பட்டுக்கோட்டையை அடுத்தமல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (32). இவரது 6 மாத பெண் குழந்தை நேற்று முன் தினம்
வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில்
சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார்.
பின்னர் குடும்பத்தினர் கலந்துபேசி
இறந்தகுழந்தையை மல்லிப்பட்டினத்தில்அடக்கம் செய்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்
தங்கமுத்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் சந்தேக
மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், குழந்தையின் பாட்டியே
பேத்தியை கொன்றது தெரியவந்துள்ளது.
நசுருதீனின் சின்னம்மா ஷர்மிளாபேகம்
(48)
இவரது கணவர் அசாருதீன் (50). இவர் வெளிநாட்டில் வேலை
பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல்
இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் குறிசொல்லும் முகமதுசலீம் என்பவரிடம்ஷர்மிளா பேகம் சில நாட்களுக்கு முன்பு குறிபார்த்துள்ளார்.
கணவரின் உடல்நலம் குணமடைய
உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று குறிபார்ப்பவர்சொன்னதாக தெரிகிறது.
இதனால் ஷர்மிளாபேகம் தமது
வீட்டுக்கு அருகில் உள்ள அக்கா மகன் நசுருதீனின் குழந்தையை நள்ளிரவில்
தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் மீன்தொட்டியில் அமுக்கி பலி கொடுத்ததாக
விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்துபட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன் முன்னிலையில் குழந்தையின்
சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்துசேதுபாவாசத்திரம் போலீசார், பாட்டி ஷர்மிளாபேகம், அவரது கணவர் அசாருதீன், குறிசொல்லும் முகமதுசலீம் ஆகியோர் மீது கொலை
வழக்குப் பதிவு செய்துதீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரிக்கும்போது
குழந்தையின்பாட்டி ஷர்மிளாபேகம் குற்றத்தை
ஒப்புகொள்ளவில்லை எனவும் இறுதி விசாரணையில்குற்றத்தை ஒப்புகொண்டார் எனவும்
காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
குழந்தையின் தாய் சாலிகா கூறுகையில்
குடும்பத்தில் அனைவரும் இரவு சாப்பிட்டபிறகு கடைசியில் தான் சாப்பிட்டதாகவும்
தூக்கத்தின் இடையில் அதிகாலை விழித்துபோது குழந்தையை காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.