“ராஜஸ்தான் மாநிலம்
ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா இந்துக்களுக்கானது இந்துத்துவவாதிகளுக்கானது
அல்ல” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“ராஜஸ்தான் மாநிலம்
ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா இந்துக்களுக்கானது இந்துத்துவவாதிகளுக்கானது
அல்ல” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில்
இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, “இன்று இந்தியாவில்
இரு வார்த்தைகளுக்கு மத்தியில்தான் போட்டி நடைபெற்று வருகிறது. ‘இந்து’ மற்றும் ‘இந்துத்துவவாதி’. இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான அர்த்தம் வேறு. நான் ஒரு
இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மா காந்தி ஒரு இந்து ஆனால் கோட்சே ஒரு இந்துத்துவவாதி.”
“இரண்டிற்கு உள்ள வித்தியாசத்தை நான் கூறுகிறேன். என்ன நடந்தாலும், ஒரு இந்து உண்மையை அறிய விரும்புவான். அவன் உயிர் பிரிந்தாலும் அவன் உண்மையை
தேட முயற்சிப்பான். சத்யமே அவன் வழி. அவன் வாழ்நாள் முழுக்க உண்மையை தேடிக் கொண்டே
இருப்பான். என மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.”
“ஆனால் ஒரு இந்துத்துவவாதி வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தை தேடி
கொண்டே இருப்பான். உண்மைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை”
“அவனுக்கு அதிகாரம் மட்டும் தேவை. அதிகாரத்திற்காக இந்துத்துவவாதி
என்னவேண்டுமானாலும் செய்வார். யாரை வேண்டுமென்றாலும் கொல்லுவார். என்ன வேண்டுமானாலும்
பேசுவார். எரிப்பார், அழிப்பார், வெட்டுவார்
கொல்லுவார்,”
“இந்த நாடு இந்துக்களுக்கானது. இந்துத்துவவாதிகளுக்கானது அல்ல,” என ராகுல் காந்தி தெரிவித்தார்.