டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழந்தது

ஒரு நாள் சர்வதேச போட்டியில் உலக கோப்பையை ஐந்து முறை வென்ற பெருமையை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இப்போது டி20 உலக கோப்பையையும் கைப்பற்றி தமது சாதனை திறனை கிரிக்கெட் உலகில் நிரூபித்திருக்கிறது. ஆனால், டி20 உலக கோப்பையில் கடைசிவரை களத்தில் இருந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நியூசிலாந்து அணி வந்ததுதான் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த அணியின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்ந்தது

    டி20 உலக கோப்பை

    பட மூலாதாரம், ICC

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை போட்டியில் இறுதியாக களத்தில் மோதிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

    இது ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பெறும் வெற்றியாகும்.

    முன்னதாக, ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கு ரன்களை இரண்டு விக்கெடுகளை இழந்த நிலையில், 19ஆவது ஓவரில் எட்டி வெற்றிக் கோப்பையை பெற்றது.

    இத்தனைக்கும் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்தபடி சிறப்பாக தனது ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆரோன் ஃபிஞ்ச் வெறும் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார்.

    ஆனால், மிட்செல் மார்ஷ், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் கூட்டு சேர்ந்து 92 ரன்களை தங்களின் அணி குவிக்கும் வரை ஆடினார். 38 பந்துகள் கடந்தபோது வார்னர் 53 ரன்கள் அடித்தார். அப்போது, ஆஸ்திரேலிய அணி 107 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கைகூடி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

    இந்த அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காத வீரராக மிட்செல் மார்ஷ் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    முன்னதாக, டாஸில் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யுமாறு நியூசிலாந்தை கேட்டுக் கொண்டது.

    இதைத்தொடர்ந்து துபை சர்வதேச விளையாட்டரங்களில் இரவு 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.

    ஆட்டம் தொடங்கிபோது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 பந்துகளில் 85 ரன்களை எடுத்தார். அவர் ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆனார்.

    பிறகு மார்டின் குப்டில் 35 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். டரில் மிட்செல் 8 பந்துகளில் 11 ரன்களையும் கிளென் ஃபிலிப்ஸ் 17 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்திருந்தார். இந்த இன்னிங்சில் மிட்செல், வில்லியம்சன், ஃபிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட்.

    ஒருபுறம் ஒரு நாள் சர்வதேச போட்டியில் உலக கோப்பையை ஐந்து முறை வென்ற பெருமையை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இப்போது டி20 உலக கோப்பையையும் கைப்பற்றி தமது சாதனை திறனை கிரிக்கெட் உலகில் நிரூபித்திருக்கிறது.

    ஆனால், டி20 உலக கோப்பையில் கடைசிவரை களத்தில் இருந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நியூசிலாந்து அணி வந்ததுதான் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த அணியின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

    டி20 உலக கோப்பை

    பட மூலாதாரம், EPA/DAVID GRAY

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. கோவை மாணவி இறப்பு சம்பவம்: பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்

    கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்பட்ட 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது பெற்றோர் முன்பே தெரிவித்த புகார் மீது அவர் படித்த பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுக்காததாகவும் அது பற்றி காவல்துறையிடம் தெரிவிக்காமல் தவிர்த்ததாகவும் கூறி அந்த முதல்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவையில் பள்ளி மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது மரணத்துக்கு காரணம் என தமது பள்ளி ஆசிரியர் மற்றும் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பு சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல்வர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த வேளையில், அவரை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் அனுமதியுடன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    உயிரிழந்த மாணவி தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் தொந்தரவு பற்றி முன்பே பள்ளி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது மற்றும் அந்த சம்பவம் பற்றி காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வராமல் தவிர்த்ததால் மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி முதல்வரையும் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்த்துள்ளதாக கோவை நகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  3. போக்சோ குற்றங்களில் சகிப்புத்தன்மை கூடாது: தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷா வலியுறுத்தல்

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    போக்சோ குற்றங்கள் மீது சகிப்புத்தன்மை அறவே கூடாது என்று தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

    ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் இன்று நடைபெற்ற தென் மண்டல கவுண்டல் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

    இந்த நிலையில், கூட்டத்தில் நிறைவுரையாற்றிய அமித் ஷா, மாநிலங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை விளக்கி அவற்றை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன் விவரம்:

    தென் மண்டல கவுன்சிலில் இடம்பெற்ற மாநிலங்களில் துணை வட்டார அளவில் இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC௰ மற்றும் தடயங்கள் (எவிடன்ஸ்) சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கி மாநிலங்கள் தங்கள் கருத்துகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    போதைப்பொருள் பயன்பாடு நமது இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் அழித்துவிடும் என்பதால், போதைப் பொருட்களின் அச்சுறுத்தல் தடுக்கவும் அதன் பரவலை தடுக்கவும் முதல்வர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    வழக்குகளை விரைவுபடுத்த, மாநில அரசுகள் சட்டப்பிரிவு இயக்குநர் என்ற ஒரு சுயாதீன பொறுப்பை உருவாக்க வேண்டும்.

    பிரதமர் ரேந்திர மோதியின் முயற்சியால் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களும் குறைந்தபட்சம் ஒரு தடய அறிவியல் கல்லூரியை உள்ளூர் மொழியில் பாடத்திட்டத்துடன் நிறுவ வேண்டும், இதனால் தடயவியல் விசாரணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பயிற்சி பெற்ற மனிதவளம் இருக்க முடியும்.

    POCSO குற்றங்கள் சகிப்புத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். POCSO வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த வழக்குகளை விசாரித்து முடிக்க 60 நாட்கள் கால அவகாசத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    நவம்பர் 15 ஆம் தேதியை ஜன்ஜாதிய கவுரவ் திவஸ் ஆக கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பழங்குடியின சமூகங்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரத்தில் பல்வேறு வடிவங்களில் கடைப்பிடிக்கப்படும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் அவர்களின் மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பழங்குடியினரின் பங்களிப்பை வெளிப்படுத்தவும் சிறப்பிக்கவும் முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  4. திமிங்கலத்தின் அம்பர்கிரிசை விற்க முயன்றதாக இரு நாகை மீனவர்கள் கைது, ஜி. மணிவண்ணன், திருச்சி

    அம்பர்கிரிஸ்
    படக்குறிப்பு, காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அம்பர்கிரிஸ்

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

    அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே அவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வெள்ளப்பள்ளம் அருகே ஒரு வியாபாரியிடம் அம்பர்கிரிஸை சிலர் விற்பனை செய்யப் போவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் சென்ற கியூ பிரிவு போலீசார் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்றபோது இருவரையும் சுற்றி வளைத்ததாக தெரிவித்தனர். இருவர் வைத்திருந்த பையிலிருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரிய வகை அம்பர்கிரிஸ் இருப்பது தெரியவந்தது.

    அதை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக அம்பர்கிரிசை விற்க முயன்றதாகக் கூறி வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் பாலகுரு, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.

    அம்பர்கிரிஸ் என்றால் என்ன?

    நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்து பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்த அம்பர்கிரிஸை திமிங்கலத்தின் வாந்தி என்றும் கூறுவார்கள். இது வெள்ளை, சாம்பல்- கறுப்பு நிறங்களில் கலந்து இருக்கும்.

    அம்பர் கிரீஸ்
    படக்குறிப்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள பாலகுரு, ஆனந்த்
  5. நாகை அருகே பழைய வீடு இடிந்ததில் பெண் பலி, இருவர் படுகாயம், ஜி. மணிவண்ணன், திருச்சி

    நாகை மழை
    படக்குறிப்பு, நாகூரில் வீடு இடிந்த சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்

    நாகை அருகே நாகூரில் உள்ள பழமையான வீடு இடிந்து விழுந்ததில் இடர்பாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயத்துடன் இரண்டு பெண்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நாகை அடுத்துள்ள நாகூர் செய்யது பள்ளி தெருவில் உசைன் என்பவருக்கு சொந்தமான பழமையான ஓட்டு வீடு உள்ளது. அந்த வீட்டில் அவருடைய மனைவி ஜெகபர் நாச்சியார்(65), சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்த மகள் ரெஜினா பானு (43) மற்றும் உறவினரான ஜெகபர் நாச்சியார் (70) ஆகியோர் இருந்து வருகின்றனர்.

    அந்த வீட்டின் சுவர்கள் கன மழை காரணமாக வலுவிழந்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தபோது மூவரும் உள்ளே இருந்துள்ளனர். அவர்களின் அலறல் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் அவர்களை மீட்பதற்கு நீண்ட நேரம் போராடினர்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியோடு மூவரையும் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அதைத்தொடர்ந்து மூவரையும் அவசர ஊர்தி மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வீடுகள் இடிந்து விழுந்ததில் முகத்தில் சிதைவு ஏற்பட்டு ரெஜினா பானு என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த இருவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  6. என்கவுன்டரில் மிலிந்த் டெல்டும்டே உட்பட பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

    மாவோயிஸ்ட் தேடுதல். கோப்புப் படம்.

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, மாவோயிஸ்ட் தேடுதல். கோப்புப் படம்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தனோரா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்டவர்களில் முக்கிய மாவோயிஸ்ட் கமாண்டரான மிலிந்த் டெல்டும்டேவும் அடக்கம் என்று போலீசார் உறுதிப்படுத்தினர். கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    அதில் போலீசாரால் தலைக்கு ரூ.50 லட்சம் விலை அறிவிக்கப்பட்ட மிலிந்த் டெல்டும்டே பெயரும் இருந்தது. இது தவிர, ஆறு பெண் மாவோயிஸ்ட்டுகள் பெயரும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தது. இந்த சண்டையில், சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த போலீசார் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

  7. பெலாரூசின் எரிவாயு விநியோக நிறுத்த பேச்சைக் கண்டித்த புதின்

    பெலாரூஸ்

    பட மூலாதாரம், Reuters

    சில தினங்களுக்கு முன், பெலாரூஸ் நாட்டின் மேற்கு எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து குவிந்து வரும் குடியேறிகள் தொடர்பான விவகாரத்தில், பெலாரூஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் தலைவர் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ எச்சரித்தார். அப்படி தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரொஸ்ஸியா என்கிற தொலைக்காட்சி நேர்காணலில் நவம்பர் 13ம் தேதி, சனிக்கிழமை கூறினார்.மேலும், தான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை எனவும் புதின் கூறினார். எரிவாயு குழாய்கள் பெலாரஸ் நாட்டின் வழியாகச் செல்வதால், அந்நாட்டின் அதிபர் என்கிற முறையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு உத்தரவிடலாம். ஆனால் அது எரிவாயு டிரான்சிட் ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும் என மறைமுகமாக எச்சரித்துள்ளார். மேலும், அப்படி எதுவும் நடக்காது என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் புதின்.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.