You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்துக்காக லண்டனில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய நிலையில், நடிகர் வேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 358ஆக உயர்வு

    இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு தொற்றாளர்கள் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் மொத்தம் 88 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 122 உட்பட 358 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 114 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை, மகராஷ்ட்ராவில் 88, டெல்லியில் 67, தெலங்கானாவில் 38, தமிழ்நாட்டில் 34, கர்நாடகத்தில் 31, குஜராத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் திரிபு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 6,650 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  2. ஜம்மு காஷ்மீரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை: துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது

    ஜம்மு காஷ்மீரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும், தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இன்று காலை அறிவித்துள்ளது. அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி என்ற பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது.

  3. நளினி பரோலில் விடுதலை

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி இன்று பரோலில் வெளியே வந்திருக்கிறார்.

    நோயுற்றிருக்கும் அவரது தாயின் கோரிக்கையை ஏற்று அவருக்கு தமிழ்நாடு அரசு ஒரு மாத பரோல் வழங்கியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  4. "ஒமிக்ரான் மூலம் கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சேரும் தேவை குறைவாகவே வருகிறது"

    ஒமிக்ரான் திரிபு வழியாக கொரோனா தொற்று ஏற்படுவோருக்கு முந்தைய திரிபுகளை ஒப்பிடும்போது மருத்துவமனையில் சேர்வதற்கான தேவை 50 முதல் 70 சதவீதம் குறைவாகவே ஏற்படுகிறது என்று பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பு கூறுகிறது.

    ஆனால், எண்ணிக்கையில், இந்த ஒமிக்ரான் திரிபு அதிக அளவிலான மக்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்கிறது இந்த ஆய்வு.

    அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்கிறார் பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர்.

    தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்ட பிறகு 10 வாரம் கழித்து ஒமிக்ரான் தொற்றினை தடுக்கும் ஆற்றல் குறைந்துவருகிறது என்பதையும் அந்த ஆய்வு சொல்கிறது.

    ஆனால், தீவிர நோய் ஏற்படுவதற்கு எதிராக இது பாதுகாப்பை வழங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  5. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா.பாலசுப்ரமணியன், ஜோ மகேஸ்வரன்.எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்.