருந்தும் உணவும் இல்லாமல் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "சட்டத்தை செயல்படுத்துவது முக்கியமானது. ஆனால், மனிதாபிமானத்தில் சமரசம் கூடாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி, நடராஜன் சுந்தர்
படக்குறிப்பு, சிறையில் இருந்து பரோலில் வெளிவரும் நளினி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைலிருக்கும் நளினி, அவரது தாயார் உடல்நிலையை கவனித்துக் கொள்ள நான்காவது முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி இன்று காலை 10 மணி அளவில் 30 நாட்கள் பரோலில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வெளியே வந்தார்.
இவர் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இருக்கும் தனது தாய் பத்மா வசித்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரது பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அடுத்த 30 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளினியின் வசிப்பிடத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நளினிக்கு நிபந்தனைகள்
பரோலில் வெளிவரும் நளினி தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெளியில் செல்லக்கூடாது, வெளியாட்களை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நளினி பரோலில் வெளி வருவது இது நான்காவது முறை.
முன்னதாக சகோதரன் திருமணம், அடுத்ததாக தந்தை மரணம், மூன்றாவதாக 2019ஆம் ஆண்டு தனது மகள் திருமண ஏற்பாட்டை கவனிப்பதற்காக நளினியை பரோலில் தமிழக அரசு விடுவித்திருந்தது.
நான்காவது முறையாக பரோலில் வந்தது எப்படி?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான நளினி, வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்.
இந்த நிலையில், தனது தாயார் பத்மாவின் உடல்நிலை முடியாமல் இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் தன்னை பரோலில் வெளியே வந்து திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் நளினிக்கு பரோல் வழங்கப்படும் என கூறியது. இதன் தொடர்ச்சியாக நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க திருத்தப்பட்ட தடை சட்டத்தை நிறைவேற்றுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி எம்.பி கோரிக்கை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க, புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சூதாட்டத் தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகு தற்கொலைகள் குறைந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த பிறகு, ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்கொலைகள் அதிகரித்து விட்டன," என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், "திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது" என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
"புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்து, தற்கொலை. கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்" என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஜிஎஸ்டியை மறைத்து ரூ. 33.99 கோடி முறைகேடு - வணிகரித்துறையின் தணிக்கையில் சிக்கிய வணிகர்கள்
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, ஜி.எஸ்.டியை மறைத்து நடைபெற்றுள்ள முறைகேட்டை தமிழ்நாடு வணிக வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சேலம் கோட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியினை மறைத்து 6 வணிகர்கள் ரூ. 33.99 கோடி முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை சேலம் கோட்டத்தில் சரக்குகள், சேவை வரி சட்டத்தின் கீழ் வணிகர்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 85 வணிகர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள், சேலத்தில் ஒரு காலணி ஏற்றுமதியாளர் உள்ளிட்ட 6 வணிகர்கள் வரியினை மறைத்து, திருப்புத் தொகை பெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 79 வணிகர்களின் கணக்குகள் வரி விதிப்பு அலுவலர்களால், தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
வேலூரில் தொடரும் நில அதிர்வுகள்: நிபுணர்கள் சொல்வது என்ன?, நடராஜன் சுந்தர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நில நடுக்கம், நில அதிர்வு இரண்டும் ஒன்றல்ல.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29, 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 25ம் தேதி மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பிபிசி தமிழிடம் கூறுகையில் "மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியுள்ளோம். பழைய வீடுகளில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேறி கவனமாக இருக்க சொல்லியுள்ளோம். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்," என்றார்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் கணபதி கூறுகையில், "தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வை ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்தக்கூடாது. தற்போது வந்த அதிர்வை நில நடுக்கத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது. இது நில நடுக்கம் இல்லை," என்கிறார்.
ஜல்லிக்கட்டு முறைகேடுகளை தடுக்கக் கோரி மதுரை ஆட்சியரிடம் வழக்கறிஞர் மனு, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வழக்கறிஞர் முத்துக்குமார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடுகள் நடப்பதாகவும் அதை தடுத்து வெளிப்படையாக போட்டியை நடத்தக் கோரியும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் இன்று அளித்துள்ள மனுவில், மதுரை அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வழக்கம். கடந்த, ஆண்டு கொரோனா அச்சத்திலும் சமூக இடைவெளி, முகக் கவசம், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காளைகள், வீரர்கள் பரிசோதனைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் டி-சார்டை மாற்றி ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரல் ஜல்லிக்கட்டு கமிட்டியால் வழங்கப்பட்ட தங்க நாணயம் போலி என தெரியவந்தது என்று அவர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு கமிட்டியால் பெறப்படும் நன்கொடை, பரிசுப் பொருட்களில் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்காமல் முறைகேடு நடைபெறுவதாகவும் முத்துக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர், அரசு ஊழியர்கள் என 2000க்கு அதிகமானோர் ஈடுபடுகின்றனர். ஆனால், இவர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை எனவும். வருகின்ற ஜனவரியில் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஓர் குழு அமைத்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார், மேலும் ஜல்லிக்கட்டு கமிட்டியால் பெறப்படும் நன்கொடைகளுக்கு ரசீது, பரிசு பொருட்களின் தகவலை வெளிப்படையாக வெளியிட ஏற்பாடு செய்யுமாறும் மனுவில் முத்துக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் 23 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், SPL
படக்குறிப்பு, டில்லியில் இந்த ஆண்டு டெங்கு அதிகரிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு 23 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக இது பதிவாகியுள்ளது.
டெல்லியில் 2021ஆம் ஆண்டு மொத்தம் 9, 545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி ஆவணத்தில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முதுநிலை நீட் கவுன்சிலிங் தாமதம் - டெல்லியில் மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவ மேல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த தாமதம் ஏற்படுவதாகக் கூறி டெல்லியில் உறைவிட மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஷாகிதி பார்கிலிருந்து உச்ச நீதிமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணியில் உறைவிட மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
சண்டீகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை
சண்டீகர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது வரை 3 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களில் வெற்றியும் 3 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் வெற்றியும் 2 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
சிரோமணி அகாலி தளம் இரு இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய மேயர் ரவி கே. ஷர்மா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "சண்டீகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றி, பஞ்சாப் மாநிலத்தில் வர உள்ள மாற்றத்தின் அடையாளம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கோவாவில் 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று
கோவாவில் முதல் ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. எட்டு வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 17ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் கோவாவில் முதலாவது ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மேட்டுப்பாளையத்தில் 30 பயணிகளுடன் கவிழ்ந்த அரசு பேருந்து, இ.மோகன், கோவை
படக்குறிப்பு, மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தும் சரக்கு லாரியும் மோதிய சம்பவத்தில், பேருந்து கவிழ்ந்தது.
மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து இன்று காலையில் சென்றது. சிறுமுகை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, தூத்துக்குடியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதியது.
இதில், பேருந்து கட்டுப்ப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 30 பேர் பயணித்த நிலையில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினரும் பொது மக்களும் அவர்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒமிக்ரான் - மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை கடிதம்
நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் புதிதாக ஒமிக்ரான் திரிபால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்படுவது அதிகமாக இருப்பது ஆகியவற்றை கட்டுப்படுத்த டிசம்பர் 21ஆம் தேதி, இந்திய சுகாதார அமைச்சகத்தால் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்ட நெறிமுறை விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு இன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 21ஆம் தேதி இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனுப்பியிருந்த கடிதத்தில் கோவிட் தொற்றாலாளர்களின் எண்ணிக்கை, பரவும் புவியியல் பரப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு, அவற்றின் பயன்பாடு, நிலைமையை சமாளிக்க போதுமான மனிதவளம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை வரையறுத்து அறிவித்தல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட அளவில் தொடர்ச்சியாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி கடைசி ஒரு வார காலத்தில் ஒரு மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 10 சதவிகிதம் அல்லது அதைவிட அதிகமாக இருந்தாலோ, அந்த மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் 40 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பி இருந்தாலோ அந்த மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
உள்ளூரில் உள்ள மக்கள்தொகை, அந்தந்த ஊரின் மக்கள்தொகை அடர்த்தி, ஒமிக்ரான் பரவல் விகிதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மேல் குறிப்பிட்டுள்ள நிலையை எட்டும் முன்னரே மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜேஷ் பூஷன் அனுப்பி இருந்த அந்த கடிதத்தில் 'கவலைக்குரிய திரிபு' என்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் திரிபு, டெல்டா திரிபைவிட மூன்று மடங்கு அதிகமாக பரவும் தன்மை உடையது என்பதை அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பழைய குடியிருப்புகளின் விவரம் சேகரிப்பு - திருவெற்றியூர் விபத்தையடுத்து, ஆ. விஜயானந்த்
சென்னை திருவெற்றியூரில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் திருவெற்றியூரில் கடந்த 1993ம் ஆண்டு கட்டப்பட்ட, பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.
இதையடுத்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அங்கு சென்று, பார்வையிட்டார்.
இது போன்ற விபத்துகள் ஏற்படாத வகையில் , பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது