டெல்லியில் மோசம் அடையும் புகை மாசு: பள்ளிகளை ஒரு வாரம் மூட உத்தரவு

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கூறினார். அரசு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தனியார் அலுவலகங்களுக்கு தனியான ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,நவம்பர் 13ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் தொடர்பில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டெல்லியில் மோசம் அடையும் புகை மாசு: நவம்பர் 15 முதல் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய தலைநகர் டெல்லியில் மோசமாகி வரும் காற்று மாசுபாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகுஅதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் டெல்லியில் பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டம் தொடர்பான அரசின் நிலை அடுத்த வாரம் தெளிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

    கடந்த வெள்ளிக்கிழமை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலய பகுதியில் (என்சிஆர்) காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை "அவசரகால" சூழ்நிலை என்று கூறிய உச்ச நீதிமன்றம், காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

    மேலும் வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்தல் மற்றும் பொதுமுடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கூறினார்.

    அரசு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தனியார் அலுவலகங்களுக்கு தனியான ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    டெல்லியில் நவம்பர் 14 முதல் 17 வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை செய்யப்படும் என்றும் அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பயிர் கழிவுகள் எரிப்பதால் அதன் மாசுபாடு காற்றில் கலந்து டெல்லியில் தாக்கத்தை அதிகரித்து வருவதாக கேஜ்ரிவால் கூறினார்.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.

    டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் சனிக்கிழமை காலை 7:35 மணிக்கு 499 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் "கடுமையான" பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காற்றுத் தர வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.

    புகை மற்றும் மூடுபனியின் அடர்த்தியான அடுக்கு, டெல்லியை அடுத்த ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராமில் காணப்படுகிறது.

    டெல்லிஎன்சிஆரில் காற்றின் தரம் அவசர நிலையை நோக்கிச் சென்றுள்ளதால், பண்ணை தீ மற்றும் சாதகமற்ற வானிலைச் சூழல்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க, வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனப் பயன்பாட்டை குறைந்தபட்சம் 30 சதவிகித அளவுக்கு குறைக்குமாறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

  3. ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு, ஆ.விஜயானந்த்

    ரம்மி விளையாட்டுக்கான தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

    கொரோனா பேரிடர் காலத்தில் இணையத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், ஊரடங்கு காரணமாக பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால் இணையத்தளத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் மீது பலரும் ஆர்வம் செலுத்தத் தொடங்கினர்.

    அதிலும், குறிப்பாக 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தனர்.

    தொடக்கத்தில் சில ஆட்டங்களில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தடுத்து லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்தனர்.

    இதன் காரணமாக பலரும் தற்கொலை முடிவை தேடிக் கொண்டனர். ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடைவிதித்து தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வரும் மூன்று நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

    இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தில் போதிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை எனக் கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

  4. அதிகரிக்கும் தாமிரபரணி நீர்மட்டம்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள், பிரபுராவ் ஆனந்தன்

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரை ஓரத்தில் உள்ள மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்புவடகிழக்கு பருவமழை காரணமாக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்று வழியாக திருவைகுண்டம் அணையை கடந்து ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

    தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் கொள்ளளவு 15ஆயிரம் கன அடி தண்ணீருக்கு மேல் இருக்கும் என்பதால் தாமிரபரணி கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் மீன் பிடிக்கவோ, குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி, புகைப்படம் எடுத்துக் கொள்ள என எந்த காரணத்திற்காகவும் ஆற்று பகுதிக்கு வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் இன்று திறந்துவிடப்படும் தண்ணீரானது நாளை காலை புன்னக்காயல் வந்தடையும் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

  5. இந்திய எல்லை கிராமத்தில் ராணுவ அதிகாரியை இலக்கு வைத்த பயங்கரவாதிகள் - மனைவி, 8 வயது குழந்தை உள்பட 7 பேர் பலி

    தீவிரவாதிகள் தாக்குதல்

    பட மூலாதாரம், DGAR

    படக்குறிப்பு, உயிரிழந்த கர்னல் விபலவ் திரிபாதி

    மியான்மர் எல்லையையொட்டிய மணிப்பூரின் சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் இன்று காலையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் அசாம் ரைஃபிள்ஸ் 46ஆவது படைப்பிரிவு கர்னல் விப்லாவ் திரிபாதி, அவரது மனைவி மற்றும் எட்டு வயது மகன் மற்றும் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    சனிக்கிழமை காலையில் எல்லை முன்னரங்க பகுதியை மேற்பார்வையிட்டு விட்டு குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரையும் அவரது பாதுகாப்பு வாகனத்தையும் ஆயுததாரிகள் இலக்கு வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்னல் விபலாவ் திரிபாதி, அவரது மனைவி, எட்டு வயது மகள், இரண்டு பாதுகாப்பு வீரர்கள் என ஐந்து பேர் இறந்துள்ளனர்.

    அசாம் ரைஃபிள்ஸ் படையின் தலைமை இயக்குநர், உயிரிழந்தவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மணிப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுவான பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி அல்லது பிஎல்ஏ இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுராசந்த்பூர் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியில் பதுங்கியிருந்து ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பது இதுவே முதல் முறை.

    தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சுராசந்த்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு மிக தொலைதூர கிராமமாகும். இந்த சம்பவத்துக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தில் உயிர் பிழைத்த வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேரில் பார்வையிட்டு மருத்துவர்களிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  6. தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா

    தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு இராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியதை செய்தார்.உலகப் புகழ்பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, இராஜராஜ சோழனின் பிறந்த நாள் மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படும்.

    இதேபோல் இந்த ஆண்டு 1036 - வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. கொரோனா காரணமாக கோவில் பிரகாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகை திருமுழுக்குகள் நடைபெறுகின்றன. தருமை ஆதீனத்தின் 27வது பட்டம் மாசிலாமணி ஞானிதேசிக சுவாமிகள் இதில் பங்கேற்கிறார்.

    ஆண்டுதோறும் இரண்டு நாள் விழாவாக கொண்டாடப்படும் சதய விழா, இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறுகிறது, மேலும் சதய விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  7. கன்னியாகுமரியில் கன மழை: 15க்கு மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு, பிரபுராவ் ஆனந்தன்

    கன்னியாகுமரி

    பட மூலாதாரம், JACKSON HERBY

    படக்குறிப்பு, கன்னியாகுமரியில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ள மழை நீர்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தோவாளை தாலுகா பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக நெல்லை - நாகர்கோவில் இடையே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மலையோரம் உள்ள இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும நல்லூர், திடல், மண்ணடி போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    மேலும் பழைய ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒழுகினசேரி பகுதியில் இடுப்பளவு வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு இடுகாடு செல்லும் பாதை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் நெசவாளர் காலனி பகுதிகளில் படகு மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஊட்டுவாள் மடம், மீனாட்சி கார்டன் ஒழுகினசேரி வடசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    கனமழை அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஆறுகளில் கடும் வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணைகளில் இருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 4032 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4144 கன அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 804 கன அடி தண்ணீரும், சிற்றாறு இரண்டு அணையில் இருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    மழை வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக தாமிரபரணி ஆறு,பழையாறு,பரளியாற்று பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    திற்பரப்பு அருவியில் மழைநீர் மற்றும் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்ததின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கல் மண்டபத்தைத் பாதி அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பரளியாற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கரை பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ரயில்கள் ரத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரணியல் பகுதியில் இரட்டைக்கரை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால்மங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், உள்ளிட்ட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று காலை நாகர்கோவிலில் நிறுத்தபட்டு உள்ளன.

    மாவட்டம் முழுவதும் கால்வாய்கள் குளங்கள் உடைந்து தண்டவாளங்கள் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    கன்னியாகுமரி மழை

    பட மூலாதாரம், JACKSON HERBY

    கன்னியாகுமரி கன மழை

    பட மூலாதாரம், JACKSON HERBY

  8. கடலூரில் நிவாரண உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கடலூர் மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினார். வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்தது. இதனால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் உள்ள மழை சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயணம்‌ மேற்கொள்கிறார். இதன் பகுதியாக அவர் கடலூர் வந்தார். கடலூர் மாவட்டத்தில் 2000 ஹெக்டேருக்கும்‌ அதிகமான விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டறிந்தார் முதல்வர். இதையடுத்து தண்ணீா் சூழந்து சேதமடைந்த வீடுகளை முதல்வர் பார்வையிட்டார். குறிஞ்சிப்பாடி‌ பகுதியில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த பிறகு, மழையால் வீடு சேதம் அடைந்ததாலும், கால்நடை இறந்ததாலும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண‌ உதவித் தொகையை வழங்கினார்.18 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும் வழங்கிய முதல்வர், அடுத்தகட்டமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய புறப்பட்டார்.

  9. பிரான்சின் எலீசே அரண்மனை பெண் ராணுவ வீரருக்கு பாலியல் துன்புறுத்தலா?

    எலீசே மாளிகை

    பட மூலாதாரம், Getty Images

    பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகையான எலீசே அரண்மனையில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர், கடந்த ஜூலை மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. பாரீஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகையி பணிபுரியும் பெண் ராணுவ வீரரை துன்புறுத்தியதும் ஒரு ராணுவ வீரர்தான் எனவும், அது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மீது முறையாக வழக்கு தொடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான செய்தியை லிபரேஷன் என்கிற செய்தித்தாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மற்றும் துன்புறுத்தியவர் இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் எனவும், அவர்கள் இருவரும் அதிஉயர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.இப்பிரச்சனை தொடர்பான விவரங்கள் கிடைத்த பின், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார். குற்றம் சுமத்தப்பட்டவர் மற்றும் பாதிப்புக்கு ஆளான பெண் இருவரும் வெவ்வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை கூறியுள்ளது.

  10. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.