'தாலிபன்களை சகோதரர்கள் என்று சொன்னது ஏன்' - ஹமீத் கர்சாய் பதில்

"நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆப்கானிஸ்தானை விட்டு நாம் யாரும் வெளியேறக்கூடாது. இங்கேயே இருந்து நாட்டை மேம்படுத்த வேண்டும்," என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    உங்களுக்கு இந்த இரவு இனிதாகட்டும்.

  2. கர்நாடக சுகாதார அமைச்சர் தகவல்

    பெங்களூரில் கொரோனாவின் ஒமிக்ரான் திரிபால், கோவிட் தொற்று உண்டாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் 66 வயதாகும் தென்னாப்பிரிக்க நாட்டவர் என்றும் இன்னொருவர் 46 வயதாகும் மருத்துவர் என்றும் கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    தென்னாபிரிக்க நாட்டவர் அவரது சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. உக்ரைனுடனான மோதல்: ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா

    ஐரோப்பா ராணுவ மோதலின் கொடுங்கனவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

    ஸ்வீடனின் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், நேட்டோ கூட்டமைப்பு உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளை நோக்கி மேலும் விரிவடைவதை தடுக்க புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தம் போடும் யோசனையைப் பகிர்ந்தார்.

    இந்நிலையில் உக்ரைனுடன் மோத எண்ணினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் வெளியுறத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்தி நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரஷ்யா 90,000 படைகளை குவித்து வைத்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

    உக்ரைன் எல்லையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    பட மூலாதாரம், MAXAR VIA REUTER

    படக்குறிப்பு, உக்ரைன் எல்லையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
  4. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள்.

    அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா

    பட மூலாதாரம், Getty Images

  5. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் தற்கொலை

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.வி. வெங்கடாச்சலம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல்துறை கூறுகிறது

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஏ.வி. வெங்கடாச்சலம். இவரது வீடு சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனியில் இருக்கிறது.

    இந்நிலையில் அவரது வீட்டில் முதல் தளத்தில் உள்ள அவரது அறையில் இன்று மாலை அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என காவல்துறை தெரிவிக்கிறது..

    வனத்துறை அதிகாரியாக இருந்த ஏ.வி. வெங்கடாச்சலம் ஓய்வுபெற்ற பிறகு, 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியிருந்தது.

    சேலம் அம்மாம்பாளையத்தில் உள்ள அவரது வீடு, உறவினர் வீடுகள், அவரது வங்கி லாக்கர் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.

    இந்த சோதனையின்போது 6.5 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், 13.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

    இதற்குப் பிறகு அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக உதயன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டென்சிங் பாலையா. இவர் சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு பொறுப்பாக இருக்கிறார்.

    இந்த நிலையில் அதேகல்லூரியில் அவரிடம் படிக்கும் கல்லூரி மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தனர்.

    அதனடிப்படையில் போலீசார் கல்லூரி பேராசிரியர் டென்சிங் பாலையாவை விசாரித்ததில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் டென்சிங் பாலையாவை (தாவரவியல் பேராசிரியர் )கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அருப்புக்கோட்டை கிளை சிறையில் டென்சிங் பாலையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

  7. "நாட்டை ஒன்றாக கட்டியெழுப்புவோம்'' - தாலிபன்களுக்கு ஹமீத் கர்சாய் அழைப்பு

    "நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆப்கானிஸ்தானை விட்டு நாம் யாரும் வெளியேறக்கூடாது. இங்கேயே இருந்து நாட்டை மேம்படுத்த வேண்டும்," என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

    பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி நாட்டை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    "நான் அதிபர் பதவியில் இருந்த காலத்தில் தாலிபன்களை சகோதரர்கள் என்று குறிப்பிடுவேன். மேற்கண்ட நோக்கத்தை மனதில் வைத்துத்தான் அவர்களைச் சகோதரர்கள் என்று குறிப்பிட்டேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "இந்த நாட்டை நாம் ஒன்றாக கட்டியெழுப்புவோம்; அதற்காக ஒன்றாகப் பணியாற்றுவோம். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்," என்று அவர் பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கீமுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தாலிபன்கள் உடன் தாம் பலமுறை சந்திப்பு மேற்கொண்டுள்ளதாகவும் அப்பொழுது பேசப்பட்டவை பல பிரச்னைகளில் நல்ல வகையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    ஹமீத் கர்சாய்
  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிப்பு

    இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.

    கொரோனா வைரசில் ஏற்படும் மரபணுத் திரிபுகளை ஆராய்வதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு ஏற்படுத்திய இன்சாகாக் கன்சார்ட்டியம் (INSACOG consortium) மூலம் செயல்படுத்தப்படும் ஆய்வகம் இந்த ஜெனோம் சீக்வன்சீங் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஜெனோம் சீக்வன்சிங் என்பது ஓர் உயிரியின் மரபணுக் குறிப்புகள் முழுவதையும் வரிசைப் படுத்தும் ஒரு பணியாகும். இன்சாகாக் கன்சார்ட்டியம் 37 ஆய்வகங்களை நடத்தி வருகிறது. கர்நாடகத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நாம் பீதியடையத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். கோவிட் தொற்றுக்காலத்துக்கு ஏற்ற பழக்கவழக்கங்கள் தேவை என்று தெரிவித்துள்ளார் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. வெளிநாட்டு பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை

    கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளை அடுத்து வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பயணிகளை விமான நிலையத்திலேயே பரிசோதித்து, முடிவு வந்த பிறகே அவர்களை வெளியே அனுப்பவேண்டும் என்ற விதி அமல்படுத்தப்படுகிறது.

    இதனால், வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பரிசோதனைக் கட்டணத்தை பயணிகளால் செலுத்த முடியவில்லை என்றால் அரசே செலுத்தும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு பரவல் தடுப்பு நடவடிக்கையாக தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

    குறிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு, இதன் முடிவிற்கு பின்னரே வெளியே செல்ல முடியம். மத்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

    அமைச்சர் மா.சுப்ரமணியன்

    பட மூலாதாரம், DIPR

  10. டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

    டெல்லியில் ஏற்பட்டுள்ள அதீத காற்று மாசால் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. இலங்கை மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை

    ஆசாத் சாலி

    பட மூலாதாரம், athsalle/faccebook

    லங்கையின் மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான ஆசாத் சாலி, சுமார் 8 மாதங்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (02) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் 09ஆம் தேதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய ஆசாத் சாலி, இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், அதே மாதம் 16ஆம் தேதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு - இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆசாத் சாலியை விடுதலை செய்வதாக அறிவித்தது.

    ஐ.சி.சி.பி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ், ஆசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

    விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் சுகவீனமுற்றிருந்த ஆசாத் சாலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அண்மைக்காலமாக நீதிமன்றத்துக்கு ஆஜராகி வந்தார்.

    இதன்போது அவர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  12. தமிழ்நாடு: மழை நிலவரம்

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. போட்டிகளை ரத்து செய்ய சீனாவின் பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு

    peng

    பட மூலாதாரம், Getty images

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

    அதன்பிறகு அவரின் இருப்பிடம் குறித்து பல கேள்விகள் எழுந்தன.

    இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் ரத்து செய்வதாக பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    35 வயதாகும் பெங் புகார் தெரிவித்த பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை.

    எனவே பல்வேறு தரப்பினரும் அவரின் இருப்பிடம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் பெங் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளாரா என்பதில் தனக்கு சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த நிலையில் வீராங்கனைகளை போட்டிகளில் கலந்து கொள்ள தன்னால் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சீனா பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொடக்கத்திலிருந்து தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  14. ஒமிக்ரான் போன்ற திரிபுகள் எப்படி உருவாகின்றன?

    உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் மீண்டும் அந்த அச்சுறுத்தல் காலத்தை நினைப்படுத்துகிறது.

    கொரோனாவின் புதிய திரிபுகள் எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் காணொளி இது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  15. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    ஆண்களுக்கான FIH ஜுனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு ஜுனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளும் விளையாடின.

    அப்போது 2:1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று,உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. எனவே மீண்டும் இரு அணிகளும் உலகக் கோப்பை அரையிறுதியில் மோதின. ஆகையால்,இறுதிப் போட்டி போலவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

    அதற்கேற்ப, போட்டியும் தொடக்கம் முதலே விறு விறுப்பாக இருந்தது. ஆட்டத்தின்முதல்பாதியில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணியின் சர்தா நந்த் திவாரி கோல் அடித்தார். பெல்ஜியம் வீரர்கள் கடைசிவரை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. பரபரப்பான ஆட்டத்தின்இறுதியில் 2:0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை (டிசம்பர் 3)நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. ஜூனியர் உலகக் கோப்பையை இந்தியா 2 முறையும் ஜெர்மனி 6 முறையும் வென்றுள்ளன.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக குரூப் சுற்றில்,கனடாவிற்கு எதிரானபோட்டியில் அபார ஆட்டத்தால், 13:01 என்கிற கோல் கணக்கில் இந்தியா வென்றது. மற்றொரு போட்டியில் போலந்து அணியை 8:2 என்கிற கோல் கணக்கில் வென்றது.

    இந்நிலையில், வலிமையான ஜெர்மனி அணியையும் வென்று இறுதிப் போட்டிக்கு செல்லுமா இந்தியா?என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

  16. இந்தியா: கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. "தடுப்பு மருந்தை கட்டாயமாக்கப்பட வேண்டும்"

    vaccine representation

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா மற்றும் அதன் புதிய திரிபான ஒமிக்ரானை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பு மருந்தை கட்டாயமாக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    “தீவிரமாக பரவக்கூடிய” கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தடுப்பூசிகள் முக்கியமானதாக இருக்கும்” என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுளா வான்டேர் லெய்ன் தெரிவித்துள்ளார்.

    20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தோன்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியுள்ளது.

    தற்போதைய சூழலில் ஒமிக்ரான் பாதிப்பு மிதமானதாகவே உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதன் கிழமை பிரஸ்செல்சில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வான்டேர் லெய்ன், “ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.எனவே கட்டாய தடுப்பூசி குறித்து விவாதிப்பது, “பொருத்தமானது மற்றும் புரிந்து கொள்ளத்தக்கது” என்றார்.

    கட்டாய தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனிப்பட்டமுறையில் செயல்படுத்த முடியும். ஏற்கனவே, சில நாடுகள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. வரும் பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி கட்டாயம் என்று ஆஸ்திரியா அறிவித்துள்ளத்து. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கிரீஸ் அபராதம் விதிக்கிறது.

    ஜெர்மனியின் அடுத்த அதிபர் ஒலாப் ஸ்கேல்ஸ், கட்டாய தடுப்பூசியை தான் ஆதரிப்பதாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். “வரும் மார்ச் மாதம் முதல் கட்டாய தடுப்பூசியை விரும்புகிறேன்.பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்,” என்றார்.

    முதன்முறையாக தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது , ஒமிக்ரானை கவலைக்குரிய திரிபாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. புதிய திரிபு குறித்து அடுத்த சில நாட்களில் அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

    தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை புதன் கிழமை இரு மடங்காக பதிவாகியுள்ளது. இந்த திரிபு இன்னும் தாக்கத்தை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய திரிபைத் தடுக்கும் என்று நம்புவதாக ஏற்கனவே உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ‘தடுப்பூசி வேலை செய்யாது என்பதற்கு ஆதாரமில்லை’

    ஒமிக்ரான் பரவுவதைத் தடுக்க பல நாடுகள் எல்லைகளில் நுழைவு அனுமதியைக் கடுமையாக்கியுள்ளன. நைஜீரியா, நார்வே, தென் கொரியா ஆகிய நாடுகளில் ஒமிக்ரான் பதிவாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமையன்று அமெரிக்காவிலும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    ஏற்கனவே 8 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாடுகளுக்கு சென்றவர்களின் விபரங்களை விமான நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.

  18. வணக்கம் நேயர்களே!

    இன்றைய பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு நேயர்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.