கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சரிடம் மேதா பட்கர் கோரிக்கை

கூடங்குளத்தில் அணுஉலை விரிவாக்கம் மற்றும் அணுக் கழிவு மையத்தை தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் வலியுறுத்தியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கூடங்குளம்: அணுஉலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சரிடம் மேதா பட்கர் கோரிக்கை

    கூடங்குளத்தில் அணுஉலை விரிவாக்கம் மற்றும் அணுக் கழிவு மையத்தை தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான மேதா பட்கர்,சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுப.உதயகுமார்,பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைஇன்று சந்தித்தனர்.

    இந்தச் சந்திப்பில்,வேளாண் சட்டம்,குடியுரிமைச் சட்டம்,நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன்,அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகிய திட்டங்களில் தி.மு.க அரசு எடுத்த நிலைப்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து,கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம் மற்றும் அணுக்கழிவுமையம் ஆகியவற்றை தடுத்து நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற மேதா பட்கர், ``மாநில அரசுக்கு எந்தத் திட்டத்தையும் நிறுத்தக்கூடிய அதிகாரம் உள்ளது. அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் விவகாரத்திலும் முடிவெடுக்க வேண்டும்.

    விவசாய சட்டத்தை மத்திய அரசு இயற்றினாலும் அதற்கு எதிராக தி.மு.க அரசு,சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இது இந்திய அரசின் ஒப்பந்தம் எனக் கூற வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசு நினைத்தால் தடுக்கலாம்''என்றார்.

    மேலும், ``வளங்கள் மீதான உரிமையை கார்ப்பரேட்டுகள் கொண்டாடுகின்றன. அணுசக்தியின் கதிர்வீச்சால் கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன. ஒரே இடத்தில் ஆறு உலைகளை அமைப்பது என்பது தவறான ஒன்றாகப் போய்விடும்''எனவும் மேதா பட்கர் குறிப்பிட்டார்.

    இதனைத் தொடர்ந்து,மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு,அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,பூவுலகின் நண்பர்கள்,அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவை மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

    அதில், `கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக மூன்றாண்டுகள் தொடர்ந்து மக்கள் போராடியதை புறம்தள்ளி இன்று கூடங்குளத்தில்3, 4, 5, 6,என மென்மேலும் அணுஉலைகளை மத்திய அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. அனைத்துமே1,000மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப் பெரியஅணுஉலைகள். இவற்றுள் முதல் இரண்டு உலைகளுமே இன்றுவரை திறம்பட இயங்கவில்லை. முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை.

    பல்வேறு குளறுபடிகளாலும் தொழிற்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேலும்7, 8அணுஉலைகளும்,அணுக்கழிவு மையங்களும்,அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் (reprocessing plant)அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன'எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    தொடர்ந்து அந்த அறிக்கையில், `தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்புக் கூட்டத்தொடரில்,கூடங்குளம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த9ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங்,உண்மைக்குப் புறம்பானகருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

    கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் அமைக்கப்படும் அணுக்கழிவு மையங்கள் நிலநடுக்கங்களையும் சுனாமியையும்கூட எதிர்கொண்டு பாதுகாப்பாக இயங்க முடியும் என்றும் அணுக்கழிவு மையங்களால் அணுமின் நிலைய ஊழியர்கள்,பொதுமக்கள்,சுற்றுச்சூழல் என யாருக்கும் எந்தவிதக்கேடும் உருவாகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் ‘பூவுலகின் நண்பர்கள்’2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்,அணுக்கழிவு மையங்கள் (Away From Reactors --அணுஉலைக்கு அகலே) அமைப்பதற்கான தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்று2018-ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக ஆவணம் ஒன்றைசமர்ப்பித்து,கூடுதல் கால அவகாசம் கோரியது. அந்தக் காலக்கெடு வரும்2022மே மாதம் முடிவடைகிறது. மத்திய அரசும்,அதன் அணுசக்தித் துறையும் இப்படி முற்றிலுமாக திரித்துப் பேசுவது ஓர் அறமற்ற,ஆபத்தான செயல்'எனத் தெரிவித்துள்ளனர்.

    மேலும், `கூடங்குளத்தில் இயங்காமல் உள்ள முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்ற ஊழல்கள்,முறைகேடுகள்,ஆபத்துகள் பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,ரஷ்யாவுடன் போடப்பட்ட1997ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேதிருப்பி அனுப்ப வேண்டும்'எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    `இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கே கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து,அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே,கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும். அதுவரையில்,கூடங்குளத்தில்3, 4, 5, 6அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா,வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா,மத்தியப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தேவாரம் நியூட்ரினோ திட்டம் போன்றவற்றைக் கைவிட்டு,தமிழ்நாட்டை`அணு தீமையற்ற தமிழ்நாடு'என அறிவிக்க வேண்டும்'என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

    இந்திய ஆளுகையின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் ஜேவன் பகுதியில் பயங்கரவாதிகள், காவல்துறை வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    காஷ்மீர் மண்டல காவல்துறை இந்த பயங்கரவாத தாக்குதலை தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

    இதில் காவல்துறையை சேர்ந்த 14 பேர் காயமடைந்துள்ளனர்.

    தற்போது காயமடைந்தவர்களில் இருவர் உயிரழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா இல்லை

    தசைப்பிடிப்பு காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது என பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. பால்டிக் கடலில் சரக்கு கப்பல்கள் மோதல் - 2 பேர் பலி

    சுவீடன் கடலோர பகுதியில் பால்டிக் கடலில், 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஒரு கப்பல் கவிழ்ந்தது. மூழ்கிய கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மீட்புப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களால் இதுவரை மூழ்கிய படகில் இருந்த இருவரையும் இதுவரை கண்டறிய முடியவில்லை. விபத்துக்குள்ளான கப்பல் அமெரிக்க கொடியுடன் இருந்தது.

    குளிர்ந்த நீரில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக, சுவீடன் கடல்சார் நிர்வாக (SMA) செய்தித் தொடர்பாளர் ஜோனஸ் பிரான்சன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

    மேலும் "மிகவும் குளிராகவும் இருட்டாகவும் இருக்கிறது, தண்ணீரின் வெப்பநிலை 4C (39F) மற்றும் காற்றின் வெப்பநிலை 5C (41F) ஆக உள்ளது' என்று ஜோனஸ் பிரான்சன் கூறியுள்ளார்.

    பால்டிக் கடற் பகுதியில் தெற்கு சுவீடன் கடலோர நகரமான யஸ்டாட் மற்றும் டென்மார்க் நாட்டின் தீவான போர்ன்ஹோல்ம் இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Baltic Sea: Two feared dead as British and Danish ships collide

    பட மூலாதாரம், SWEDISH SEA RESCUE SOCIETY

  6. ஆடு திருடர்களை காவல்துறை தப்பிக்க விட்டதாக புகார், மணிவண்ணன், பிபிசி தமிழுக்காக

    திருச்சி அருகே கடந்த மாதம் முன்பு ஆடு திருடர்களால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பிறகு திருச்சி சுற்றி உள்ள பகுதிகளில் ஆடு திருடர்களை போலிசார் கண்காணித்து தொடர்ச்சியாக கைது செய்து வருகிறனர்.

    இந்நேரத்தில் திருச்சி அருகே உள்ள காவல்நிலையத்தில் ஆடு திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் திருடனிடம் பணத்தை வாங்கி கொண்டு தப்பிக்க விட்டதாகக் குற்றம்சாட்டப்படும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை பொதுமக்களிடையே ஏற்படத்தியுள்ளது .

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (12.12.2021) இரவு 8.00 மணிக்கு வீடு புகுந்து ஆடுகளை திருட முயன்ற இரண்டுபேரை ஊர் மக்கள் பிடித்து காவல் உதவி ஆய்வாளர் முருகையனிடம் ஒப்படைத்துள்ளார்கள். திருடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மக்கள் வீடு திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை 13.12.2021 அதே நபர்கள் மற்றும் ஓர் ஆட்டு மந்தையில் ஆடுகளை திருடிய போது சிக்கினர். அதில் ஒருவர் தப்பித்த நிலையில் மற்றொருவரை மட்டும் ஊர் பொதுமக்கள் பிடித்துள்ளனர். பிடிபட்ட நபரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தபோது கையில் இருந்த 5000 ரூபாயை அங்குள்ள போலீசாரிடம் கொடுத்துவிட்டோம். மேலும் ஊருக்கு போக காசு இல்லாததால் மீண்டும் ஆடு திருட வந்தோம் என்று கூறியுள்ளனர்.

    அதிர்ச்சி அடைந்த ஊர் பொது மக்கள் இனிமேல் ஆடு திருடர்களை போலீசிடம் காவல்நிலையத்தில் இவர்களை ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவோடு பிடித்த நபரை அங்கேயே பிடித்து வைத்துள்ளனர். சம்பவத்தை கேள்வி பட்ட சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பொதுமக்கள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் இச் சம்பவம் ஐ.ஜி வரை சென்று உள்ளதால் விசாரணை செய்வதற்கு துணை காவல் கண்காணிப்பாளர் வர இருப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

  7. விதிகளை மீறி பார்ட்டி - அம்ரிதா அரோரா, கரீனா கபூருக்கு கொரோனா

    இந்தி திரைப்பட நடிகர்கள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    அவர்கள் இருவரும் கோவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டார்கள் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற இந்தியா

    'மிஸ் யுனிவர்ஸ்' 70ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. இதில் 80 உலக நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.

    2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவெர்ஸ் ஆண்ட்ரியா மேசா, ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. போராட்டம் நடத்தி மக்களை தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை -

    மதுரையில் அதிமுக அமைப்பு தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்ற ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "பாமக கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அவர்கள் விலகியபின் பேசும் கருத்துகளுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள்" என்றார்.

    பாஜக எதிர்க் கட்சி போல செயல்பட்டு அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதாக பாஜகவினர் சொல்லும் கருத்துக்கு "பாஜக வளரும் கட்சி என்பதால் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகிறார்கள். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பெரிதல்ல; என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள் என்பதே முக்கியம். எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அடிக்கடி போராட்டம் நடத்தி மக்களை தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை," என்றார் செல்லூர் ராஜூ.

    செல்லூர் கே. ராஜூ.
    படக்குறிப்பு, செல்லூர் கே. ராஜூ
  10. மனித உரிமை மீறல்: 2 இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை

    மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரண்டு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்க தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி ஃப்ளின்கனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தடையுத்தரவு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 நபர்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், அதில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

    மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை பெற்றவர் முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க
    படக்குறிப்பு, மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை பெற்றவர் முன்னாள் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க
  11. மு.க. ஸ்டாலினுக்கு இந்திய ராணுவம் நன்றி

    இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள உதவிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நஞ்சப்ப சத்திரம் கிராம மக்கள் மற்றும் இந்த நிகழ்வு குறித்து பொறுப்புடன் செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் ஆகியவற்றுக்கு இந்திய ராணுவம் நன்றி தெரிவித்துள்ளது.

    வெலிங்டனில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் லெப்டினன்ட் ஜெனரல் அருண் இதைத் தெரிவித்தார்.

    குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் சந்திப்புக்கு பின் நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களை நேரில் சந்திக்கச் சென்றார் அருண்.

  12. பிரார்த்தனை செய்த நரேந்திர மோதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, தன் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள கால பைவரர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகில் பயணித்து வருகிறார் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  13. மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நடவடிக்கை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பு மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  14. காசி செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று (டிசம்பர் 13, திங்கட்கிழமை) வாரணாசி நகரத்துக்குச் செல்லவிருக்கிறார்.

    மதியம் சுமார் 12 மணிக்கு கால பைரவர் கோயிலுக்கும், சுமார் மதியம் 1.00 மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் செல்லவிருக்கிறார்.

    339 கோடி ரூபாய் மதிப்பில் காசி விஸ்வநாதர் கோயில் கட்டுமான பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

    மாலை 6 மணிக்கு கங்கா ஆரத்தியைக் காண உள்ளதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி, ஜோ மகேஸ்வரன்.