ஒமிக்ரான்-கொரோனா: தயார்நிலையில் டெல்லி மருத்துவமனைகள் - முதல்வர் கேஜ்ரிவால்
கோவிட் இரண்டாவது அலையின் போது, டெல்லியில் தினமும் அதிகபட்சமாக 26-27 ஆயிரம் பேர் வரை பரிசோதனைக்காக பதிவு செய்யப்பட்டனர். இப்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை ஆராய ஆறு பேர் குழு: தமிழக முதல்வர்
நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சர்ச்சைக்குள்ளாகும் ஆன்லைன் கல்வி நிறுவன செயல்பாடுகள் - கொதிக்கும் ஆர்வலர்கள்
பட மூலாதாரம், Getty Images
ஆன்லைனில் கல்வி வழங்க தனியார் நிறுவனங்கள் வரம்பின்றி வசூலிக்கும் பெரும் கட்டணம் தொடர்பான விவகாரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எழுப்பிய பிறகு சர்ச்சையானது.
மக்களவையில் சமீபத்தில் பேசிய கார்த்தி, "ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களை நிர்பந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது யார்? இவர்கள் நடத்தும் பாட திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது எப்படி? என்னவிதமான வரையறை உள்ளது.? இவை எதுவும் தெரியவில்லை. ஒருமுறை இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து விட்டாலே, மாதந்தோறும் தானாக பணம் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் நிதி விவரங்கள் குறித்து கண்காணிப்பது அவசியம்." என்று வலியுறுத்தியிருந்தார். அவர் இந்த விவகாரத்தை எழுப்ப என்ன காரணம்?
ஒமிக்ரான் பரவலை தடுக்க தயார் நிலையில் டெல்லி அரசு: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
பட மூலாதாரம், Getty Images
ஒமிக்ரான் பரவலை தடுக்க தயார்நிலையில் தமது அரசுத்துறைகளை வைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
ஓமிக்ரான் தொடர்பாக அனைத்து துறைகளுடன் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க தற்போது தேவையான மருந்துகள் உள்ளன. தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 3 லட்சம் பரிசோதனைகள் வரை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.
கோவிட் இரண்டாவது அலையின் போது, டெல்லியில் தினமும் அதிகபட்சமாக 26-27 ஆயிரம் பேர் வரை பரிசோதனைக்காக பதிவு செய்யப்பட்டனர். இப்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
நெல்லை பள்ளி விபத்து குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
படக்குறிப்பு, நெல்லை பள்ளி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
திருநெல்வேலியில் கடந்த 17ஆம் தேதி அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்த நாளிதழ் செய்தி அடிப்படையில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துகிறது.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, வேலூரில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
பட மூலாதாரம், National center for Seismology
படக்குறிப்பு, வேலூரில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
வேலூர் அருகே நில அதிர்வு இன்று நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாகியுள்ளது.
வேலூரிலிருந்து 5 0 கி.மீ தொலைவில் வட மேற்கு உள்ள பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இது குறித்து தேசிய நில நடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "இன்று பிற்பகல் 3.14 மணியளவில் வேலூரில் இருந்து மேற்கு - வடமேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வு வேலூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் உணரப்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு நேரடியாக திட்டங்கள் - இந்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் சங்க தலைவர்கள் வலியுறுத்தல்
பட மூலாதாரம், K P Ramalingam
படக்குறிப்பு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய விவசாயிகள் சங்க தலைவர்கள்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவரும் முன்னாள் எம்.பியுமான கே.பி. ராமலிங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து ஆகியோர் இன்று சந்தித்தினர்.
அப்போது, அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நீர்மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வேளான்மை துறைகளில் உள்ள கோரிக்கைகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இது குறித்து கே.பி.ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், "சொட்டு நீர் பாசன திட்டங்களை விரிவாக கொண்டு செல்வது. குறிப்பாக, மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். இதில், உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும்," என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இலங்கையில் ராட்சத பட்டத்துடன் 120 அடி உயரத்தில் மிதந்த இளைஞர் - என்ன ஆனது?, ரஞ்சன் அருண் குமார், இலங்கை
ராட்சத காற்றாடி (பட்டம்) ஒன்றை பறக்க விட்டபோது, பட்டம் விடுவதில் அனுபவமற்ற இளைஞர் ஒருவர், அதன் கயிற்றைப் பிடித்தவாறு ஆகாயத்தில் சுமார் 120 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து, அதிருஷ்டவசமாக தப்பிய சம்பவமொன்று இலங்கையின் பருத்தித்துறை - குரும்பசிட்டி பகுதியல் நடந்துள்ளது.
காணொளிக் குறிப்பு, இலங்கையில், ராட்சத காற்றாடியின் கயிற்றை பிடித்தவாறு 120 அடி உயரத்தில் இளைஞர் பறந்துள்ளார்.
குரங்குகள் 200 நாய்க் குட்டிகளை கொன்றனவா? உண்மை என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வாவூல் கிராமத்தில் குரங்குகளால் கொண்டு செல்லப்பட்ட நாய்க் குட்டிகள், வீடுகளின் உச்சியிலிருந்தும், மரங்களின் உச்சியிலிருந்தும் விழுவதாக சர்ச்சை எழுந்தது.
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடாவிலுள்ள மஜல்கோன் தாலுகாவின் லாவூல் கிராமம், கடந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள செய்திகளில் இடம் பெற்றது. இந்த கிராமத்தில் குரங்குகளுக்கும் நாய்களுக்கும் இடையே நடந்த சண்டை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஊடகங்கள் பல்வேறு விதமாக செய்திகள் வெளியிடுகின்றன. குரங்குகள் 200 நாய்க்குட்டிகளை கொன்றதாக சிலர் கூறினர். ஆனால், அந்த கிராமத்துக்கு, பிபிசி மராத்தி சார்பில் உண்மை நிலவரத்தை அறிய சென்றபோது, அங்கு வேறு விதமான கதையை கண்டறிந்தோம்.
முடிந்த போன காவிரி பிரச்னையை துவக்கும் காங்கிரஸ் - விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், P.R. PANDIAN
படக்குறிப்பு, பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர் - தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தமிழக நலனுக்கு எதிராக மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காவிரி ஆணையத்தை மிரட்டும் உள்நோக்கத்தோடு, அரசியல் லாப நோக்கத்தோடு முடிந்துபோன காவிரி பிரச்னையை, காங்கிரஸ் கட்சி மீண்டும் துவக்குவது, தமிழக நலனுக்கு எதிரானது. இது தமிழக விவசாயிகளை மீண்டும் போராட்டத்திற்கு தள்ளுவதாக அமைகிறது.
இதனை கண்டித்தும்,ராசிமணலில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை துவங்கவும் வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி பூம்புகாரில் துவங்கி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, மேட்டூர் பகுதிகள் வழியாக பேரணி நடத்தப்படும். ஜனவரி 18ஆம் தேதி ராசிமணல் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
காவிரி மட்டுமன்றி முல்லைப் பெரியாறிலும் அரசியல் உள்நோக்கத்தோடு விஷம பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வரும் 28ஆம் தேதி மதுரையில் அனைத்து விவசாயிகள்,சமூக சேவை அமைப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.
சைக்கிளில் அலுவலகம் சென்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
பட மூலாதாரம், @CollectorTVR
படக்குறிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்விற்காக சைக்கிளில் அலுவலகம் சென்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வருகை தந்தார்.
"சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசினை கட்டுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, இன்றைய தினம் முகாம் அலுவலகத்திலிருந்து சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிக்கு வந்ததாக." காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் செல்லும் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், காயத்ரி கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவனை தூக்கிச் சென்ற இருவர் - சிசிடிவி காட்சி வெளியானது, நடராஜன் சுந்தர்
கட்டுரை தகவல்
எழுதியவர், நடராஜன் சுந்தர்
பட மூலாதாரம், TN Police
படக்குறிப்பு, விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இறந்து கிடந்த சிறுவனைத் தூக்கிச் செல்லும் இருவரின் சிசிடிவி காட்சி.
விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் பட்டினியால் இறந்ததாக கூறப்படும் 5 வயது சிறுவனை இருவர் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறுவனை தோளில் சுமந்தபடி இருவர் நடந்து செல்கிறார்கள். தள்ளு வண்டியில் வைத்துவிட்டு, மீண்டும் பேருந்து நிலையத்திற்கு சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேலத்தெருவில் சலவை தொழிலாளியின் தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனின் முன்பு கிடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பட்டினியாலும் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தற்போது வரை பெற்றோர், உறவினர்கள் என யாரும் வரவில்லை. இறந்த சிறுவனின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சிசிடிவி காட்சி வெளியான பிறகு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் கேட்டதற்கு, "இதை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாராவது செய்தது போல தெரிகிறது. அவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். .
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் இன்று குண்டு வெடித்தது.
இது குறித்து லூதியான காவல்துறை ஆணையர் தெரிவித்திருப்பதாவது: "லூதியானா நீதிமன்றத்தின் 2வது தளத்தில் ஆவண அறைக்கு அருகே குண்டு வெடித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தடய அறிவியல் பிரிவினர் சண்டிகரில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர் யாரும் பீதியடைய வேண்டாம்." என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேச விரோத சக்திகள் இதை செய்துள்ளனர். அரசு கவனமாக உள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு செல்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
5ஜி கோபுரத்துக்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
5ஜி அலைவரிசை கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து நடிகையும் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளருமான ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவில் 5 ஜி வயர்லஸ் நெர்வொர்க் சேவைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் ஜூஹி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
படக்குறிப்பு, தூத்துக்குடியில் 21 கிலோ ஹெராயினுடன் கைதான 6 பேர்.
தூத்துக்குடியில் 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் பகுதியில் செவ்வாய்கிழமை தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அன்சார்அலி, மாரிமுத்து, இம்ரான்கான் ஆகியோரை 162 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
மூவரிடமும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தருவைகுளம் பகுதியில், அந்தோணிமுத்து, பிரேம்சிங், கசாலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 21 கோடி என்று கூறப்படுகிறது .
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்தோணிமுத்து, தனது நண்பர்களான கசாலி, பிரேம்சிங் ஆகியோருடன் மினிகாய் தீவுபகுதியில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கடலில் மிதந்து வந்த பார்சலை அந்தோணிமுத்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு பிறகு ஹெராயின் போதைப் பொருள் என்பது தெரியவந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பை அறிந்து, விரோதமாக விற்க முயன்றுள்ளனர். இவர்களோடு தொடர்புடைய முருகன் என்பவரை தேடி வருகிறோம்" என்றார்.
நளினிக்கு சிறைவிடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க
முடிவுசெய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்
நீதிமன்றத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்
தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டருப்பதால் தனது மகள் நளினிக்கு 30
நாட்கள் சிறை விடுப்பு வழங்க
வேண்டுமென தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு
வந்தபோது, இந்த விவகாரம் அரசின் பரிசீலனையில்
இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசுத் தரப்பு பதிலளிக்க அவகாசம் அளித்து
நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு 30 நாள் சிறை விடுப்பு வழங்க முடிவுசெய்திருப்பதாக அரசின் வழக்கறிஞர்
ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு
முடித்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் எண்ணிக்கை 34 - மருத்துவத்துறை அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 65, டெல்லியில் 64 ஆக உள்ளது.
இந்நிலையில், அதிக எண்ணிக்கை உள்ள மாநில வரிசையில் 3வது இடத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்துகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகராஷ்ராவில் 65 பேருக்கும் தில்லியில் 64 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், சண்டிகர், உத்ரகாண்ட், லடாக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஆந்திரா, ஒடிசா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட 236 பேர்களில் தற்போது வரை 104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வருகிறவர்கள் ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கிரார்கள் - டிடிவி தினகரன்
படக்குறிப்பு, வேளாங்கண்ணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் ஆளுங்கட்சியானால், அவர்கள் ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கிறார்கள் என்று கூறினார் டி.டி.வி தினகரன்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று இரவு நடைபெற்றது .விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து, விவேக்கிடம் (சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன்) விசாரணை நடத்தப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு, "அவரிடம் தகவல்கள் ஏதாவது இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதை வித்தியாசமாக பார்க்க தேவையில்லை" என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் தாண்டி குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால், தாங்கள் கூறியதை மறந்துவிட்டு ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர்.
இதைத்தான் எதிர்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும்." என்றார்.
மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பட மூலாதாரம், TN -DIPR
படக்குறிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் முயற்சியாக, "மீண்டும் மஞ்சப்பை" விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வனத்துறையினர், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு மஞ்சள் பைகளை முதலமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.