திருந்தி வந்தால் ஏற்பதே நல்ல தலைமை - ஓபிஎஸ் பேச்சால் மீண்டும் சர்ச்சை

சசிகலாவையும் சேர்த்துக் கொண்டு பழைய அ.தி.மு.கவாக வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியுள்ள நிலையில், ஓ.பி.எஸ்ஸின் பேச்சு அதற்கு வலுவூட்டுவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ராய் புயலால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலி

    பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த ராய் புயலால் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. சீன தூதுவர் பயணத்திற்கும் தமிழக மீனவர்கள் கைதிற்கும் தொடர்பில்லை - டக்ளஸ் தேவானந்தா

    தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அமைச்சர் விளக்கம்

    பட மூலாதாரம், SRI LANKA NAVY

    படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அமைச்சர் விளக்கம்

    இலங்கை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான பயணத்தை சீன தூதுவர் குய் சென் ஹாங் கடந்த 17ம் தேதி நிறைவு செய்தார்.

    கடந்த 18ம் தேதி நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தமிழக மீனவர்கள் 43 பேரும் தொடர்ந்து 19ம் தேதி, மன்னார் பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், சீன தூதுவரின் வடக்கு விஜயத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

    சீன தூதுவரின் வடக்கு விஜயத்தின் பின்னரே, இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், "அவரது வடக்கு விஜயத்திற்கும், இந்திய மீனவர்களின் கைதுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது" என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

  4. கொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்?

    இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ்.

    இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை பிபிசி தமிழ் மேற்கொண்ட பயணத்தின்போது களத்தில் உள்ள நிலவரத்தை இங்கே பதிவு செய்கிறோம்.

    தலைநகர் டெல்லியில் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் என்பது, பொது இடங்களில் முக கவசம் அணிவதை தீவிரமாக பின்பற்றும் முயற்சியாக உள்ளூர் நிர்வாகம் கருதுகிறது. ஆனால், முக்கிய சந்திப்புகள் நீங்கலாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகள், உள்ளூர் கடைகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.

  5. இறையன்பர்களுக்கு தடையில்லாத ஆட்சி- அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி
    படக்குறிப்பு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி

    மாயமான மரகத லிங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேட்டி.

    நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உள்ளிட்ட கோயில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறுகையில், "ஒன்றிய அரசின் கொரோனா விதிமுறைகளையே கோயில்களில் தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலை வந்த பின்பு ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து ஆலயங்களின் திருவிழாக்களும் நடத்தப்படும். இறையன்பர்கள் விரும்புகின்ற,இறைவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அனைத்து நிகழ்வுகளும் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறையன்பர்களுக்கு தடையில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது" என்றார்.

    மேலும், கடந்த ஆட்சி போல அரசியல் நெருக்கடிகள் இல்லாத இந்த ஆட்சியில், திருக்குவளை தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில் காணாமல் போன மரகத லிங்கம் அறநிலையத்துறையின் சிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களையில் நிறைவேற்றம்

    தேர்தல் சீர்திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, கடும் அமளிக்கிடையே மக்களவையில் நிறைவேறியது.

    முன்னதாக மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடாத அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைககள் பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டன. பின்னர், கூடிய அவையில், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நாளை வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது.

    இந்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது என அரசு கூறுகிறது.

    மேலும், ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு பணிகள் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதா நிறைவேறினால், இனி தேர்தல் வாக்குப்பதிவை நடத்த எந்த கட்டடத்தையும் தனது கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக்கொள்ள மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.

    18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

  7. மீனவர்கள் கைது - ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம்

    மீனவர்கள் போராட்டம்
    fishermen protest

    இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

    ஆர்பாட்டத்தின் இறுதியில் மீனவர்கள அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யகோரி , வரும் புதன்கிழமை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தது என்றும் முடிவுசெய்துள்ளனர்.

    ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    தனுஷ்கோடி - நெடுந்தீவு இடையே, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அத்து மீறி மீன் பிடித்ததாக மீனவர்கள் 43 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள தமிழக யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். இதேபோல், மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சென்ற 12மீனவர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் அறிவி்த்துள்ளனர். இப்போராட்டத்தினால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்கரையில், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. நேரடியாக 50ஆயிரம்மீனவர்களும் மறைமுகமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டமீன்பிடிசார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

  8. ஒரு மீனின் விலை 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், மணிவண்ணன், பிபிசி தமிழுக்காக

    நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய ஜீவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வலையில் கத்தாழை மீன் ஒன்று சிக்கியது.

    இது மருத்துவ குணம் வாய்ந்தது; விலை மதிப்பு மிக்கது. கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன் குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் காலையில் இருந்து கத்தாழை மீனை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்த வகையான கற்றாழை மீன்கள் கிடைக்கும். மீனவர்கள் வளையில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலைமதிக்க கூடியதுமான இந்தவகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த வகை கத்தாழை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டி மூலம் மீன்கள் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலி எழுப்பும் தன்மை கொண்டதாகும். மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம். எனவே இந்த வகையான மீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவை வலையில் சிக்குவது, பேரதிஷ்டம் என தெரிவிக்கின்றனர்.

    மீன்

    பட மூலாதாரம், பிபிசி

  9. சென்னை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது, ஆ. விஜயானந்த்

    பாலியல் தொல்லை

    பட மூலாதாரம், Getty Images

    சென்னையில் பிளஸ் 1 மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னையை அடுத்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். மாணவி எழுதி வைத்திருந்த இரண்டு கடிதங்களையும் போலீஸார் கண்டெடுத்தனர்.

    அந்த கடிதத்தில், `பள்ளிக்கூடம் பாதுகாப்பான இடம் கிடையாது. உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானது கல்லறையும் தாயின் கருவறையும்தான். பாலியல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துங்கள்,' என மாணவி குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், `பெண்களை மதிப்பதை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்.இது மோசமான சமூகம், கடவுள் ஏன் இப்படி படைத்திருக்கிறார். என்னைப் பார்த்தாலே வெறுப்பாகிறது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. என்னைத்தான் தப்பா பார்க்கறாங்க. யாரையும் நம்பாதீங்க. உன்னை நான் சும்மா விட மாட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது மரணம் தொடர்பாக மாணவி படித்த பள்ளி, முன்பு படித்த பள்ளி ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  10. கிறிஸ்துமஸ் பயணங்கள் ஒமிக்ரான் திரிபு பாதிப்பை அதிகரிக்கும் - அமெரிக்க தொற்று நோய் தடுப்பு நிபுணர் எச்சரிக்கை

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்வது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக் கூட ஒமிக்ரான் திரிபு பரவும் வாய்ப்பை அதிகரிக்கும் என அமெரிக்காவின் முக்கிய நோய்த்தொற்றியல் நிபுணர் ஆன்டனி ஃபெளட்சி கூறியுள்ளார்.

    "ஒமிக்ரான் குறித்து எந்தவித சந்தேகமும் இல்லை, அந்தத் திரிபுக்கு அதீத பரவும் திறன்கள் இருக்கின்றன" என டாக்டர் ஆன்டனி ஃபெளட்சி என்.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

    அமெரிக்க அரசாங்கத்துக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் டாக்டர் ஆன்டனி, ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்தார். அவர் வேறு என்ன எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    காணொளிக் குறிப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகை பயணங்கள் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்கும் - ஆன்டனி ஃபெளட்சி
  11. வேலூர் பிரபல நகை கடை சுவரை துளையிட்டு கொள்ளையடித்த நபர் கைது - நகைகள் மீட்பு எப்போது?

    வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் மாநகரில் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவில் பின்பக்க சுவற்றை துளையிட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

    5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் டிசம்பர் 15ஆம் தேதி சுமார் 16 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மாலை வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், வேலூர் அணைக்கட்டை அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை விசாரித்தோம். அவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் நகைகள் மீட்கப்படும். இந்த குற்றச்செயலில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

  12. திருந்தி வந்தால் ஏற்பதே நல்ல தலைமை - சசிகலாவை குறித்து ஓ.பி.எஸ் பேச்சு

    ஓ. பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அதிமுக

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அதிமுக

    "தவறு செய்து வந்தவர்கள் திருந்தி வந்தால், அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகாக இருக்கும்'' என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

    சென்னையில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், சசிகலாவை குறிக்கும் வகையில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். சென்னை ஹாரிங்டனில் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய ஓ.பி.எஸ், இயேசுவின் வரிகளை மேற்கோள்காட்டி குட்டிக் கதை ஒன்றையும் சொன்னார். தொடர்ந்து பேசுகையில், ``இயேசு சொல்கிறார், நான் நல்லவர்களைக் காப்பதற்காக புவிக்கு வரவில்லை. பாவத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே வந்ததாகத் தெரிவித்தார். நல்லவர்கள் என்றும் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தவறு செய்து வந்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகாக இருக்கும்,'' என்றார்.

    மேலும், `சசிகலாவையும் சேர்த்துக் கொண்டு பழைய அ.தி.மு.கவாக வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,' என பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  13. ஐஸ்வர்யா ராய் ஆஜர் - அமலாக்கத்துறை அலுவலகத்தில்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் இன்று ஆஜரானார்.

    பனாமா பேப்பர் ஆவணங்கள் வெளியான விவகாரத்தையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999ன் கீழ் வெளி நாட்டில் சொத்து பதுக்கல் குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று வர சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. வேறு தேதியில் வர அனுமதி கேட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், தில்லி ஜாம்நகர் ஹவுஸ் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜரானார்.

    அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட தனி நபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் 500 பேர் வரி ஏய்ப்பு மற்றும் வெளி நாடுகளில் சட்டவிரோத முதலீடுகள் செய்துள்ளதாக 2016ஆம் ஆண்டு பனாமா பேப்பர் ஆவணங்களாக ஊடகங்களில் வெளியாகின. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில், "இந்திய சட்டப்படியே வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினேன். இதில் குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை," என்று அமிதாப் பச்சன் அப்போது மறுத்திருந்தார்.

  14. தேர்தல் சீர்திருத்த மசோதா கடும் அமளிக்கிடையே மக்களவையில் நிறைவேறியது

    தேர்தல் ஆணையம் இந்தியா

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, கடும் அமளிக்கிடையே நிறைவேறியது.

    இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினார்.

    இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடாத அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதாவை அவையில் அறிமுகம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைககள் பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பின்னர் பிற்பகலில் கூடிய அவையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 21ம் தேதி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஏதுவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது.

    இந்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது என அரசு கூறுகிறது.

    மேலும், ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு பணிகள் பள்ளி, கல்லூரி கட்டடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதா நிறைவேறினால், இனி தேர்தல் வாக்குப்பதிவை நடத்த எந்த கட்டடத்தையும் தனது கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக எடுத்துக்கொள்ள மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.

    18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

  15. தங்கமணி தொடர்பான இடங்களில் மீண்டும் சோதனை, ஏ.எம். சுதாகர், சேலம்

    பி. தங்கமணி

    பட மூலாதாரம், @PThangamanioffl

    படக்குறிப்பு, பி. தங்கமணி (கோப்புப்படம்)

    தமிழக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 15ம் தேதி முன்னாள் அமைச்சர், அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது மகன், மருமகன், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு & லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர், நண்பர்கள் வீடு என லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன்படி, நாமக்கல் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் வீடு, முட்டை நிறுவன அதிபர் மோகன் வீடு, மோகனூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கொல்லிமலையில் பிஎஸ்கே தங்கும் விடுதி, பரமத்தி வேலூர் பொத்தனூர் சண்முகம் வீடு, எருமப்பட்டி அருகே சரண்யா ஸ்பின்னிங் மில் உரிமையாளர் அசோக்குமார் வீடு, அலுவலகம் என நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    அதிமுக தங்கமணி
    படக்குறிப்பு, பி. தங்கமணி தொடர்புடைய இடங்களில் ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சோதனை நடத்துவதற்காக அந்த அதிகாரிகளின் வாகனம்.
  16. திருச்சியில் இரு பள்ளிகளில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று, ஜி. மணிவண்ணன், திருச்சி

    திருச்சி கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    திருச்சியில் தனியார் பள்ளியிலும் அரசு பள்ளியிலும் படித்து வரும் ஒரு மாணவி உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுழற்சி முறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில், சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் பதினோராம் வகுப்பு மாணவர். மற்றொருவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்.

    இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், திருச்சி சீராத்தோப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக அவருக்கு காய்ச்சல் இருந்தாக கூறப்படுகிறது.

    மருத்துவத்துறையினர் இந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த உள்ளனர். பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானதையடுத்து, அந்த வகுப்பறை மூடப்பட்டுள்ளது.

  17. மதுராவில் கிருஷ்ணருக்கு பிரமாண்ட கோயில் - ஹேமமாலினி எம்.பி

    "மதுரா கிருஷ்ணரின் பிறந்த இடம். மதுராவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில், இங்கு கிருஷ்ணருக்கு என்று ஒரு பிரமாண்ட கோயில் வேண்டும் என்று நான் கூறுவேன். ஏற்கெனவே ஒரு கோயில் இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோதி எப்படி அழகுபடுத்தினாரோ, அப்படி இதையும் அழகுபடுத்தலாம்" என பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகை ஹேமமாலினி கூறியதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. கர்நாடகாவில் ஐந்து பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று

    டிசம்பர் 19ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா திரிபின் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    அந்த ஐந்து பேரும் தார்வாட், பத்ராவதி, உடுப்பி, மங்களூரு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கடந்த சில மாதங்களாக அதிக தொற்று இல்லாமல் இருந்த நிலை மாறி, தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. சூப்பர் ராய் புயல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - 208 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

    புயல் வெள்ளம்

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, ஃபிலிப்பைன்ஸை தாக்கிய சூப்பர் ராய் புயலால் ஏற்பட்ட சேதம் மிகவும் மோசமாக இருப்பதாக மீட்புப் படையினர் கூறுகின்றனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த வியாழக்கிழமை தாக்கிய சூப்பர் ராய் புயலால் சுமார் 208 பேர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் கூறியதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

    மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சூப்பர் ராய் புயலால் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

    239 பேர் காயமடைந்திருப்பதாகவும், 52 பேர் காணவில்லை என உள்ளூர் காவல்துறையினர் கூறுகின்றனர்.

    புயலால் ஏற்பட்ட சேதம் மிகவும் மோசமாக இருப்பதாக மீட்புப் படையினர் விவரித்தனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், புயலால் ஏற்பட்ட சேதங்களை சரியாக மதிப்பிட்டுக் கூற முடியவில்லை. அதே போல குடிநீரு குறைவாகவே இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

  20. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்