இந்த நாடு இந்துக்களுடையது, இந்துத்துவவாதிகளுடையது அல்ல: ராகுல்காந்தி பேச்சு

இந்த நாடு இந்துக்களுடையது, ஆனால், இந்துத்துவவாதிகளுடையது அல்ல, காந்தி இந்து, கோட்சே இந்துத்துவவாதி என்று பேசியுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஹேக் செய்யப்பட்ட நரேந்திர மோதியின் டிவிட்டர் கணக்கு என்ன நடந்தது?

    நரேந்திர மோதியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அடுத்தடுத்து இரு ட்வீட்டுகள் பதிவிடப்பட்டன.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  3. போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்ட தடுப்புகள்

    டெல்லியின் எல்லைகளில் சுமார் ஒரு வருடமாக போராடி வந்த விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று அவரவர் ஊர்களுக்கு திரும்பச் சென்றனர். இந்நிலையில் டெல்லி ஹரியானா எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. ஆணையை திரும்பப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்

    முழுவதுமாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற ஆணையை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் திரும்பப் பெற்றது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. ராகுல் காந்தியின் இந்தியா குறித்த கருத்து

    rahul gandhi

    பட மூலாதாரம், Getty images

    “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா இந்துக்களுக்கானது இந்துத்துவவாதிகளுக்கானது அல்ல” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா இந்துக்களுக்கானது இந்துத்துவவாதிகளுக்கானது அல்ல” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ஜெய்ப்பூரில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, “இன்று இந்தியாவில் இரு வார்த்தைகளுக்கு மத்தியில்தான் போட்டி நடைபெற்று வருகிறது. ‘இந்து’ மற்றும் ‘இந்துத்துவவாதி’. இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான அர்த்தம் வேறு. நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மா காந்தி ஒரு இந்து ஆனால் கோட்சே ஒரு இந்துத்துவவாதி.”

    “இரண்டிற்கு உள்ள வித்தியாசத்தை நான் கூறுகிறேன். என்ன நடந்தாலும், ஒரு இந்து உண்மையை அறிய விரும்புவான். அவன் உயிர் பிரிந்தாலும் அவன் உண்மையை தேட முயற்சிப்பான். சத்யமே அவன் வழி. அவன் வாழ்நாள் முழுக்க உண்மையை தேடிக் கொண்டே இருப்பான். என மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.”

    “ஆனால் ஒரு இந்துத்துவவாதி வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை தேடி கொண்டே இருப்பான். உண்மைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை”

    “அவனுக்கு அதிகாரம் மட்டும் தேவை. அதிகாரத்திற்காக இந்துத்துவவாதி என்னவேண்டுமானாலும் செய்வார். யாரை வேண்டுமென்றாலும் கொல்லுவார். என்ன வேண்டுமானாலும் பேசுவார். எரிப்பார், அழிப்பார், வெட்டுவார் கொல்லுவார்,”

    “இந்த நாடு இந்துக்களுக்கானது. இந்துத்துவவாதிகளுக்கானது அல்ல,” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

  6. ஆசியாவின் ராணி இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

    உலகிலேயே மிகப் பெரிய தனி நீல நிறத்திலான இரத்தினக்கல் (Blue Sapphire) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி மாவட்டம் பட்டுகெதர என்ற இடத்திலேயே இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நீல நிறத்திலான இரத்தினக்கல், 310 கிலோகிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரத்தினக்கல் 1550000 காரட் என அதிகார சபை தெரிவிக்கின்றது.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரத்தினக்கலானது, ஆசியாவின் ராணி என அழைக்கப்படுகின்றது.

  7. 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற லாரா ஷெப்பர்ட்

    இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட்

    அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

    இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை அனுபவித்தனர். ப்ளூ ஆரிஜின் நிறுவனம், விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிக்கவும், புதிய சந்தையைப் பிடிக்கவும் நடத்திய மூன்றாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  8. "நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதே" ஆப்கன் மாணவிக்கு மலாலா கடிதம்

    மலாலா யூசஃப்சாய்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, மலாலா யூசஃப்சாய்

    அன்புள்ள ரோஹிலா,

    நீ தனியாக இல்லை என்பதை நீ அறியவேண்டும் என விரும்புகிறேன்.

    பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய ஆண்கள் பெண்களுக்கான பள்ளிகளை மூடுவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. நாளை என்ன வரும் என்று தெரியாமல் இருப்பது, வகுப்பறைக்கு மீண்டும் வரமாட்டேனோ என்று பயப்படுவது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் காபூலை கைப்பற்றியபோது, நான் மருத்துவமனையில் இருந்தேன். அவர்களுடைய தோட்டாவால் ஏற்பட்ட காயத்தைச் சரிசெய்ய, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இது எனக்கு ஆறாவது சிகிச்சை.

  9. பிரிட்டனில் ஜனவரியில் அடுத்த கொரோனா அலையா?

    கொரோனா பரிசோதனை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா பரிசோதனை

    பிரிட்டனில் மேற்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் அடுத்த பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த திரிபால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 25,000 முதல் 75,000 வரை மாறுபடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால், வைரஸ் மாடலிங் தொடர்பான விஷயத்தில், இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுவதாக இந்த ஆய்வின் பின்னணியிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வில் மோசமான சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என இவ்வாய்வோடு தொடர்பில்லாத விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

  10. ஹேக் செய்யப்பட்ட நரேந்திர மோதியின் ட்விட்டர் கணக்கு - விரைந்து மீட்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் அலுவலகம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின், @narendramodi என்கிற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு சிறிது நேரத்துக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, ட்விட்டர் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    மேலும் ஹேக் செய்யப்பட்ட அந்த குறுகிய காலகட்டத்தில் பிரசுரிக்கப்பட்ட பதிவுகளை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பிதமர் அலுவலகம் ட்விட் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

  11. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விவசாயிகள் வீடு திரும்புவர்

    போராட்ட களத்தில் இருக்கும் விவசாயிகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கலைந்து செல்வர். சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அடுத்த கூட்டம் வரும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் என ராகேஷ் திகைத் ஏ என் ஐ முகமையிடம் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹரியானா, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் போராட்டங்களை நிறைவு செய்யும் நிகழ்ச்சிக்காக செல்வதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகைத் ஏ என் ஐ முகமையில் கூறியுள்ளார்.

  12. ஆஸ்திரியாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

    வரும் பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விதிமுறையை கடந்த மாதம் அறிவித்தது ஆஸ்திரியா. ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்திலேயே தடுப்பூசி கட்டாயம் என அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடு இது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    14 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் (உடல்நலம் சார்ந்த காரணங்களால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதவர்கள் நீங்கலாக) தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது அந்நாடு.

    இதை அந்நாட்டில் உள்ள வலது சாரி கட்சியான சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என தீர்மானிக்க மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    வலது சாரி ஆதரவாளர்கள் மற்றும் தடுப்பூசிக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் சாலையில் இறங்கி கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும், கொரோனா விதிமுறைகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.

    இதுவரை ஆஸ்திரியாவில் 68 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  13. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள்.