வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்துக்காக லண்டனில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய நிலையில், நடிகர் வேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கேரளாவில் 37 பேருக்கு ஒமிக்ரான்

    கேரளாவில் இன்றுடன் மொத்தம் 37 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு வருகிறதா? - கடும் எச்சரிக்கை

    உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

    இலங்கையின் கையிருப்பிலுள்ள அந்நிய செலாவணி தொகை வெகுவாக குறைவடைந்து வருவதை அடுத்து, பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில், இலங்கையில் தற்போது பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, ஏனைய பொருட்களுக்கான விலை பெருமளவு அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.

  4. கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரஷ்யா

    google

    பட மூலாதாரம், Getty Images

    கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யா 98 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

    ரஷ்யாவில் சட்டவிரோதமாக கருதப்படும் கருத்தை கூகுள் நிறுவனம் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அது என்ன கருத்து என்பது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடவில்லை.

    ஆண்டு லாபத்தை பொறுத்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிக்கு ரஷ்யாவில் அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

    இந்த தீர்ப்பு குறித்து தெளிவாக ஆராய்ந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி முகமை தெரிவித்துள்ளது.

  5. கொளத்தூரில் வீடுகளை இழந்த 53 குடும்பங்கள்

    கொளத்தூர் பகுதியிலுள்ள ஜி.கே.எம் நகரில், ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்படுவதற்காக 53 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளைப் பறிகொடுத்துள்ளன. வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் ஐ.சி.எஃப் சாலையையும் கொளத்தூர் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஒரு பாலத்தைக் கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இதுதான் இந்தப் பிரச்சனையின் துவக்கம்.

    இந்தப் பாலத்தின் தென்பகுதியில் தேவைப்படும் இடத்தை ஐ.சி.எஃப் அளித்துள்ளது. வட பகுதியில் பாலத்திற்கான இடத்தை கையகப்படுத்துவதில் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. ஒமிக்ரானால் தடைப்படும் கிறிஸ்துமஸ் பயணங்கள்

    travel

    பட மூலாதாரம், Reuters

    பல்வேறு நாடுகள் ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ளும் நோக்கில் பல பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

    இதனால் பலரின் கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்பட்டுள்ளது.

    இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

    ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிதமான அறிகுறிகளே இருந்தாலும் அதிக அளவில் பரவி வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.

    பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

  7. ஹரியானாவில் தடுப்பு மருந்து செலுத்தாவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை

    ஹரியானாவில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் அங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இலங்கை கடலுக்கு சட்டவிரோதமாக வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மீனவர்கள் முற்றுகை போராட்டம், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கை மீனவர்கள்
    படக்குறிப்பு, சாலை மறியலில் ஈடுபடும் யாழ்ப்பாணம் மீனவர்கள்

    யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.இந்த போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.இந்திய இழுவைப் படகு மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் ஆரம்பமான போராட்ட பேரணி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்தது.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், கைப்பற்றப்படும் படகுகளை விடுவிக்கக்கூடாது, தமது வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என்ற கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 68 மீனவர்களுடன், 10 படகுகளை இலங்கை அதிகாரிகள் கடந்த ஒரு வார காலப் பகுதிக்குள் கைது செய்திருந்தனர்.கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.இந்திய மீனவர்களின் அத்துமீறி பிரவேசம் காரணமாக, இலங்கையின் வடப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.அதனால், தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையில், இன்று நடைபெற்ற முற்றுகை போராட்டம் காரணமாக, யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியான ஏ-9 வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, மாவட்ட செயலக வளாகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமூகமளித்துள்ளார்.இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து, தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்துவதாக, யாழ்ப்பாணம் மீனவர்களிடம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியை அடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபடும் யாழ்ப்பாணம் மீனவர்கள்
    படக்குறிப்பு, சாலை மறியலில் ஈடுபடும் யாழ்ப்பாணம் மீனவர்கள்
  9. தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்: 12 முக்கிய அம்சங்கள்

    இந்தியாவில் இன்று தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.:

    • இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • இந்த சட்டம் நுகர்வோருக்கு ஆறு உரிமைகளை வழங்குகிறது. 1. பொருட்களை தேர்வு செய்யும் முறை 2. அனைத்து வகையான அபாயகரமான பொருட்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை 3. அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை 4. நுகர்வோர் நலன்கள் தொடர்பான அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை 5. நுகர்வோர் உரிமைகள் மீறப்படும்போது அதற்கு தீர்வு பெறுவதற்கான உரிமை 6. நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை.
  10. கான்பூரில் வாசனை திரவிய தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.150 கோடி பறிமுதல்

    கான்பூரில் தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 150 கோடி ரொக்கம்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, கான்பூரில் தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 150 கோடி ரொக்கம்

    மத்திய மறைமுக மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் நடந்திய சோதனையில் கான்பூரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் கட்டுக் கட்டாக ரூ. 150 கோடி ரொக்கம் சிக்கியது. பல மணி நேரமாக பணத்தை எண்ணும் பணி நடைபெறுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன,

    கான்பூரில் உள்ள வாசனை திரவிய தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் கட்டுக் கட்டாக ரொக்கப் பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 150 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள், சுங்கவரி தலைவர் விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

    போலியான விற்பனை ரசீதுகள், கடன் அட்டைகள் குறித்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. கான்பூரில் தொழிலதிபர் வீடு, தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பணி முடிந்த பிறகே மொத்த தொகை எவ்வளவு என்பது தெரிவ வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. தனுஷ்கோடி புயலில் உயிரிழந்தவர்களுக்கு கடலில் அஞ்சலி, பிரபுராவ் ஆனந்தன்

    கடந்த 1964ம் ஆண்டு புயலில் உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
    படக்குறிப்பு, கடந்த 1964ம் ஆண்டு புயலில் உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தமிழகத்தின் தனுஷ்கோடி புயலில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு திடீரென வீசிய கடும் புயல் வீசியது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் வாழ்ந்து மீனவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் புயலில் சிக்கி உயிரிழந்தனர்.

    இன்றுடன் 57 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இறந்தவர்களை நினைவு கூரும் விதமாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் பங்கேற்று, கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து, புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட படையல்களை கடலில் விட்டனர்.

  12. நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று: வெளிநாடு படப்பிடிப்பை முடித்துத் திரும்பியவர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

    நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று

    பட மூலாதாரம், LYCA_PRODUCTION

    படக்குறிப்பு, நடிகர் வடிவேலு

    நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். படப்பிடிப்புக்காக வடிவேலு லண்டன் சென்றிருந்தார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் , அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  13. தவறு செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு - அமைச்சர் நாசர் விமர்சனம்

    நாகூரில் பேட்டியளித்த பால் வளத்துறை அமைச்சர் நாசர்
    படக்குறிப்பு, நாகூரில் பேட்டியளித்த பால் வளத்துறை அமைச்சர் நாசர்

    திமுகவை நடமாட விடமாட்டோம் என்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது அவர் நடமாட முடியாமல் ஒளிந்து, தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடந்த தொழுகையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பால் வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தலைமறைவு குறித்த கேள்விக்கு, "கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரியே இல்லை என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தால் திமுகவினரை நடமாட விடமாட்டோம் என்று ராஜேந்திர பாலாஜி சொன்னார். ஆனால் அவர் இப்போது தலைமறைவாகி உள்ளார். அவர் செய்த தவறுக்கு பரிகாரம் தேடி வருகிறார்.

    ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்ததால்தான் தலைமறைவாக ஒளிந்து வாழ்கிறார்." என்றார்.

    மேலும், "2.30 லட்சம் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வழங்கியதில் மோசடி செய்துள்ளார். ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்." என்றார்.

  14. நெல்லை பள்ளி விபத்து: ஆசிரியர்களுக்கு சம்மன்

    நெல்லை பள்ளி விபத்து குறித்து காவல்துறையின் அடுத்த கட்ட விசாரணை
    படக்குறிப்பு, நெல்லை பள்ளி விபத்து குறித்து காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணை

    நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையின் அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை நெல்லை திருநெல்வேலி உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

    விபத்து நடந்த போது பணியில் இருந்த 3 உடற் கல்வி ஆசிரியர்கள் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கழிப்பறை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொழில் நுட்ப ரீதியான விசாரணை நடந்து வருகிறது. கழிவறை சுவர் இடிந்து விழுந்த, விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பெறபட்டு வருகிறது

  15. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: ஹர்பஜன் சிங் அறிவிப்பு

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்

    இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரும் பந்து வீச்சாளாருமான ஹர்பஜன் சிங் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

    இது குறித்த தனது முடிவை, ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகள் நீண்ட கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த பயணத்திற்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிய அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகளி இருந்து விலகினார். இந்த முடிவையும் அப்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற வீரராக ஹர்பஜன் சிங் உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. பள்ளியில் பாலியல் புகார் - ஒரு ஆசிரியர் கைது, மற்றொருவர் தலைமறைவு, பிரபுராவ் ஆனந்தன்

    பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு.

    பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடந்த 7ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பாக இந்த பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் கணித ஆசிரியரான ஆல்பர்ட் வளவன்பாபு, சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் இருவரும் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு, இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் தொடுவதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழு, பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரையடுத்து, சமூக அறிவியல் ஆசிரியரான ராமராஜனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கணித ஆசிரியரான ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

  17. உ.பி., ம.பி.யில் இரவு ஊரடங்கு : பஞ்சாபில் கட்டுப்பாடு இல்லை

    உத்தர பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    கொரோனா பரவல், ஒமிக்ரான் திரிபு பரவலை தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, உத்தரபிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை என்றும் உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

    அதே நேரத்தில், பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. ஆனால், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. முதலமைச்சருக்கு அமைச்சர்கள் ஆதரவாக இல்லை - பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

    அண்ணாமலை

    "தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிடுகிறார்கள். அது ஒரு ஒப்பீடே அல்ல. தமிழ்நாட்டையும் எந்த மாநிலத்தையும் ஒப்பிடாதீர்கள். நாம் வேறு எங்கோ இருக்கிறோம்" என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

    பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

    "தமிழ்நாட்டில் முதலமைச்சரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள் செயல்படவில்லை என்பது என் முதல் குற்றச்சாட்டு. அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இல்லையெனத் தோன்றுகிறது," என்று குறிப்பிட்ட அவர்,

    குடும்ப அரசியல் குறித்து விமர்சிக்கும்போது "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் குடும்ப அரசியல் செய்து மேலே வந்தவர் என்று சொல்ல மாட்டேன். அவர் கடின உழைப்பின் மூலம் மேலே வந்தவர்," என்று அவர் கூறினார்.

    திராவிடத்தை நிராகரிக்கவில்லை. ஆனால், திராவிடம் பிளஸ் வேண்டும் என்று கேட்கிறேன் என்றும் அவர் கூறினார்.

  19. திருப்பதியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசனம்

    இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

    இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று காலை சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காணிக்கை அளித்து, தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. வங்கதேசத்தில் மூன்றடுக்கு படகில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு

    வங்கதேசத்தில் 3 அடுக்கு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வங்கதேசத்தில் 3 அடுக்கு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

    வங்கதேசத்தில் இன்று காலை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் இந்த தீ விபத்து இன்று காலை நடைபெற்றுள்ளது. ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகில் தீ விபத்து ஏற்பட்டது.

    படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பியுள்ளனர். அதே நேரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைமை அதிகாரி மொய்னுல் கூறுகையில், "தற்போது வரை 32 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்." என்று தெரிவித்தார்.