இந்தியாவில் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால், இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் மொத்தம் 101 பேருக்கு கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. நெல்லை பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் உட்பட மூவர் கைது

    நெல்லை டவுண் சாப்டர் பள்ளி கட்டடம் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மாணவர்களின் உடல்கள்உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது. மூன்றுபேரின் உடலுக்கும் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர்ராஜகண்ணப்பன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரண உதவியையும் வழங்கினர்.

    இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், கட்டிட ஒப்பந்தகாரர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்புசுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன் , சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

    மேலும் இந்த விபத்தில் சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக் அபுபக்கர் சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சமும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சமும் உதவித் தொகையாக அறிவித்தார்.

    இந்த உதவித்தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகசட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர்ராஜகண்ணப்பன் மற்றும் ஆட்சியர் விஷ்ணு, ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

    இதனிடையே இறந்த மாணவர்களின் உறவினர்கள்உடலை வாங்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.

    பின்னர் சபாநாயகர் , அமைச்சர் , ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மூன்று மாணவர்களின்உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களிடம் அரசின் நிவாரண உதவியையும்வழங்கினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம்குறித்து விசாரித்ததுடன் பெற்றோர்களிடம் ஆறுதல்கூறினர்.

    மேலும் விபத்து குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம்பேசுகையில், “பள்ளிதாளாளர் சகாய செல்வராஜ், பள்ளிதலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றம் கட்டிட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார்.

    மேலும் கட்டடங்களின் தரம் குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து இன்றுமுதல் மறுஉத்தரவுவரும் வரைபள்ளியை மூடபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  3. பிரேசிலின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி

    2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர்.

    பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு.

    இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

    ஜனவரி மற்றும் நவம்பர் மாத இடைவெளியில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களில் உலகின் மிகப்பெரிய நீர்நிலை பகுதியின் 30 சதவீதம் அழிந்துவிட்டது.

  4. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியம்

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தனர்.

    இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன் சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாகவும், உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய்வழக்கையும் பதிவு செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

    தலைமை காவலர் ரேவதியை தொடர்ந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளரும் தந்தை மகன் இருவரையும் துன்புறுத்தியதாக சாட்சியம் அளித்துள்ளது வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் 5 காவலர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்போது குலசேகரபட்டிணம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார்.

    21ஆம் தேதியன்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், மற்ற 3பேரின் வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளதுஇந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் , அரசு மருத்துவர்கள், செவிலியர், உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

  5. ஐந்து வாரங்களுக்குள் 50% சரிந்த லிரா மதிப்பு

    ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக துருக்கி நாட்டின் கரன்சியான லிரா, 15.50 லிராவைக் கடந்து சரிந்து கொண்டிருக்கிறது.

    கடந்த ஐந்து வாரங்களுக்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான, லிரா கரன்சியின் மதிப்பு சுமார் 50 சதவீதம் சரிந்திருக்கிறது.

    வளர்ந்து வரும் நாடுகளின் கரன்சிகளிலேயே அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு படுமோசமாக சரிந்த கரன்சியாகவும் இருக்கிறது துருக்கியின் லிரா.

    எனவே, இதை லிரா நெருக்கடி என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

    குறைந்த வட்டிக்கு எளிதாக பணம் கிடைப்பதால், துருக்கியில் கடந்த மூன்றாம் காலாண்டில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், அதை விட சுமார் 3 மடங்கு அதிகமாக இருக்கிறது பணவீக்கம் (21.3%).

    அதாவது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட, பணவீக்கத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம். எனவே மக்களால் அடிப்படைத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திணறுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  6. சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா

    ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது.

    சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் நட்பு கொள்வது, தகவல்களை சேகரிக்க ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளது மெடா.

    பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தனிநபர்களை இலக்குவைத்து இந்த நிறுவனங்கள் தாக்குதல் நடத்தியதாக மெடா குற்றம் சாட்டியுள்ளது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    செய்தியாளர்களிடம் இன்று பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால், இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களில் மொத்தம் 101 பேருக்கு கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. நெல்லை பள்ளியில் கழிவறை இடிந்து மூன்று மாணவர்கள் பலி

    நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. ஜப்பானில் தீ விபத்து: 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    japan

    பட மூலாதாரம், Reuters

    ஜப்பானின் ஒசாகா நகரில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த தீ விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்றா எனபோலீசார்விசாரித்து வருவதாகத்தேசிய தொலைக்காட்சியான என்ஹெச்கே தெரிவித்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்டவுடன் அவசர சேவைக்கு உடனடியாக தகவல் சொல்லப்பட்டது.

    தீப்பிடித்த இடம் கரும்புகையால் சூழ்ந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்ததாக என்ஹெச்கே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    பெண் ஒருவர் உதவி கோரி கூக்குரல் இட்டதாக சம்பவத்தை பார்த்த மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.

    தீயணைப்பு வீரர்களால்கட்டடத்தில் இருந்தவர்கள் ஏணியை கொண்டு மீட்கப்பட்டனர்.

    தீ விபத்து ஏற்பட்டு அரை மணி நேரத்தில் அணைக்கப்பட்டாலும் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்குத் தீப்பற்றி எரிந்தது.

  10. நெல்லை பள்ளி 3 மாணவர்கள் பலி - போலீசில் புகார்

    நெல்லை டவுன் சாஃப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லை வருவாய் ஆய்வாளர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  11. தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் - அரசாணை வெளியீடு

    தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது மாற்று திறனாளிகள் தவிர்த்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்" என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. நெல்லை பள்ளி மாணவர் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

    நெல்லை பள்ளி ஒன்றில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் இறந்த மாணவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

    இடிந்த அந்த கழிவறைக் கட்டடத்தின் அடித்தளம் வலுவாக இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

  13. தமிழ் நாட்டில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

    தமிழ் நாட்டில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும், ஒரே குழு மூலம் 12 நபர்களுக்கு கொரோனா பரவல் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஒருவருக்கு அண்மையில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், `ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் வந்த பயணி ஒருவர், உறவினர்கள் 4 பேருக்கு எஸ் ஜீன் டிராப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. மேலும், ஒரே குழுவின் மூலம் 12 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  14. நெல்லை பள்ளியில் கழிவறை இடிந்து இரண்டு மாணவர்கள் பலி

    பள்ளி கட்டடம்.

    திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    நெல்லை டவுன் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

    இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்தப் பள்ளி100 ஆண்டுகள் பழமையானது.

    தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த கோபத்துடன் பள்ளியில் கற்களை கொண்டு வீசியும், பள்ளியில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தியும் வருகின்றனர்.

  15. 'வீகர் முஸ்லிம்களின் கட்டாய உழைப்பில் உற்பத்தி நடக்கவில்லை என நிரூபித்தே சீன இறக்குமதி'

    சீன இறக்குமதிகள் வீகர் முஸ்லிம்களின் கட்டாய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படவில்லை என நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் புதிய சட்டம் வருகிறது.சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினரான வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறையில் சீனா ஈடுபடுவதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை சீனா தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

    இந்நிலையில், ஷின்ஜியாங்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், அங்கு கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என்ற வகையில், அமெரிக்க காங்கிரஸ் மசோதா ஒன்றை வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. ஒருவரைத் தவிர மற்ற அனைவரின் ஆதரவு வாக்குகளுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

    வீகர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது அதிபர் ஜோ பைடன் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. இந்த மசோதாவை, அந்த பகுதியில் தொழில் செய்துவரும் கோகோ-கோலா, நைக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. இதனால், விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என்பதால், தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன.

  16. பாலியல் வல்லுறவு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.

    கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் குமார் என்பவர், கர்நாடக சட்டசபையிலேயே பாலியல் துன்புறுத்தல் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.

    "ஒரு பழமொழி இருக்கிறது: பாலியல் வல்லுறவை தவிர்க்க முடியாத போது, படுத்துக் கொண்டு அனுபவிக்கவேண்டியதுதான்" என சர்ச்சைக்குரிய ரீதியில் பேசியுள்ளார் என ஏ என் ஐ முகமையில் காணொளியோடு செய்தி வெளியாகியுள்ளது.

    சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார், கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கூறியபோது, அதை பாஜகவைச் சேர்ந்த அவைத்தலைவர் ககேரி மறுத்த போது அவர் இப்படிப் பேசியதாகக் கூறப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்பான செய்திகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள்.