ஒமிக்ரான்: தமிழ்நாடு விமான நிலையங்களில் இன்று நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் வெளியேறும் சர்வதேசப் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டிசம்பர் 1ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல்நிலை தேர்வுகள்: இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு - மக்களவையில் கனிமொழி எம்..பி

    யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல் கட்ட தேர்வுகள் மற்றும் இதர மத்திய அரசுப்பணி தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதால் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்பு பெறமுடிவதில்லை என்று மக்களவையில் பேசினார் திமுக எம்.பி கனிமொழி.

    இது தொடர்பான காணொளியை கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த போட்டி தேர்வுகளை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர் மக்களவையில் பேசினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. பொருளாதார ஒத்துழைப்பு: இந்திய, இலங்கை நிதியமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு

    இலங்கை

    பட மூலாதாரம், Basil Rajapaksa

    படக்குறிப்பு, இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப் பேசும் இலங்கை நிதித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ

    இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

    டெல்லிக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இலங்கை நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர் . ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட மற்றும் அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

    இந்தியா தனது பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் மூலம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

    இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர் என்று பசில் ராஜபக்ஷவின் ஃபேஸ்புக் பக்க இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதற்கு முன் அவர் 2017 முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    பசில் ராஜபக்ஷ இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர். கடந்த ஜூலை மாதம் விரிவுபடுத்தப்பட்ட இலங்கை அமைச்சரவையில் அவர் நிதித்துறை அமைச்சராக சேர்க்கப்பட்டார்.

    "முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை" இலங்கை சந்தித்த வேளையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த நெருக்கடிக்கு பிறகு பசில் மேற்கொள்ளும் முதல் அலுவல்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

    இலங்கை

    பட மூலாதாரம், Basil Rajapaksa

  4. அதிமுகவில் புதிய விதி - என்ன நடக்கிறது அந்த கட்சியில்?: வைகைச்செல்வன் பேட்டி, முரளிதரன் காசி விஸ்வநாதன்

    அதிமுகவின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து் பாஜகவின் அழுத்தத்தில் அதிமுக உள்ளதா என்பது குறித்தும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் நேரலையின்போது கேள்வி எழுப்பப்பட்டது.அவர் அளித்த பதில்கள் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.இந்த செய்தியின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.

  5. கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    புதிதாக பல்வேறு பிறழ்வுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் திரிபை கண்டுபிடித்துள்ளனர். அந்த திரிபு மிகுந்த கவலை அளிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    ஓமிக்ரான் திரிபில் மொத்தம் 50 பிறழ்வுகள் உள்ளன. அதில் 32 பிறழ்வுகள் ஸ்பைக் புரோட்டீன் என்றழைக்கப்படும் புரத இழையில் உள்ளன. இந்த ஸ்பைக் புரோட்டின் இழைகள் தான் கொரோனா தடுப்பூசிகளின் இலக்கு.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  6. வங்கிகள் தனியார்மய மசோதாவை கைவிட இந்திய நிதியமைச்சரிடம் விசிக கோரிக்கை

    நிர்மலா சீதாராமன்

    பட மூலாதாரம், RAVIKUMAR MP

    படக்குறிப்பு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார்.

    பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சந்திப்பின்போது அக்கட்சியைச் சேர்ந்தவரும் எம்.பி.யுமான ரவிக்குமாரும் உடனிருந்தார்.

    இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், "எந்தெந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்பது இதுவரை முடிவாகவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த கூட்டத்தொடரில் மசோதா பட்டியலிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமனிடம் இருவரும் தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறு வலியுறுத்தியதாகவும் நிவாரண சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றும் ரவிக்குமார் கூறினார்.

  7. அதிமுக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

    இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. தமிழ்நாட்டு விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேசப் பயணிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு கவலைக்குரியது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடுகள் தடுப்பு,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து,இந்திய அரசு கடந்த 28ம் தேதி வெளியிட்ட திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன்படி,சென்னை,திருச்சி,மதுரை,கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு,தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் செல்வவிநாயம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

    “ இந்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதலை முழுமையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள,தென் ஆப்பிரிக்கா, சீனா, நீயூசிலாந்து, ஹாங்ஹாங், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், பிரேசில், வங்கதேசம்,போட்ஸ்வானா,மொரிஷியஸ், ஜிம்பாப்வே,சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தே வெளியே அனுமதிக்கவேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை விமான நிலையத்திலேயே தனியிடத்தில் தங்கும் வசதி தரவேண்டும். பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எட்டாவது நாள் மறு பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதும் தொற்று இல்லை என்றாலும் மேலும் 7 நாட்களுக்கு சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானால்,அவர்களுடைய பரிசோதனை மாதிரியை ஜெனோமிக் டெஸ்ட்டிங் செய்ய INSACOG ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த சுற்றறிக்கை விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கும், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  9. வணக்கம் நேயர்களே!

    இன்றைய பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு நேயர்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.