இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 358ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு தொற்றாளர்கள் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் மொத்தம் 88 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 122 உட்பட 358 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 114 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை, மகராஷ்ட்ராவில் 88, டெல்லியில் 67, தெலங்கானாவில் 38, தமிழ்நாட்டில் 34, கர்நாடகத்தில் 31, குஜராத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் திரிபு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 6,650 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

